Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
DTCP அப்ரூவல் என்றால் என்ன?
நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாகமாற்றுதல் (Conversion), அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுதல்போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்புஇயக்கம்
(Directorate of Town and Country Planning – DTCP)அனுமதி தேவைப்படும்.
இது சென்னை பெருநகர்வளர்ச்சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத் திலிருந்து வேறுபடுகிறது.
சி.எம்.டி.ஏ. (CMDA) உடைய அதிகார வரம்புஎன்பது சென்னை மற்றும் அதன்அருகாமையில் உள்ளபகுதிகள் வரை வரும்.
டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின்அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது.
எனவே டீ.டி.சி.பி.அப்ரூவ லுக்கு இங்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது.அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி. அனுமதியே மிக மிக முக்கியமானது.
அப்ரூவல் வாங்க வேண்டியபகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந்த நிலம்எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின்டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை.
இது தவிர,லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
இதில் லே-அவுட் ஒரு கிராமப் பகுதியில் இருந்தால், அந்தக்கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று அவர்களிடம் நமது லே-அவுட் பிளானை சமர்பிக்கவேண்டும்.
அவர்கள் அதை சரி பார்த்துவிட்டு, மாவட்டடீ.டி.சி.பி. அலுவலகத்துக்கு அந்த பிளானை அனுப்பிவைப்பார்கள்.
டீ.டி.சி.பி. அதிகாரிகள், லே-அவுட் பிளானைபல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பிறகு அதற்கு அனுமதிகொடுப்பார்கள்.
சில சமயங்களில் அவர்களே ஒருபிளானையும் தயாரித்துக் கொடுக்கலாம்.
முக்கியமான விஷயம் என்னவென்றால்
அதில் அவர்கள் சாலை, பூங்கா, பொது இடம் என்று பிரித்து இருப்பார்கள்.முக்கியமான விஷயம் என்னவென்றால்
அதைத்தான் லே- அவுட் புரமோட்டர் அல்லது உரிமையாளர் பின்பற்ற வேண்டும்.
பின்பற்றுவதோடுமட்டு மல்லாமல், அதில் வேறு எந்த மாற்றமும் செய்யக்கூடாது.
அந்த பிளானில் உள்ளபடியே பிளாட் (Plot)களைவிற்கவே விளம்பரம் செய்யவோ வேண்டும்.
24 செண்டுக்கு குறைவான நிலப்பகுதிக்கு கிராமப்பஞ்சாயத்தின் அனுமதியே போதுமானது (1 செண்ட்=435.6சதுர அடிகள்). அந்த 24 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியைதனியாக வாங்கவோ அதில்கட்டடம் கட்டவோ பஞ்சாயத்துஅனுமதி தேவைப்படும்.
24 செண்ட் அளவுக்குமேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் அப்ரூவல்மட்டுமல்லாது, வேறு எந்தவிதமான திட்டங்களுக்கும்அனுமதி வழங்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே கிடையாது.
அவை அனைத்துமே டீ.டி.சி.பி. உடையகட்டுப்பாட்டின்கீழ் வரும். எனவே,
பஞ்சாயத்து அனுமதியை மட்டுமே நம்பி ஒரு நிலப் பகுதியைவாங்குவது நல்ல விசயம் அல்ல.
விவசாய நிலத்தை மட்டுமல்லாது, உற்பத்தி /தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களைகுடியிருப்பு பகுதிகளாக மாற்றவும் டீ.டி.சி.பி. அனுமதிதேவை.
சான்றாக, தொழிற்சாலை வளர்ச்சிக்குஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்றதிட்டமிட்டால் அதற்கு, நிலத்தின் வரைப்படம் (TOPO Plan),நிலப் பத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து டீ.டி.சி.பி.அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விவசாய நிலம் குடியிருப்பு நிலமாக மாற்றிய பிறகு...
இதுதவிர,குடியிருப்பு பகுதியாக மாற்றிய பிறகு, அந்த நிலத்தை எந்த விசயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவித்து விட வேண்டும்.
டீ.டி.சி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆராய்வார்கள். பிறகு, இந்த நிலத்தைப் பற்றிய தகவல்களையும், அதற்கு மக்களின் ஆட்சேபணைகளையும் கேட்டறிய 2 நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுவார்கள்.
எந்த ஆட்சேபணை யும் வரவில்லை என்றால், உடனடியாக Zone Conversion னுக்கு அனுமதி கொடுப்பார்கள்.
நான்கு மாடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்கள் அனைத்துமே அடுக்குமாடிக் கட்டிடங் களாகக்கருதப்படுகின்றன.
இதில் கட்டப்படுகின்ற கட்டிடத்தின்அருகே உள்ள சாலையின் அகலம், நிலத்தின் அகலம்,ஃபுளோர் சைஸ் இண்டெக்ஸ் (Floor size index), கட்டிடத்தின்அகலம் போன்ற எண்ணற்ற நடைமுறைகள் உள்ளன.
இவற்றில் ஒன்று ஒத்து வரவில்லை என்றாலும்அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்படாது.
சான்றாக, 10 மாடிக் கட்டிடம் என்றால், அருகே உள்ளசாலையின் அகலம் குறைந்த பட்சம் 80 அடியும், கட்டிடம்கட்டப்படும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டரும் இருக்கவேண்டும்.
முக்கிய குறிப்பு
மேலே குறிப்பிட்ட விஷயங்கள் இதில் சிறிது குறைந்தாலும் பிளானுக்கு அரசு அனுமதி மறுக்கப்படும்.
கருத்துகள்