Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan இந்துக்கள் இயல்பிலேயே தேசபக்தர்கள் என்கிறார் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத். இந்து ஆன்டி-இந்தியனா இருக்க முடியாது என்கிறார். கிமு 326 இல் இந்தியா என்ற ஒரு நாடு உருவாகவில்லை. இருந்தாலும் நாட்டுக்குள் அலெக்சாண்டர் ஊடுருவ சிந்து நதியின் மீது பாலம் அமைக்க உதவிய தட்சசீல மன்னன் ஆம்பி யார்? கிபி 1192 இல் தனது மகள் பிருத்விராஜ் சவுகானுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாள் என்பதற்காக பிருதிவிராஜ் சவுகானை கோரி முகமதுவிடம் காட்டிக்கொடுத்த ராஜா ஜெயச்சந்திரன் கதை மோகன் பகவத்துக்கு தெரியாதா? இன்றும் வடநாட்டில் ஜெயச்சந்திரன் என்றால், நமது ஊரில் எட்டப்பன் என்றால் என்ன பொருளோ அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ராஜா ஜெயச்சந்திரன் இந்து இல்லையா? 1857 சிப்பாய் கலக காலத்திற்கு வருவோம். ஜான்சி ராணியை காட்டிக்கொடுத்த குவாலியர் மகாராஜா ஜெயஜிராவ் சிந்தியா இந்து இல்லையா? சோட்டா ராஜன், விஜய் மல்லையா, நிரவ் மோடி, லலித் மோடி இவர்களெல்லாம் யார்? இந்துக்கள் தானே? இவர்களை தேசபக்தர்கள் என்று சொல்ல முடியுமா? நமக்கு மேற்கில் இருக்கும் அண்டை நாட்டுடன் தீரமாக போரிட்டு...