முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நட்பு எப்படி உடைகிறது காரணங்கள்...?

Subbiahpatturajan


www.cinar619.blogspot.com
CinarTamilan




*நட்பு*
                  எப்படி உடைகிறது
                       காரணங்கள்.

*இரண்டு நண்பர்களில் ஒருவர்*, *மற்றொருவர் வேலைப்பளுவில் (பிசியாக) இருக்கிறார் என்று நினைக்கலாம்.* 
*எனவே அவரை தொடர்பு கொண்டு பேசினால் அது அவருக்கு தொந்தரவாக இருக்கும் என்று நினைத்து தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம்.* 
 
*காலம் செல்லசெல்ல* *"நாம் ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்*.. 

*அவர் நம்மை தொடர்பு கொள்ளட்டுமே" என்ற சிந்தனை உருவாகும்.* 
*மேலும் சிறிது காலம் செல்லும்போது இது மற்றொரு விதத்தில் தீவிரப்படும்.* 
 
*அதாவது, அவர் நம்மை முதலில் தொடர்பு கொள்ளட்டும்* 
 
*பிறகு நாம் பேசுவோம் என்று நினைப்பு இருவரின் மனதிலும் பரஸ்பரம் தோன்றும்.*  

*இங்கு என்ன ஆகிறது? நட்பால் விளைந்த அன்பு வெறுப்பாக மாறுகிறது*. 
*இறுதியில் அவ்விரு நண்பர்களுக்குள் தொடர்பு இல்லாமல் போனதால்*, *நட்பால் விளைந்திருந்த பசுமை நினைவுகள் மறந்து போகிறது.* 
 
*ஒருவர் மற்றொருவரை மறந்து போகிறார்.* 
*எனவே நட்பு தொடர்ந்து நீடிக்க* *அடிக்கடி நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்.*  

*நட்பு சிறக்க பத்து பொன் விதிகள்*: 
 
1 . *நட்பு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க சோதனை ஏதும் வைக்காதீர்கள்.* 
 
2 . *மேலும் நண்பரிடம் உதவி ஏதும் கேட்க நினைத்தால் அவரின் நிலை அறிந்து கேளுங்கள்.* 
 
3. *நண்பரே குறிப்பறிந்து உதவி செய்தால் அதற்கு நன்றி தெரிவியுங்கள்.*  

4. *ஆனால் அதே நேரத்தில் நாம்தான் அவருக்கு உதவி செய்திருக்கிறோமே என்று அவரிடமிருந்து பிரதி உதவி எதிர்பார்க்காதீர்கள்*. 
 
5. *நண்பர் உதவவில்லையானால் "* *அவருக்கு என்ன சூழ்நிலையோ*, 
*கஷ்டமோ தெரியவில்லை?*" *என்று நினைக்கப் பழகுங்கள்.* 
 
6. *உதவ முடியாத நிலைக்கு நண்பர் வருத்தம் தெரிவித்தால், அதை ஏற்றுக்கொண்டு பழையபடி நட்பை தொடருங்கள்.*  

7. *நண்பருக்கு கஷ்டம், துன்பம் என்று கேள்விப்பட்டால் அதை அறிந்து முடிந்த உதவி செய்யுங்கள். பக்கத்துணையாக நில்லுங்கள்.* 
*நல் ஆலோசனை நல்குங்கள்.* 
 
8 . *நண்பர் தன் கஷ்டத்தை முதலில் சொல்லட்டும், பிறகு உதவி செய்யலாம் என்று இருப்பது நட்புக்கு நன்று அல்ல*.  

9 . *அதே போன்று நண்பர்களிடம் சோகத்தை பகிர்ந்து கொண்டால் அது பாதியாகும்.* 
 
10 . *அவ்வாறே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது இரட்டிப்பாகும்.*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...