முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்துக்கள் இயல்பிலேயே தேசபக்தர்களா...?

Subbiahpatturajan




இந்துக்கள் இயல்பிலேயே தேசபக்தர்கள் என்கிறார் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத். இந்து ஆன்டி-இந்தியனா இருக்க முடியாது என்கிறார்.
கிமு 326 இல் இந்தியா என்ற ஒரு நாடு உருவாகவில்லை. இருந்தாலும் நாட்டுக்குள் அலெக்சாண்டர் ஊடுருவ சிந்து நதியின் மீது பாலம் அமைக்க உதவிய தட்சசீல மன்னன் ஆம்பி யார்?
 
கிபி 1192 இல் தனது மகள்  பிருத்விராஜ் சவுகானுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாள் என்பதற்காக பிருதிவிராஜ் சவுகானை கோரி முகமதுவிடம் காட்டிக்கொடுத்த ராஜா ஜெயச்சந்திரன் கதை மோகன் பகவத்துக்கு தெரியாதா? 

இன்றும் வடநாட்டில் ஜெயச்சந்திரன் என்றால்,  நமது ஊரில் எட்டப்பன் என்றால் என்ன பொருளோ அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ராஜா ஜெயச்சந்திரன் இந்து இல்லையா?

1857 சிப்பாய் கலக காலத்திற்கு வருவோம். ஜான்சி ராணியை காட்டிக்கொடுத்த குவாலியர் மகாராஜா ஜெயஜிராவ் சிந்தியா இந்து இல்லையா? 

சோட்டா ராஜன், விஜய் மல்லையா, நிரவ் மோடி, லலித் மோடி இவர்களெல்லாம் யார்? இந்துக்கள் தானே? இவர்களை தேசபக்தர்கள் என்று சொல்ல முடியுமா? 

நமக்கு மேற்கில் இருக்கும் அண்டை நாட்டுடன் தீரமாக போரிட்டு இந்தியாவின்  உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருதை 1965 இல் பெற்ற ஹவில்தார் அப்துல் ஹமீது உங்கள் நினைவுக்கு வரவில்லையா? 
மரணத்திற்கு பின் மகாவீர் சக்ரா விருதை  1947 இல் பெற்ற பிரிகேடியர் முகம்மது உஸ்தானும் , 1965 இல் பெற்ற லெப்டினன்ட் கர்னல் சலீம் சலெப்பும் உங்கள் நினைவுக்கு வரவில்லையா?
 
1971 பாகிஸ்தான் போர் வெற்றியை சிறப்பாக கொண்டாடும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு அப்போதைய இராணுவத் தளபதி ஒரு பார்சி என்பது தெரியாதா? 
1965 போர் கதாநாயகனாக கொண்டாடப்பட்டவர் ஒரு சீக்கியர் என்று தெரியாதா? 

1971 இல் டாக்காவில் பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் AAK நியாஜி அய் சரணடையச் செய்தவர் ஒரு யூதர் என்பது தெரியாதா? 

இந்துக்கள் இயல்பாகவே தேசபக்தர்கள் என்பதும் மற்றவர்கள் அப்படி இல்லை என்பதும் உண்மை இல்லை என்பது மட்டுமல்ல அது ஒரு கெட்டபுத்தி.
 
இப்படிச் சொல்வது மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்து மக்கள் மனதில் சக இந்தியர்கள் மேல் சந்தேகத்தையும் நம்பிக்கை இன்மையையும் வளர்க்கும் செயல்.

இந்திய நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுத்து இங்கிலாந்து கனடா அமெரிக்கா போன்ற நாடுகளின் குடியுரிமையை பெருமையாக வாங்கி வைத்திருக்கும் லட்சக் கணக்கான இந்துக்கள் பற்றி மோகன் பகவத் என்ன நினைக்கிறார்? 

இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் நமது மொழியையும் மறந்துவிடுகிறார்கள். எந்த நாட்டில் பிறந்தார்களோ, எந்த நாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கிறார்களோ அந்த நாட்டின் மீது அன்பு செலுத்துகிறார்கள்.
 
மோகன் பகவத் சொல்கிறார் ஒருவர் ஒரு நாட்டை நேசித்தால், அது அந்த நிலப்பரப்பை நேசிப்பது அல்ல அங்குள்ள மக்களை நேசிப்பது, நதிகளை நேசிப்பது, கலாச்சாரத்தை நேசிப்பது, பண்பாட்டை நேசிப்பது. 
இதை சரியென்று எடுத்துக் கொண்டாலும் இது இந்துக்களுக்கு மட்டும் பொருந்தாது, இந்த நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும்.
இதுவே பிரெஞ்சுக் காரர்களுக்கும், ஜெர்மானியர்களுக்கும், நைஜீரியர்களுக்கும் பொருந்தும். 
நமது நாடு உயிர்ப்புடன் வளர வேண்டுமென்றால், தேசபக்தி இந்துக்களுக்கான பண்பு என்று சொல்லக்கூடாது. அவர்களை சிறப்பு குடிமக்களாக கருதக்கூடாது.
 
இந்த நாட்டில் பிறந்த அனைவரும் ஜாதி மத பேதமற்று இந்தியர்கள் என்று ஒற்றுமையாக வாழவேண்டும். இல்லையென்றால் நமக்கும் யுக்கோஸ்லேவியாவிற்கு ஏற்ப்பட்ட நிலைமை உண்டாகும்.



 
------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...