முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வந்த ரயில் திருட்டு ரயில் இல்லை... வந்தவன் தான் திருடன் யார் அவன்...?

Subbiahpatturajan


மறந்து போவது மக்களின் இயல்பு அடிக்கடி அதை நினைவு படுத்துவது 
நமது கடமையும் கூட.!!

1968களில் #கருணாநிதி வாழ்வில் 
நடந்த உண்மை சம்பவம்...
இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

யார் இந்த கருணாநிதி.??

அப்போது முதன் முறையாக முதல்வர் பதவியில் கருணாநிதி அமர்ந்த நேரம்... பல தலைமுறைக்கும் தான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த நேரம் அது.
அதே காலகட்டத்தில் தான் 
‘#ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் 
வெளி வந்து கொண்டிருந்தது! 
அதன் ஆசிரியர் வேறு யாருமல்ல.. 
கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த "என்.கே.டி. #சுப்பிரமணியம்" என்பவர் தான்.
அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், (ஜனவரி5, 1968) சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 
மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
யார் இந்த கருணாநிதி?என்ற ஒரு 
பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.
அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப் பட வைத்து விட்டது. முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது.
அரசியலில் நேர்மை, தூய்மை, அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் கொண்டிருந்தவர் அல்லவா??
‘’ராசாத்தி..தர்மாம்பாள்” யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’ என்று கூறி பரபரக்க வைத்தார்.
இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தி அல்லவா??.. விட்டுவிடக்கூடாது… என்று நீதிமன்றத்துக்கும் போனார்…
பெண் குழந்தை, மகள் என்று யாருமே எனக்கு தெரியாது. கனிமொழி என்ற பெயரில் பிறந்திருக்கும் குழந்தை எனக்கு பிறந்ததல்ல என்றார்..
பிறகு நடந்தது என்ன என்பது அன்றைய மூத்த தி.மு.கவினருக்கே தெரியும். 
செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க, 
அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக 6 மாத சிறை தண்டனைக்கு உள்ளானார் பத்திரிகை ஆசிரியர்..
அதுமட்டுமா?
அந்த பத்திரிகையையே, இழுத்து மூட வைத்து விட்டனர்.. பின்னர் விடுதலையான பத்திரிகையாளர் என்ன ஆனார் என்றே தெரியாது... 
அவரது குடும்பத்தினர் பற்றிய எந்த செய்தியும் கூட கிடைக்கவில்லை...
அதேபோலத்தான்..

கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியமறுநாளில்,.. அண்ணாமலை பல்கலை கழக கல்லூரிமாணவன் ஒருவன் அனாதை பிணமாக ரோட்டில் கிடந்தான்.. 

முந்தையநாள் கல்லூரி பட்டமளிக்கும் விழாவின்போது "கருணாநிதிக்கு டாக்டர் பட்டமா"?என்ற கேள்வியை கேட்டான் 
அந்த பல்கலை கழக கல்லூரி மாணவன்... 
விசாரணையின் போது அவனது 
பெற்றோரே, இவன் எங்கள் மகனல்ல 
என்று சொன்னார்கள்...

வழக்கும் மூடப்பட்டது...

ஒருவேளை அவனை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி பலகலைகழகம் வரை படிக்க வைத்தவர்கள், எங்கள் மகன் தான் இவன் என்று சொல்லியிருந்தால், அந்த குடும்பம் முழுவதுமே அழிக்கப் பட்டிருக்கலாம்...
ஆனால் இப்போதோ...
தன்னுடைய மகளே இல்லை என்று சொன்ன கனிமொழிக்காக சமீப காலம் முன்புவரை அழுது துடித்தார். 
'ஒரு பூவை வைத்தாலும்கூட வாடிவிடும் அத்தகைய கொடுமையான அனலில் என் மகள் வாடுகிறாள்' என கண்ணீர் வடித்தார்.
திகார் ஜெயிலில் இருந்த தன் மகளை ஜாமீனில் மீட்க, குடும்பத்துடன் சோனியா காந்தி வீட்டு வாசலில் போய் நின்றார்.
அன்று கனிமொழி கருணாநிதியின் மகள்தான் என சொன்ன பத்திரிக்கை
யாளருக்கு ஆறு மாத ஜெயில் தண்டனை…
திராவிடம், ஒழுக்கம், பத்திரிகை சுதந்திரம், சமதர்மம், மனிதநேயம் பற்றி வாய்கிழிய பேசும் கருணாநிதி..
தற்போது பத்திரிக்கை சுதந்திரத்
திற்காக கண்ணீர் வடிக்கிறார்.
நீங்களெல்லாம் பத்திரிக்கை சுதந்திரத்தை பற்றி பேசலாமா திராவிட வேஷ தலைவரே?
திராவிடத்தால் தான் நீங்கள் பாதுகாக்க பட்டீர்கள் என்பதா? இல்லை திராவிடத்தால் தமிழர்கள் இழந்தோம் என்று நொந்து கொள்வதா?
உங்களை முதல்வர் அரியணையில் அமரவைத்த தமிழ் மக்களை ஏமாற்றியது மட்டுமல்லாமல், அநீதியாக, பொய் சொல்லி, பத்திரிக்கையாளருக்கு சிறை தண்டனை வாங்கிக் கொடுத்த உங்களுக்கு,

யார் தண்டனை கொடுப்பது?

இன்று நீங்கள் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்கள் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய தண்டனை. ...
இப்போது கூட அவர்களின் வாரிசுகள் தான் விடியல் ஆட்சி என்கிற பெயரில்
ஆட்சி செய்து வருகின்றனர் இவர்கள் இருவருக்கும் வரை ஒரு போதும் தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம் வரப்போவது இல்லை மக்களே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...