முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு கல்யாணமா இதைப் படியுங்கள்...!!!

Subbiahpatturajan




🌼🌺🥀🌷🙏

#திருமணம்_என்பது??
""""""""""""""""""""""""""""""""""""""""""
👭🏻35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 100க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்

👭🏻30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.

👭🏻காரணம் எதிர்பார்ப்பு அதிகரித்ததே
அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து விவசாய தோட்டம் ஒருசில ஏக்கர் இருக்க வேண்டும்.

👭🏻அவரே Post graduate degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.

👭🏻குறைந்தது 75,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.

👭🏻பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கேற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுயதொழில் செய்து வருகின்றனர். சுயதொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்துகொள்ள பெண்களும் அவர் வீட்டாரும் விரும்புவதில்லை

👭🏻வீட்டுக்கு ஒரே பையனாக இருந்தால் நல்லது தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் #விஜய், #அஜித், #சூர்யா போல் இருக்க வேண்டும்.

👭🏻ஆண்களின் எதிர்பார்ப்பு
பெண்ணின் தந்தை செல்வந்தராக இருக்க வேண்டும் பெண் பெயரில் நிறைய சொத்தும்  சம்பாதிப்பவளாக வும்
இருக்க வேண்டும்,எல்லாவகையிலும் ஆணை அனுசரித்து நடக்கவேண்டும்
இறுதியாக பெண் நயன்தாரா,
அனுஷ்கா,
தமன்னா போலிருக்க வேண்டும்.

👭🏻1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துதான் திருமணம் செய்வேன் என்று எண்ணி இருந்தால் இந்த தலைமுறையே  இருக்காது.

👭🏻இதன் விளைவுகள்  திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிக அளவில் இருப்பது.

👭🏻ஒரு வகையில் ஜாதகமும் திருமணத்திற்கு தடங்கலாக இருக்கிறது.

மேலும் சில தகவல்கள்.........

👭🏻1960 முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலர் 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் சர்வ சாதாரணமாக பெற்றுக்கொண்டார்கள்.

1980க்கு பின்5 80விழுக்காடு இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக்கொண்டனர். 
எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு.

👭🏻2000க்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறிவிட்டது.

ஆனால், 2010க்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை. என்ற நிலையில் உள்ளோம்.

👭🏻இதற்கு அறிவியல் ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்..

👭🏻1960 வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20ல் திருமணம்
உணவு: ராகி, கம்பு, சோளம்.

👭🏻1975க்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22. 
உணவு: அரிசி

👭🏻1992க்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25
உணவு: பட்டை தீட்டப்பட்ட அரிசி.

👭🏻2000க்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30க்குள்..
உணவு: துரித உணவு.

👭🏻2010க்கு மேல்
மைதா மாவில் தயாரித்த உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடு
தரம் குறைந்த எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் உட்கொண்டதன் விளைவால் மலட்டுத்தன்மை மற்றும் நோயின் தாக்கம் அதிகரித்தது.

👭🏻இந்நிலையில் பெண்கள் 28வயதுக்கு  மேல் 35 வயது வரையிலும் ஆண்கள்
30 வயது முதல் 40 வயது வரையிலும்
திருமணம் ஆகாமல்  அதிகளவில் இருக்கிறார்கள்.

👭🏻வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்.

👭🏻திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம் புகழ் பெற்ற மனிதர்கள் ஏராளம். 
முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து திருமணம் 
முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் அதிகம்.

👭🏻எனவே, வரும்காலம் இப்படிதான் இருக்கும் என்று தீர்மானம் செய்யாமல், நல்லதை மட்டும் நினைத்து மனங்கள் பிடித்தால் மணம் செய்யுங்கள்.

👭🏻 குடும்பம் மிக முக்கியமானது
அதற்கு பணம் தேவைதான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை.

👭🏻கல்வியறிவு, ஒழுக்கம், நல்லகுணம், சுறுசுறுப்பு, உழைக்கும் எண்ணம் உள்ள ஆணா, பெண்ணா 
என கண்டறிந்து மண முடியுங்கள்...
வாழ்க்கை இனிமையாகும்.! 😍

#படித்ததில்_பிடித்தது

🌷🎉🌺🌷💐🌸🌼🌻🎊🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...