முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

New bikes வாங்குவோர் கவனத்திற்கு...!!?

Subbiahpatturajan




கவனம் நண்பர்களே,,,                 
சமீபத்தில் எனது உறவினர் புதிதாக இரு சக்கர வாகனத்தை மதுரையில் உள்ள ஒரு ஷோரூமில் வாங்கியிருந்தார், 

நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு அதன் விலை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது அவர் ஆன் ரோடு விலை Rs.58500/- ஆகி விட்டது என கூறி பையில் இருந்த invoice யை காட்டினார்...

அதில் வண்டியின் அடக்க விலை வரி உட்பட ரூ 41000/- என போட்டு இருந்தது..

மீதம் ரூ 17500/ க்கு கணக்கு கேட்டேன்...அவர் 8700/ ரூபாய் இன்சூரன்ஸ் எனவும், சாலை வரி 6800/- எனவும் மீதம் extra fitting க்காக எனவும் சொன்னார்....

நான் உடனடியாக RTO அலுவலகம் அழைத்து புதிய வாகன பதிவு பற்றி விசாரித்தேன், 

அவர்கள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது...அதாவது நாமே நேரடியாக வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம் 

அதற்கான சாலை வரி மற்றும் பதிவு தொகையை ஆன்லைனில் செலுத்த முடியும் 

மேலும் அந்த தொகை வாகனத்தின் இன்வோய்ஸ் தொகையில் வெறும் 8 சதம்வீதம் செலுத்தினால் போதும். 

மேலும் பதிவு தொகை வெறும் 300 ரூபாய் மட்டும் தான் என்பதை அறிந்தோம்...

அடுத்த படியாக இன்சூரன்ஸ் பற்றி நண்பர்களிடம் விசாரித்தோம் அவர்கள் சொன்னதும் வியப்பாக இருந்தது...

அதாவது நாம் வாகனம் வாங்கும் போது நம்மை ஷோரூமில் இருக்கும் விற்பனை பிரதிநிதிகள் அவர்களிடம் tie-up யில் இருக்கும் இன்சூரன்ஸ் கம்பெனியை வலுக்கட்டாயமாக பரிந்துரைத்து அதிக பணத்தை பெற்று வருவதும், 

அதே காப்பீட்டு திட்டத்தை குறைந்த விலையில் பிற நிறுவனங்கள் கொடுப்பதையும் அறிந்தோம்....

இந்த பகல் கொள்ளையை தடுக்கும் பொருட்டு புதிய வாகனம் வாங்கிய அந்த உறவினரையும் அழைத்துக்கொண்டு நேராக அந்த இரு சக்கர விற்பனை மையத்தை அடைந்தோம்...

அங்கிருந்த விற்பனை மேலாளரிடம் மேற்படி அதிக தொகை வசூலித்த விபரத்தை தெரிவித்து, அதனை திரும்ப தர கூறினோம்...அவரும் rules எல்லாம் சொல்லி பார்த்தார்...பிறகு நாங்கள் அங்கு நடக்கும் insurance முறைகேடு RTO பதிவிற்கு அதிக தொகை வசூலிக்கும் அந்த நிறுவனத்தின் மீது எடுக்க போகும்   நடவடிக்கை பற்றி இதமாக தெரிவித்து விட்டு அலுவலகம் வந்துவிட்டோம்....

அரைமணி நேரத்தில் அந்த  மேலாளர் தொலை பேசியில் எனது எண்ணிற்கு அழைத்து வருத்தம் தெரிவித்ததுடன் அதிக படியாக பெற்ற ரூபாய் 6800/- பெற்று செல்லுமாறு கூறினார்...

பணம் திரும்ப கிடைத்தது எனது உறவினருக்கு மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது...
இது அனைத்து இடங்களிலும் நடக்கிறது...யாரும் கண்டு கொள்வதில்லை.. புதிய வாகனம் வாங்கும் பரவசத்தில் அல்லது எப்படி முறையிடுவது என்ற பயத்தில் கடந்து விடுகிறோம்....

இதை படிக்கும் அனைவரும் நமது நண்பர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...