முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல வருடங்களாக தமிழ்நாட்டில் வசித்து வரும் எங்களை சில வருடங்களாக இவ்வாறு கையாள்வது மிகவும் மன வேதனையை

Subbiahpatturajan
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள்

தமிழ்நாட்டில்ஈழத்தமிழர்நில

திருச்சி சிறப்பு முகாம் என்னும் வதை முகாமில் உள்ள ஈழத் தமிழர்களின் குமுறல்...   

  தமிழகத்தில் மற்றுமோர் முள்வேலி..... இங்கு அடைக்கப்பட்டுள்ள ஈழத்துப் பறவைகள் பறந்து அவர் அவர் உறவுகளோடு இன்னைந்து பயணிக்க உலகத் தமிழர்கள் ஆதரவுக்கரம் நீட்டி நிற்கின்றோம்...  

  ஈழத்தில் சிங்கள இனவாத அரசால் நிகழ்த்தப்பட்ட உள்நாட்டுப் போரில் உறவுகள் உடமைகள் இழந்து போரின் அழியா நினைவுகளோடு வாழவே வழி தெரியாது எங்கள் உயிரை காப்பாற்றி வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ள எங்கள் உறவுகளிடம் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்து மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுக்கான மறுக்கப்பட்டு உரிமைகளும் சுதந்திரங்களும் மறுபடியும்  சிறப்பு முகாம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி வதைமுகாமில் எங்களை அடைத்து வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குபவர்கள் யார் என்று கூட தெரியாது எமக்கு பொறுப்பானவர்கள் யார் என்றும் இனங்காண முடியாது தவித்து வருகிறோம்.

இந்த COVID-19 காலத்தில் முறையான சுகாதார வசதிகளும் மருத்துவ வசதிகளும் ஏதும் இல்லாது 60க்கும் மேற்பட்டோர் இந்நோயினால் பாதிக்கப்பட்ட போதிலும். தற்போது அதன் தாக்கத்திலிருந்து மீள முடியாது எமது உடல் நலிவடைந்த போதிலும் எம்மை மிருகங்களைப் போன்று மனிதாபிமானமின்றி அடைத்து வைத்திருப்பதும். குடும்பங்களிடம் இருந்து எம்மை பிரித்து வைத்திருப்பதும். மன வேதனையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

வாழ்வாதாரத்தை தேடி வெளிநாடு செல்ல முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் முறையான நீதிமன்ற விசாரணைக்கு பின் ஜாமினில் வெளிவந்த எங்களை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்திற்கு தெரியாது,நீதிமன்ற நடவடிக்கை ஏதும் இன்றி எமது குடும்பங்களை பிரிந்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம்.

பல வருடங்களாக தமிழ்நாட்டில் வசித்து வரும் எங்களை சில வருடங்களாக இவ்வாறு கையாள்வது மிகவும் மன வேதனையை அளிப்பதோடு குடும்பத் தலைவர்கள் ஆகிய எங்களை இங்கே காலவரயின்றி அடைத்து  வைத்திருப்பதால் எமது குடும்பங்கள் அன்றாடம் பல இன்னல்களை எதிர் நோக்குகின்றனர்.

கடந்த காலங்களில் எமது கோரிக்கைகளை முன்வைத்து பல கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்திய போது எங்கள் மீது பொய் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. நமது குறைகளை உயரதிகாரிகள் கேட்பதும் இல்லை அதற்கான தீர்வுகளை தர முன்வருவது இல்லை.எனவே வேறு வழியின்றி உலகத் தமிழ் மக்கள் முன்னிலையில் மண்டியிட்டு கேட்டுக்கொள்கின்றோம் எமக்காக குரல் கொடுத்து எம்மை எமது குடும்பங்களின் இன்னக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 😭😭😭😭😭😭😭😭😭😭


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...