முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இப்படியொரு காட்சியை எங்கள் ஊர் முன்னோர்கள் யாரும் கண்டு இருக்க வாய்ப்பே இல்லை..

Subbiahpatturajan
https://www.cinartamilan.com/2021/05/blog-post_19.html

#வற்றாதஜீவநாடி #Thamirabarani




இந்த புகைப்படங்களை பார்த்ததில் இருந்து என் நெஞ்சில்  ஏதோ ஒரு
இனம்புரியாத வலி உண்டாகி கொண்டு இருக்கிறது...

முதலில் இந்த புகைப்படம் எந்த ஊர் எந்த இடம் என்று தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆம் இது நெல்லை மாவட்டம்  பாபநாசத்தில் பொதிகைதாயினால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட அமுதசுரபி போன்ற எந்தகாலத்திலும் வற்றாத தாமிரபரணிதாயின் செல்லப்பிள்ளையான அகத்தியர் அருவிதான் இது.

இப்படியொரு காட்சியை எங்கள் ஊர் முன்னோர்கள் யாரும் கண்டு இருக்க வாய்ப்பே இல்லை..

ஆனால்  இப்படியொரு கொடூரசெயலை வனத்துறையினர் அரங்கேற்றி தலைமுறையினரை பார்க்கவைத்து இருக்கிறார்கள். 

ஒவ்வொரு ஊரில் நீர் வற்றிபோய் ஆறுகுளங்கள் சிதிலமடைந்து வரண்டுபோய் தான் அநேகர் பார்த்து இருப்பார்கள்.

‌ஆனால் இங்கே வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணியில் வருடம்முழுவதும் தண்ணீர்கொட்டும் அகத்தியர் அருவியின்
நீர்வழித்தடத்தை மணல் மூட்டைகள் கொண்டு அடைத்து இயற்க்கைத் தாய்
கொடுத்த கொடையை,  பொங்கி பாய்ந்து ஓடியஅகத்தியர் அருவியை வரண்டு போகவைத்திருக்கிறார்கள்.

ஒரு இயற்கையின் அடிச்சுவடை
சத்தம் இல்லாமல் அகற்றப்பார்க்கிறார்கள்.

இந்த அருவியில் ஓடும் தண்ணீரை பார்த்து குளித்து ஆனந்தபட்டவர்கள் அநேகர்,ஆனால் அகத்தியர் அருவியின் இந்த நிலையைகண்டு கண்ணீர்வருகிறது.

https://www.cinartamilan.com/2021/03/blog-post_14.html?m=1

வனத்தை காப்பாற்றுங்கள்..

‌ அருவி என்ற ஒன்று இருந்தால்தானே குளிக்க குதுகலாமாய் மக்கள் வந்து செல்வார்கள் அதனால் அருவியையே அழித்துவிட்டால் எவன் வருவான்  என்று எடுக்கப்பட்ட நாட்டு மிராண்டித்தனமான முடிவு..

‌காட்டுமிராண்டி என்று சொல்ல இவர்கள் தகுதியற்றவர்கள்.
காட்டுமிராண்டிகளுக்கு வனத்தை மதிக்கதெரியும் இயற்கையை போற்றத்தெரியும். இவர்கள் அப்படியல்லதானே..

‌ஐயா வனத்துறையினரே காட்டைக்காப்பது உங்கள் கடமைதான்.
அதற்க்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.

‌ உள்ளூர் வாசிகளான எங்களுக்கே தலையணையில் ஆரம்பித்து அகத்தியர் அருவி, கல்யாணதீர்த்தம்,சொரிமுத்து ஐய்யனார்கோயில்,காரையார்,சேர்வலார்,பாணதீர்த்தம், படகுசவாரிவரைக்கும் தடைபோட்டு விட்டீர்கள்...

‌ இதுபோன்ற காடுகளையும் காடு சார்ந்த இடங்களையும் பக்கத்து மாநிலமான கேரளாவில் வனத்துறையினர் எப்படி  சுற்றுலாதுறைக்கும் பாதிப்பு இல்லாமல் உள்ளூர்வாசிகளுக்கும் இடைஞ்சல் இல்லாமல் சட்டதிட்டங்களை ஏற்ப்படுத்தி கையாளுகிறார்கள் என்று பாருங்கள்.

https://www.cinartamilan.com/2021/05/blog-post_19.html

‌  நான் வயநாடு சுற்றுலா சென்றபோது பார்த்தேன்.
உதாரணமாக பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் உள்ளே கொண்டு சென்றால் இருபதுரூபாய் பணத்தை
வனத்துறை வசூலிப்பார்கள்.
மீண்டும் பாட்டிலை திரும்ப கொண்டுவந்தால் வனத்துறையிடம் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி கொள்ளலாம்.

‌ இதுபோல பிளாஸ்டிக் மற்றும் இயற்கையை மாசுப்படுத்தும் பொருட்களோடு உள்ளே செல்ல அனுமதிமறுப்பு என்று சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

‌ கேரளாவில் பயன்படுத்தும் நடைமுறைகளை பின்பற்றி நம்வனத்தையும் இயற்கையையும் காப்பாற்ற முடியாதா..???

‌அரசியல், சாதி, மத இன பாகுபாடு இல்லாமல்
அனைவரும் இந்த கொடுமையை எதிர்க்க வேண்டும்.

‌சிங்கை மக்கள் , மட்டுமல்ல
நெல்லை மக்கள் மட்டுமல்ல,
தமிழக மக்களனைவரும் எதிர்த்து குரல் கொடுத்து,
மீண்டும் அனைவரும் இழந்த அத்தனையையும்
( தலையணை, வாணதீர்த்தம் படகு சவாரி உட்பட  திரும்ப ப்வேண்டும் )

‌எது எப்படியோபோகட்டும் இந்த நிலை மாறட்டும் உள்ளூர் வாசிகளான எங்களின் இரத்தபந்தம் போன்ற இந்த இயற்கையுடனான பந்தத்தை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எங்கள் வாழ்வியலை மீட்டுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் சிதிலமடைந்த அகத்தியர் கோயிலை புனரமைக்க வேண்டும்.

https://www.cinartamilan.com/2021/05/blog-post_19.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...