Subbiahpatturajan நேற்று நான் எனது சொந்த ஊரான திருநெல்வேலியில் இருந்து தாதர் விரைவு வண்டியின் (11022) மூலம் பயணம் செய்தேன். இரவு உணவிற்கு எதுவும் கிடைக்காததால் ரயிலில் இருந்த IRCTC பேன்ட்ரியில் அசைவ உணவை ஆர்டர் செய்தேன். நான் வாங்கிய உணவு சுவையாகவும் சாப்பிடும் அளவுக்கு இருந்தது, எனவே நான் உணவை முழுமையாக ரசித்தேன். சரி இப்போது தான் சுவாரஸ்யமான பகுதி வருகிறது, பேன்ட்ரி பையன் பணம் கேட்டு வந்தபோது, சிக்கன் ரைஸ்க்கு 150 ஆச்சு சார் என்று ரூபாய் கொடுக்கச் சொன்னார். அசைவ சாப்பாடு விலை ரூ.130 என்பது எனக்கு முன்பே தெரியும், மேலும் ரூ.20 கூடுதலாக தரச் சொன்னார்.நான் அவனிடம் விலை விபரத்தை கூறினேன். சரி நான் சாப்பிட்டு சாப்பாட்டிற்கு பில் அடித்து கொண்டு வா என்றேன் அவன் பிடிவாதமாக மிஷின் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி என்னிடம் மழுப்பலான பதில் சொல்ல முதலில் மறுத்த சாப்பாட்டுக்கான பில் தொகையை என்னிடம் வழங்குமாறு பணிவுடன் கேட்டேன். பில் கொடுத்தால் மட்டுமே பணம் தருவேன் அல்லது மேலாளரை தொடர்பு கொள்க...
We will create a better society by sharing good information.