முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தி என்பது ஒரு மொழியின் தகுதி பெற்ற மொழியே அல்ல.

Subbiahpatturajan

ஒரே நாடு ஒரே மொழி என்று கூப்பாடு போட்டு நம்மையும் இந்தி பேசும் மாநில மக்களாக மாற்றப்பார்க்கிறார்கள்

இந்தி என்பது ஒரு மொழியின் தகுதி பெற்ற மொழியே அல்ல.

முட்டாளின் மூளையிலே முன்னூறு பூ மலரும் என்பர்! அது குறைவு எனத் தோன்றுகிறது. மூவாயிரத்துக்கும் அதிகமான பூக்கள் வண்ண வண்ணமாய் மலரும் ஆம்! அதுவும் இந்த முட்டாள் எங்காவது அடித்துப்பிடித்து ஓர் அமைச்சன் ஆகிவிடின் முப்பதினாயிரம் பூக்களானாலும் வியக்க ஒன்றுமில்லை!

'இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை விட்டு போகலாம் "

 அண்மையில் உ.பி.யை சேர்ந்த ஒரு மந்திரி நமக்கு அளிக்கும் விசா! 

இந்தி என்பது ஒரு மொழியின் தகுதி பெற்ற மொழியே கிடையாது என்பதும் பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு மொழிகளின் கலவையால் ஆன குப்பை என்பதும் இந்த குப்பைகளுக்கு யார்தான் எடுத்து சொல்வது? அந்த குப்பை எப்படி சேர்ந்தது என்பதை எப்படித்தான் இவர்களுக்கு புரிய வைப்பது தான் இந்த பதிவின் நோக்கம்.


டில்லியை சுல்தான்கள் கைப்பற்றி நிர்வாகம் செய்ய துவங்கிய போது அவர்கள் #துருக்கி, #அரபி, #பெர்ஷியா ஆகிய இனக்குழுக்
களை சேர்ந்த சிப்பாய்களை இங்கே கொண்டு வந்து படை முகாம்களில் அடைத்தார்கள், இந்த சிப்பாய்கள் புதியதாய் தோன்றிய இஸ்லாம் மதம் சார்ந்தவர்கள், ஆனால் வெவ்வேறு மொழி பேசுவோர்.ஒரு மொழிக்காரருக்கு இன்னொரு மொழி தெரியாது.. இப்படிப்பட்டவர்களை ஒரே முகாமில் அடைத்து வைக்க நேர்ந்தபோது மற்றவருடன் பேச அவரவர் மொழியையே பயன்படுத்த ஒரு கலப்பு ஒலி உருவானது., அந்த கலப்பு ஒலியுடன் அந்த சிப்பாய்கள் டில்லி சந்தைக்கு வந்து கடைக்காரர்களுடன் உரையாடும் போது. சந்தையின் தேவை காரணமாய் அந்த கலப்பு ஒலியை கடைக்காரரும் உள்வாங்க நேர்ந்து அது டில்லியை உலா வந்தது.

உருது மொழி உருவானது 

#இது_என்ன_மொழி? யாருடையது?எனும் கேள்வி இயல்பாய் எழுந்த போது இராணுவ முகாம்காரர்கள் பேசும் மொழி எனும் புரிதலில் டில்லிக்கார வணிகர்கள் அதனை "ஓர்து" என்றார்கள்.
ஓர்து என்றால் மந்தை என்றும் பொருள்.சிப்பாய்களை ஓரிடத்தில் மந்தையாய் அடைத்து வைப்பதால் முகாம் என்பதை இவ்வாறு அவர்கள் இயல்பாகவே அடையாளப் படுத்தினார்கள். காலப்போக்கில் ஓர்து  உருதுவாகத் திரிந்தது.சுல்தான்களின் ஆட்சி நீடித்தவரை டில்லியையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் உருது கைப்பற்றியது.இவ்வாறாக #இந்தியாவுக்கு_தொடர்பற்ற_ஓர்_ஒலிக்கலவை மொழி எனும் தகுதி பெற்றது.

பின்னர் மொகலாயர்கள் வந்தார்கள். ஆட்சிப் பரப்பு விரிவடைந்தது. ஆட்சிப்பரப்பு விரிவடையும் போது படைபலமும் அதிகமாகும் தானே! இவ்விதம் அதிகமான படையில் டில்லியை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்களில் இருந்து சிப்பாய்கள் மந்தைக்குள் நுழைந்தபோது அவர்களின் மொழியும் உருதுவுடன் கலந்தது.நிர்வாக மொழியும் நீதி மொழியும் உருதுவாக மாறியது.
தாசில்தார், தாலுக்தார், சுபேதார், கரேதார், சிரசுதார் போன்ற அரசாங்கப்பணிகள் உருவாகின. கல்வி மறுக்கப்பட்டோர் மந்தைகளில் முடங்க கல்விகற்ற சீமான்கள் நிர்வாக நீதி மன்ற பொறுப்புகளை கைப்பற்றினார்கள். பேரரசு விரிவடைந்ததற்கு ஏற்ப இன்னும் பல்வேறு லோக்கல் மொழிகள் இணைந்தன. முகலாய சாம்ராஜ்ஜியம் ஹிந்துஸ்தானம் முழுதும் பரவிய நிலையில் அதற்கு ஆப்பு வைத்து வெள்ளைக்காரன் வந்தான்.
ஆங்கிலத்தில் நிர்வாகம் செய்தவனுக்கு உதவி புரிய துபாஷிகள் தோன்றினர்..சமூகத்தின் மேல்மட்ட கனவான்களான இவர்கள் முகலாயர்களின் உருதுவை தங்களுடையது என்று சொல்லிக் கொள்ள கூச்சம் கொண்டனர்.இந்துஸ்தானம் முழுதும் பேசப்படும் மொழி ஆதலால் இவர்கள் அதையே இந்துஸ்தானி என்று சொல்லிக்கொண்டனர்.இந்துஸ்தானி மக்கள் பேசும் மொழி ஆதலால் அது இந்தி ஆனது.அவ்வளவுதான் கதை!
உண்மையிலேயே இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் இந்தியாவில் இல்லை
இந்த இந்துஸ்தானியில் அதாவது இந்தியில் துருக்கி, அரபி, பெர்ஷியன், மட்டுமின்றி மேற்கு உபியை சேர்ந்த பழமொழிகளும் பீகாரை சேர்ந்த பல மொழிகளும் மபியை சேர்ந்த பல மொழிகளும் அடக்கம். அதனால் தான் மேற்கு உபியில் பேசப்படும் இந்தியை கிழக்கு உ பிக்காரர் புரிந்து கொள்ள சிரமப்படுகிறார். பிஹார் இந்தி பழைய பண்பாடு கொண்ட புராதன துணைக்கண்ட மொழிகளின் கலவையாகும்.
இவ்வாறு இத்துணைக்கண்டத்தின் பாரம்பரிய மொழிகளை விழுங்கி ஒரு கந்தலான மொழியை உருவாக்கி அதனால் தங்களின் பாரம்பரியம் என்னவென்றே தெரியாமல் உ,பி, பிஹார்,
மபி ,சத்தீஸ்கர்,உத்தரகாண்ட், போன்ற மாநிலங்களில் வாழும் மக்களை இந்தி "பேசும் " மாநில மக்களாக வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் இந்தி பேசும் மக்கள்! அவ்வளவுதான்! உண்மையிலேயே இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் இந்தியாவில் இல்லை 

ஒரே நாடு ஒரே மொழி என்று கூப்பாடு போட்டு நம்மையும் இந்தி பேசும் மாநில மக்களாக மாற்றப்பார்க்கிறார்கள்.
ஆனால் நாம் உலகாயதம் எனும் அறிவியலை எண்ணியம் எனும் நுண்ணறிவை ஆசீவகம் எனும் பகுத்தறிவை மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பே உலகுக்கு கொடையளித்தவர்கள்.அது நம் தாய் மொழி தமிழால் சாத்தியமானது. அதுதான் நம் உயிர்.
அது தொலைந்து போனால் முட்டாள்தனமாக உளறுவோரில் ஒருவராக நாமும் இருப்போம்.

இந்தியா என்பது ஒரு நாடல்ல! அது பல நாடுகளின் ஒன்றியம்.
அதில் தமிழ்நாடென்பது முதன்மையானது. இது_எங்கள்_மண்!

இங்கிருந்து போகச் சொல்ல எவனுக்கும் உரிமை கிடையாது.

இந்தி தெரியாது போடா!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...