முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வயதான காலத்தில் ஏன் என்று கேட்க நாதி அற்று முதியோர் இல்லத்திலோ கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக....

Subbiahpatturajan

தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள்

வயதான காலத்தில் ஏன் என்று கேட்க நாதி அற்று முதியோர் இல்லத்திலோ,கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக....
அண்ணன்,
தம்பி,
அக்கா,தங்கை,
சின்ன அண்ணன்,
பெரிய அண்ணன்,
சின்ன அக்கா,
பெரிய அக்கா,
சித்தப்பா, பெரியப்பா,
அத்தை, மாமா,
மச்சான்,மச்சினி,
அண்ணி, கொழுந்தனார்,
நாத்தனார், தாய்மாமன்,
சித்தப்பா பையன்,
சித்தப்பா பொண்ணு
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு,
மாமன் பொண்ணு,
மாமன் பையன்..
இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050க்கு பிறகு  யாருடைய காதிலும் பாசத்தோடு விழாது.
யாரும் கூப்பிடவும் மாட்டார்கள் !
அகராதியில் இருந்தே கூட
கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும்.

காரணம் என்ன !

#ஒண்ணேஒண்ணு, #கண்ணேகண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான் !
அப்படி இருக்கும் போது
இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?
பெண்கள் வயதுக்கு வந்ததும்
சீர் வரிசை செய்யவோ,
பந்தல் போடவோ,
முதல் புடவை எடுத்துத் தரவோ
எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை !
திருமணத்தின் போது
அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவது இல்லை !
மாப்பிள்ளைக்கு மோதிரம் போட
எந்த தம்பியும் இருக்கப் போவது இல்லை,
குழந்தைக்கு மொட்டை போட
யார் மடியில் உட்கார வைப்பார்கள் ?
கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு
எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும், தம்பியும் பறந்து செல்வார்கள்.
இனி யார் போவார் ?
ஒவ்வொரு ஆணும்  பெண்ணும்,
சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி
தவிக்க போகிறார்கள்.
ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில்
பங்கு கொள்ள அண்ணன், தம்பி
யாரும் இன்றி அவதிப் பட போகிறார்கள்.
அப்பா, அம்மாவை தவிர
எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,
அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ,இல்லை
தனிக்குடித்தனமோ சென்று விட்டால் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள்
எல்லாம் வயதான காலத்தில்,
ஏன் என்று கேட்க நாதி அற்று
முதியோர் இல்லத்திலோ,
இல்லை அந்த ஒரு குழந்தைக்காக
கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள் !
உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !
உடல்நிலை சரியில்லாமல்
ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால்
ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!
சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு, உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள்தானே
வயதான காலத்தில்
அப்பா, அம்மாவுக்கு
எதாவது ஒன்று என்றால்
நான் நீ என்று ஓடி வருவார்கள்!
கணவன் குடும்பம், குழந்தை என்று உயிரை விட்ட பெண்கள் கூட பெற்றோருக்குஒன்று என்றால் அத்தனையும் மறந்து விட்டு
முதலில் வந்து நிற்பார்கள்!
ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்து பாருங்கள்!
பணமில்லாத ஒருவனை
அனாதை என்று யாரும் சொல்வதில்லை!ஆனால்,
எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை
மறந்துவிடக் கூடாது!
கார், பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற 
ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்கா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள் ? ? ?வாழ்க்கையை இனிமையாக வாழ 
ரத்தம் ஏற்றுக் கொள்ளும் உறவு முறையில் திருமணம் செய்யுங்கள்.

ஓட்டு அரசியலுக்காக

அரசாங்கம் சம்மந்தம் இல்லாத உறவை இணைத்து கலப்பின சமுதாயத்தை தந்திரமாக உருவாக்கி வருகிறது.மக்கள் மாறினால்
இனி நீங்கள் உலர்ந்து போன உபயோகமற்ற
இத்துப் போன தனி மரம்தான். ஜாக்கிரதை !!!
தனி மனித மாற்றமே ...
நம் சமுதாயத்தின் மாற்றம்.
தவறாமல் பகிர்வோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...