உலக விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாத ஓர் ஆச்சர்யமான ‘கெமிக்கல் ஃபேக்டரி’ இது.

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"Google Pay PhonePe Paytm support numbers"How to contact. Here are some steps.

Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம்.  இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்:  1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்:  080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...

உலக விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாத ஓர் ஆச்சர்யமான ‘கெமிக்கல் ஃபேக்டரி’ இது.

Subbiahpatturajan

கல்லீரல் (liver)

நம் சருமத்துக்கு அடுத்ததாக, உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். வயிற்றின் மேற்புறத்தில், வலது பக்கத்தில், இலை போல் விரிந்திருக்கும் உதரவிதானத்துக்குக் கீழே, கால் இல்லாத காளான் வடிவில் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது கல்லீரல். ஆங்கிலத்தில் இது ‘லிவர்’. பேச்சுத் தமிழில் ‘ஈரல்’. ஒன்றரை கிலோ எடையுள்ள கல்லீரல், மார்புக் கூட்டுக்குப் பின்புறம் பத்திரமாகப் பதுங்கியிருக்கிறது. இதயத்தைப் போலவே இதிலும் எலும்புகள் இல்லை; 

தொட்டுப் பார்த்தால் பஞ்சு  மாதிரி அத்தனை மிருது! மேலோட்டமாகப் பார்த்தால், ஒரே உறுப்பாகத் தெரிந்தாலும் அமைப்பு ரீதியில் வலப்பக்கம் ஒன்றும் இடப்பக்கம் ஒன்றுமாக இரண்டு பகுதிகளைக் கொண்டது.    கல்லீரலின் ‘மத்தியப் பிரதேச’த்திலிருந்து (Porta Hepatis), நான்கு அங்குல நீளத்தில் ‘பித்த நாளம்’ (Bile duct) கிளம்புகிறது.
பாதிக்கப்படுகிறது. 

இது கீழ்நோக்கி இறங்கி, சிறிய வெள்ளரிப் பிஞ்சு அளவில் இருக்கும் பித்தப்பை (Gall bladder)யோடும், முன் அடைப்புக்குறி போலிருக்கும் முன்சிறுகுடலோடும் (Duodenum) கல்லீரலை இணைக்கிறது.  கல்லீரலைக் குறுக்காகப் பிளந்து பார்த்தால், அதனுள்ளே ஆச்சர்யம் காத்திருக்கிறது. ஒரு தேன் கூடு போல் பல்லாயிரக்கணக்கான ‘பல்லாங்குழிகள்’ தெரிகின்றன. அவற்றுள் கோடிக்கணக்கான  ‘ஹெப்பாடிக் செல்கள்’ கூடி பித்த நீரைச் (Bile) சுரக்கின்றன.

இந்த பித்தநீர், பித்த நாளம் வழியாகப் பித்தப்பைக்கு வந்து கொஞ்ச காலம் தங்கிவிட்டு, செரிமானத்துக்கு உதவ முன்சிறுகுடலுக்குப் போகிறது. உடலின் தேவைக்கேற்ப தினமும் அரை லிட்டர் வரை பித்தநீரைச் சுரக்கிறது, கல்லீரல். உலகில் உள்ள எல்லா நிபுணர்களும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாத ஓர் ஆச்சர்யமான ‘கெமிக்கல் ஃபேக்டரி’ இது.

உடலுக்கு தேவையான வெப்பத்தை
கல்லீரல் உற்பத்தி செய்கிறது. ரத்தம்உறைவதற்கு தேவையான
பொருட்களையும், ரத்த 
நாளங்களுகளுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டியபொருட்களையும் உற்பத்தி செய்கிறது.இரும்புச்சத்து வைட்டமின் பி12, வைட்டமின்ஏ ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்கிறது. நோய்த் தொற்றுதலைஎதிர்த்து போர்புரிகின்ற ஆன்டிபாடிகளைஉருவாக்குகிறது. இவ்வாறு உடலுக்குஊக்கமும், செயல் வேகமும், கொடுக்கிறது கல்லீரல்

சிறியதும் பெரியதுமாக அனுதினமும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட காரியங்களைச் செய்கிறது. இத்தனை செயல்களுக்கும் கல்லீரல் நடத்தும் ரசாயன மாற்றங்களை வெளியில் செய்து காட்ட விரும்பினால், இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பெரிய ரசாயனத் தொழிற்சாலையே கட்ட வேண்டியிருக்கும். அப்படியும்கூட கல்லீரல் செய்யும் சில உட்பரிமாற்றங்களை வெளியில் செய்துகாட்ட முடியாது.

உணவில் இருக்கும் சத்துக்களைக் கிரகித்து, உடலுக்கு உதவும் சக்தியாக மாற்றித் தருவது கல்லீரலின் பணி. இது எப்படிச் சாத்தியமாகிறது?

பித்தநீரில் இருக்கிறது இந்த சூட்சுமம். உணவு இரைப்பையை விட்டு இறங்கியதும், பித்தநீர் பித்தப்பையிலிருந்து வெளியேறி,  முன்சிறுகுடலுக்கு வந்துவிடுகிறது. உணவிலிருக்கும் கொழுப்பைப் பிரித்துக் கூழ் போலாக்குகிறது. இப்போது அங்கு வந்து சேரும் கணைய நீரிலிருந்து ‘லைப்பேஸ் என்சைம் ’ துணைக்கு அழைத்துக்கொள்கிறது. கொழுப்புச் சத்தை உறிஞ்சி எடுத்து ரத்தத்துக்குக் கொடுக்கிறது. இது போர்ட்டல் சிரை வழியாக கல்லீரலுக்குத்தான் வந்து சேருகிறது. அங்கு குளுக்கோஸ் எனும் சக்திப்பொருளாக மாற்றப்படுகிறது. 

சரி, நீங்கள் சாப்பிட்டது அரிசி சோறு! அது எப்படிச் செரிமானமாகிறது? அரிசி சோற்றில் உள்ள கார்போ ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தில் கலப்பதற்குக் குடல் பிரதேசத்தில் ஏற்பாடு செய்வதும் கல்லீரல்தான். அதேசமயம் சாப்பிட்ட சோறு முழுவதும் குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்துவிட்டாலும் ஆபத்துதான்! ‘கோமா’வில் சரிந்துவிடுவீர்கள். தேவையான அளவுக்கு ரத்தத்துக்குக் குளுக்கோஸை கொடுத்துவிட்டு, மீதியை கிளைக்கோஜனாக மாற்றி, தன்னிடம் சேமித்துக்கொள்கிறது, கல்லீரல்.

அரசியல்வாதிகளின் நண்பன் 

கல்லீரல் மட்டும் இந்தச் சேமிப்பு வேலையைச் செய்யாவிட்டால், யாரும் ‘உண்ணாவிரதம் இருக்கிறேன்’ என்று பந்தல் போட்டு உட்கார முடியாது. அதேபோல் நீங்கள் விரதம் இருக்கும்போதும், வீட்டில் கோபித்துக்கொண்டு ஒருநாள், இரண்டு நாள் சாப்பிடாமல் இருக்கும்போதும், வயிறு பசித்து உணவுக்காக ‘அழும்’. அப்போது, ‘இந்தா நீ கேட்ட உணவு’ என்று தன் சேமிப்பில் இருக்கும் கிளைக்கோஜனை மறுபடியும் குளுக்கோஸாக மாற்றித்தரும் வள்ளலும் கல்லீரல்தான்!

உடம்பின் அவசரத்துக்கும் ஆபத்துக்கும் அயராமல் சத்துக்களை தறுவது கல்லீரல்! வறுமை, வறட்சி, பஞ்சம் போன்ற காலங்களில் பலர் மாதக்கணக்கில்கூட சாப்பிடாமல் இருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படுவது உண்டு. அப்போது அவர்களுக்கு நாட்கணக்கில் சக்தியைத் தருமளவுக்கு கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் கிடைக்காது.

உயிர் காக்கும் நண்பர் 

இதுபோன்ற சமயங்களில் உடலில் படிந்திருக்கும் கொழுப்பிலிருந்து சத்தை எடுத்து குளுக்கோஸாக மாற்றி உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க வழிசெய்து, உயிர் காக்கும் போராளியாக மாறுகிறது கல்லீரல். சாப்பிட்ட உணவு மட்டுமல்ல, குடித்த மது, விழுங்கிய மாத்திரை, சுவாசித்த புகை, தலைக்குத் தேய்த்த தைலம், தவறுதலாகக் குடித்துவிட்ட விஷம்... இப்படி எல்லாமே கல்லீரலுக்குத்தான் போகிறது.

திருப்பதி உண்டியலில் பணத்தையும் நகைகளையும் பிரிக்கிற மாதிரி, இவற்றில் உள்ள ரசாயனங்களை தனித்தனியாகப் பிரித்து, ‘நல்லது எது? கெட்டது எது?’ எனத் தெரிந்து, மாத்திரை, மருந்து போன்ற நல்லதைச் செயல்பட வைக்கிறது. புகை, தூசி போன்ற கெட்டதைச் செயலிழக்கச் செய்கிறது. கல்லீரல் மட்டும் இந்தத் துப்புரவுப் பணியைச் செய்யாவிட்டால், நெருக்கமான சாலைகளில் வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப் புகை மட்டுமே ஒரே வாரத்தில் நம்மைச் சாகடித்துவிடும்!

ரத்த அணுக்களின் ஆயுட்காலம் முடியும்போது, அவை மண்ணீரலுக்கு (Spleen) வந்து அழிகின்றன. அப்போது ‘பிலிரூபின்’ என்ற நச்சுப்பொருள் வெளிவருகிறது. இது ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருந்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும். எனவே, அதை ‘விருந்து’க்கு அழைத்து, பக்குவப்படுத்தி, பித்த உப்புகளாக மாற்றிச் சிறுநீரிலும் மலத்திலும் ‘பத்திரமாக’ அனுப்பிவைக்கிறது. இந்த உபசரிப்பின் பலனால் ரத்தம் சுத்தமாகிறது; உயிர் ஆபத்து விடைபெறுகிறது.

இதுபோல், உடலில் புரதச்சத்து பயன்படுத்தப்படும்போது, ‘அமோனியா’ எனும் நச்சு வாயு கிளம்பும். இது நேரடியாக நுரையீரலுக்குப் போனால் நம் மூச்சு அடங்கிவிடும்.  ஆகவே, இதன் சுற்றுப்பாதையை மாற்றி அமைத்து, அதைத் தன்னிடம் வரச் செய்து, அதன் வடிவத்தை யூரியாவாக மாற்றிச் சிறுநீரகத்துக்கு அனுப்ப, அது சிறுநீரில் வெளியேறிவிடுகிறது. இந்தச் சுழற்சியில் தகராறு ஏற்பட்டால், ரத்தத்தில் யூரியா அதிகரிக்கும். அதனால் சிறுநீரகம் பழுதாகும். இதைத் தவிர்க்க, யூரியாவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய சிரமமான பணியையும் கல்லீரல்தான் சிரமேற்கொள்கிறது.

மாறிவிட்ட நம் வாழ்க்கை முறைகளால், தெரிந்தோ, தெரியாமலோ பலதரப்பட்ட விஷப் பொருட்களும் உடம்புக்குள் நுழைவது இப்போது சகஜமாகிவிட்டது. உதாரணத்துக்குச் சில... நீங்கள் அருந்தும் தேநீரில் ‘டேனின்’ என்ற நச்சுப்பொருள் இருக்கிறது. காபியில் ‘காஃபீன்’, சிகரெட்டில் ‘நிகோடின்’, ‘டாஸ்மாக்’ சமாச்சாரத்தில் ஆல்கஹால். இவை எல்லாமே கல்லீரலுக்குப் போகாமல் நேரடியாக இதயத்தையோ, மூளையையோ அடைந்தால், இரண்டே நிமிடங்களில் மரணம் நிச்சயம். ஆனால் நடப்பதென்ன? இந்த நச்சுக்கள் கல்லீரலுக்குப் போனதும் ‘பல் பிடுங்கப்பட்ட பாம்பு மாதிரி’ விஷம் இழந்துவிடுவதால் நம்மால் உயிர் பிழைக்கமுடிகிறது.

உடலில் எங்காவது வெட்டுக்காயம் ஏற்பட்டால் ஒன்றிரண்டு நிமிடங்களில் ரத்தம் வருவது நின்று விடுகிறதல்லவா? இதற்குக் காரணம் என்ன? கல்லீரல் தயாரிக்கும் ‘புரோத்ராம்பின்’ என்ற ரசாயனம்தான். இந்த ரசாயனத்தை மட்டும் தயாரிக்க மாட்டேன் என்று கல்லீரல் ஸ்டிரைக் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவ்வளவுதான், உடலிலிருந்து ரத்தம் முழுவதும் வெளியேறி இறந்துபோவதற்கு நாம் ஷேவ் செய்யும்போது ஏற்படும் சின்னக் கீறல் போதும்!

கல்லீரல் பற்றி இத்தனை விஸ்தாரமாகப் பேசுவது ஏன்? உடல் உறுப்புகளில் இதயத்தைத் தெரிந்த அளவுக்குக் கல்லீரலின் அற்புதம் அநேகருக்கும் தெரியாத, புரியாத புதிர். ‘கல்லீரலை நம்பினோர் கைவிடப்படார்’ என்பதுதான் நடைமுறை நிஜம். உடம்பை வளர்க்கவும் உயிரைக் காக்கவும் கடைசி வரை போராடும் கல்லீரல், தனக்கு பாதிப்பு வரும்போது அது குறித்த அறிகுறிகளை ஆரம்பத்தில் காட்டாது. தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, முடிந்தவரை செயல்படுகிற அசாத்திய சக்தி கல்லீரலுக்கு உண்டு.

அரிசி சோற்றைப் போலவே பருப்புச் சோற்றில் இருக்கும் புரதச்சத்தைச் செரித்து குளுக்கோஸாக மாற்றுவதும் கல்லீரல்தான். காய்கறிகளில் காணப்படும் வைட்டமின்களைக் குடலில் கிரகித்து ஊட்டச்சத்தாக மாற்றுவதும் இதே கல்லீரல்தான். சரி, இத்தனை சத்துக்களையும் வைத்துக்கொண்டு என்னதான் செய்கிறது கல்லீரல்? தனி ஒரு உறுப்பாக இருந்துகொண்டு, உடலின் பல உறுப்புகளைப் பாதுகாக்கும் பணியைச் செய்ய வேண்டியிருப்பதால், இந்தச் சத்துக்களை உடல் இயக்கத்துக்குத் தேவையான ‘ஆதார சக்தி’யாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான் ஆச்சரியத்தின் உச்சம்!

இதயம் துடிப்பதற்குத் தேவையான சக்தி ஒரு வகை. கண் இமைப்பதற்குத் தேவையான சக்தி வேறு வகை. மூளை வளர்வதற்குத் தேவையான சத்து ஒன்று. முடி வளர்வதற்கான சத்து இன்னொரு வகை. உழைப்பதற்கும், உறங்குவதற்கும் தேவையான சக்திகள் வெவ்வேறானவை. வளரும் குழந்தைக்கும் வயதானவருக்கும் வேண்டிய சத்துக்கள் வேறுபடும்.

எந்த உறுப்புக்கு, எந்த சத்து, எந்த அளவில், எந்த நேரத்தில் தேவை என்பதை தேர்ந்த கணிப்பொறி போல் கல்லீரல்தான் தெரிந்துவைத்திருக்கிறது. அதை அந்தந்த உறுப்புக்குச் சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுத்து அனுப்புகிறது. அதனால்தான் வாக்கிங் போகும்போது, பாட்டு கேட்டுக்கொண்டே ‘செல்’லையும் நோண்டுகிற மாதிரி ஒரே நேரத்தில் பல வேலைகளை நம்மால் செய்ய முடிகிறது.

தேவையற்ற உணவு பழக்கம் 

மது , ரசாயன மருந்துகள் அதிகமாக உட்கொள்ளல், இரவு 11.00 மணியில் இருந்து 3.00 வரை தூங்காமல் இருத்தல், முறையற்ற உணவு பழக்கம் ஆகியவை கல்லீரலை பாதிக்கும் காரணிகள்.
நமது நாட்டைப் பொறுத்தவரை கல்லீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு மூன்று காரணிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒன்று, குடிப் பழக்கம். இரண்டாவதாக, கொழுப்பு நிறைந்த உணவுகள்.
மற்றும் அளவுக்கு அதிகமான மருந்து உட்கொள்ளல்.
அளவிற்கு அதிகமாக குடிப்பதனால்  கல்லீரலிற்கு ஏற்படும் பாதிப்பே சாதாரண மஞ்சள் காமாலை நோயிலிருந்து ஹெப்பாடிடிஸ் பி ஆகியனவும், நீரிழிவு உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகின்றன. இவற்றை ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய்கள் என்று மருத்துவம் கூறுகிறது.
மற்றொரு வகையான பாதிப்பு கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் உண்டாகிறது. இதனை ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு வியாதிகள் (Non-alcoholics fatty liver disease – NAFLD) என்று மருத்துவம் வகைப்படுத்துகிறது.
இந்த இரண்டாவது வகை – அதாவது கொழுப்பு சேகரிப்பால் கல்லீரல் கெடுவது – ஒருவருக்கு 35 வயதில் ஏற்படுகிறது என்று வைத்துக் கொண்டால், அவர் 55 வயதை அடையும்போது, கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு, அதனை மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. கல்லீரல் வீங்கி சிகிச்சையால் குண்பபடுத்த முடியாத நிலையைத்தான் லிவர் சிர்ரோசிஸ் என்றழைக்கின்றனர்.
கல்லீரலை பாதுகாக்கும் உணவுமுறை 
முறையான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி ஆகியன கல்லீரலை பாதுகாக்கும் மிகச் சாதாரண வழிகளாகும். பாதிக்கப்பட்டாலும் மருத்துவத்தின் உதவியால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பு கல்லீரல் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். எனவே, மது குடித்தல், கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுதல் ஆகியவற்றை தவிர்த்தால் போதும். நல்ல கல்லீரலுடன் வாழ்நாள் முழுவதும் நன்றாக வாழலாம்.
எலுமிச்சை: காலையில் எலுமிச்சை சாறு குடிப்பது கல்லீரலை தூண்டுகிறது.
பீட்ரூட், காரட்: நச்சுப் பொருட்களை வெளியேற்ற இவை உதவுகின்றன.
இந்த உணவுப் பொருட்கள் பொதுவான ஆரோக்கியத்திற்கும் உதவும்.
கல்லீரல் நோய்களை குணமாக்கும் கல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும் 
கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி.
குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர் களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் துளசி தடுக்கும்.
கல்லீரல் நோய்..
மனிதனுடைய உடல் அமைப்புகளில் அற்புதமான செயலை செய்வது ஈரல்.சுரப்பிகளிலேயே மிகவும் நுணுக்கமானது மற்றும் அளவிலும் பெரியது.இந்த ஈரலானது இருதயம்,சிறுநீரகம்,இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் உணவுகளைச் செரிக்கச் செய்வது போன்ற எண்ணற்ற வேலைகளை இடையறாது செய்துக் கொண்டே இருக்கிறது.இந்த செயல் திறனைக் குறைக்கும்படி பலவித நோய்களாலும்,கிருமித் தொற்றுகளினாலும் ஈரல் வீக்கம் அல்லது ஈரல் சுருங்கிப் போதல்,காமாலை போன்ற கல்லீரல் நோய்கள் உண்டாகின்றது.

அறிகுறிகள்..

வாயில் கசப்புச் சுவை,ருசியின்மை,வாயில் நீர் ஊறல்,பசியில்லாமை,உண்ட உணவு செரியாமை,காலையில் பித்தவாந்தி,முகத்தில் தேஜஸ் குறைதல்,முகம் வற்றி, எலும்புகள் தெரிதல்,வயிறு பெருத்து,கை கால் மெலிந்து போதல்,காய்ச்சல் இருத்தல் போன்ற குறிகள் தென்படும்.

1.வாய்வு கல்லீரல் நோய்..

வாய்வானது சீர்கோடடைந்து,வாய்வு தோஷம் உபரியாகி,உஷ்ணம்,காய்ச்சல் உண்டாகி சிறுகச் சிறுக உடம்பு இளைத்தல்,வயிறு பெருத்து,ரசத்தாது கேடு அடைந்து,நாளங்களின் முடிச்சுகளில் கட்டி போன்ற முடிச்சுகள் ஏற்படும்.

2.பித்தக் கல்லீரல் நோய்..

இரத்தத்தை கெடுத்து,பித்தத்தின் தன்மை அதிகரிக்கச் செய்து உடல் முழுவதும் பித்தநீர் பரவச் செய்து காண்பதற்கு மஞ்சளாகத் தோற்றம் அளிக்கும்.வாயில் கசப்பு ஏற்பட்டு பித்த வாந்தி எடுத்தல்,முகம் வெளிறிக் காணும்.

3.கபத்தினால் உண்டாகும் ஈரல் நோய்..

இந்நோய் சரீரத்திற்கு வன்மையும்,தெம்பும் கொடுக்கக் கூடிய உஷ்ணத்தை கேடுஅடையச் செய்து,அத்துடன் குளிர்ச்சியான கபம் கலந்து,கல்லீரலையும் கெடுத்து விடுகிறது.உடல் வீங்கி வெளுத்து வயிற்றைப் பெருக்கச் செய்யும்.

கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

பாத்ரூம் கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம்...!?

Subbiahpatturajan 60/65 வயதிற்கு மேற்பட்ட  இருபால் அன்பர்களுக்கும் சில முக்கியமான டிப்ஸ்:- 1.பாத்ரும் செல்லும் பொழுது(வீட்டில்) கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம். 2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது நடக்கவேண்டாம். 3.ஸ்டூல்,நாற்காலி,பெஞ்ச் போன்றவற்றின் ‌.மீது ஏறி பொருட்களை எடுப்பது,சுத்தம் செய்வது, துணிகளை காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும். 4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும். 5.மாத்திரை மருந்துகளை வேளா வேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.. 6.உங்களை எந்தவிஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். 7.வங்கிக்கு பணம் எடுக்கச்சென்றால் தனியாகச்செல்ல வேண்டாம்.துணையுடன்செல்லவும். 8.வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை தவிர்க்கவும்.அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும். 9.கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை  ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும். 10.சைக்கிள் முதல் கார் ...

உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️

Subbiahpatturajan விவசாயிகள் மட்டுமின்றி,  உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️ 1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?? 2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..? 3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும். 4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..?? 5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..?? 6️⃣ PDS system  என்னாவது ..?? 7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..?? 8️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..?? 9️⃣ ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில்...

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே...???

Subbiahpatturajan ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா? தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட் டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே  நல்ல வேலைக்கு போகவா? ஆங்கிலம் சரளமாக பேசவா? குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?? ஏன்? எதற்கு? என்று சிந்தித்ததுண்டா?? 11TO12 200000 லட்சம் ஆக மொத்தம் Pre kg 25000 ல் துவங்குகிறது  Lkg 40000 Ukg 50000 1st.60000 2ND 70000 3D. 80000 4TH 90000 5TH 100000 6TO8 1.20000 9TO10. 150000 9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க. சரி! இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும் அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?  ஒன்றை நினைவில் வையுங்க...

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive )...

*TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா?

சுப்பியபட்டுராஜன் * டி.என்.பி.எஸ்.சி- ஒரு வேளை? ? 7, 8, ஒரு? * டி.என்.பி.எஸ்.சி- தமனிமகாத்துக்கு ஒரு வேளைக்கும், உங்களுக்கும் விருப்பம் இல்லை, இல்லையா? ஒரு வேளை? TNPSC இல் எத்தனை குழுக்கள்? * << - - - 1 (குழு -1)  (துணை கலெக்டர்)  ஒரு முறை (காவல்துறை துணை கண்காணிப்பாளர்)  (மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை)  (ஸல்)  (மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி)  ஒரு முறை (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் அலுவலர்)  (ஸல் கமிஷனர்)  (கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்) - - 1A (குழு -1 I)  (காடுகளின் உதவி கன்சர்வேட்டர்) - - 1 பி (குழு -1 ஐ பி)  HR & CE (உதவி ஆணையர், HR & CE) - - 1 சி (குழு -1 சி) டிஓஓ (மாவட்ட கல்வி அலுவலர்) ஒரு வேளை  [2] (2) (ஒரு வேளை) (குழு -2)  ஜி துணை வணிக வரி அதிகாரி  ஒரு வேளை  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை, -2  தொழிலாளர் உதவி ஆய்வாளர்  ஒரு வேளை (ஒவ்வொரு வகையிலும்)  (ஸல்)  (ஸல்)  தமது  ஒரு வேளை  ஒரு வேளை, தமதுமது  ஒரு வேளை  ஒரு வே...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...