Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
உன் மனைவி அழகான பெண்ணாக இருந்தாலும் இல்லையென்றாலும் உன் மனைவியை தவிர வேறு எந்த பெண்ணும் வேண்டாம் என்ற மனம் வந்துவிடும்
Subbiahpatturajanஇப்போது ஞானி சொன்னார்,
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலிக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.” என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, “எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ” என்று கேட்டார்.
சீடன் சொன்னான், “குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.”
புன்முறுவலோடு ஞானி சொன்னார், “இது தான் காதலி!”
உனக்கு ஒரு அழகிய பெண் காதலியாக கிடைத்தாலும் இவளை விட அந்த பெண் அழகாக இருக்கிறாளே நான் தவறாக அவசரப் பட்டு முடிவெடுத்து விட்டேனே என்ற நிலை உன் மனதில் அடிக்கடி வந்து போகும் இதற்கு பெயர் தான் காதல்.
பின்னர் ஞானி, “சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.”
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், “இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? ”
சீடன் சொன்னான், “இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை”.
இப்போது ஞானி சொன்னார்,
“இது தான் மனைவி"
உனக்கு திருமணம் ஆன பின்பு உன் மனைவி அழகான பெண்ணாக இருந்தாலும் இல்லையென்றாலும் உன் மனைவியை தவிர வேறு எந்த பெண்ணும் வேண்டாம் என்ற மனம் வந்துவிடும் இதுதான் மனைவி என்றார்.
கருத்துகள்