முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்மை வாழ வைக்கும் இறைவனின் இருப்பிடத்தை நாம் வளர்த்து பாதுகாத்தால், நம் சந்ததிகள் நலமாக வாழும்

Subbiahpatturajan

உழவாரப் பணியின் 10 முக்கிய வேலைகள்


இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை. உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர்* *திருநாவுக்கரசர்*.
பழங்காலத்தில் கோயிலில் கிடைத்த நைவேத்யம், சிறுவருமானத்தை பெற்றுக் கொண்ட சிலர் தெய்வத் தொண்டாக கோயிலை துாய்மைப்படுத்தினர். இதற்காக சில கோயில்களில் மானிய நிலம் கூட இருந்தன*
*கோயிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணி. இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவிக்கு ’உழவாரப் படை’ என்று பெயர். இதைக் கையில் ஏந்தியபடி இருப்பவர் திருநாவுக்கரசர்*
 *எப்போதும் உழவாரப்பணி மூலம் கோயிலை தூய்மை செய்தபடி பாடுவது இவரின் பணி. சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்*
உழவாரப் பணி என்றால் என்ன?
*சிவ ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி எனப்படும்*

உழவாரப்பணி

*1. பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை எடுத்து குப்பை கூடங்களில் போடுவது*
*2. பக்தர்கள் இறைவன் அருள் வேண்டாம் என சொல்லி தூண்களில் கொட்டும்  திருநீறு குங்குமம் போன்றவற்றை சுத்தம் செய்வது*
*3. இறைவனுக்கு சாற்றப்படும் நிர்மால்ய பூக்களை எடுத்து நந்தவனத்தில் போடும் பணி.*
*4. திருக்கோயில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் அழுக்குகள் ஆகியவைகள் நீக்குவது..*
*5. சுவாமியின் ஆடைகளை துவைப்பது.*
*6. அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது.*
*7. நந்தவனத்தை தூய்மைபடுத்துவது.*
*8. தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்தப்படுத்துவது*
*9. கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றுவது.*
*10. சிவாச்சாரியார்களின் அனுமதி பெற்று திருக்கோயிலின் கொடிமரம் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு தூய்மைபடுத்துவது.*
*11. அறுபத்து மூவர் மற்றும் கல் திருமேனிகளுக்கு மாவு , தயிர் சாற்றி அதன்மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது.*
*12. திருக்கோயில்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்வது.*
*13. வாரம் ஒரு முறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மெழுகிடுவது.*
*14. திருக்கோயிலை சுற்றி கோலமிடுவது.*
*15. கோயிலில் படிந்திருக்கும் எண்ணை பிசுபிசுப்பை எடுப்பது.*
*16. கற்பூர புகையால் படிந்திருக்கும் கரும்புகைகளை துடைப்பது..*
*17.கோவில் சுற்றுச்சுவர் அல்லது மதில் சுவரை, சுத்தம் செய்து வெள்ளை அடிப்பது.போன்ற பணிகளே உழவாரப் பணி ஆகும்.*
*18 . எல்லோராலும் கைவிடப்பட்ட வெட்டவெளியில் இருக்கும் பழமையான சிவலிங்கத் திருமேனியை மீட்டெடுத்து அதற்குண்டான பணி மேல் கூரைகள் அமைக்கப்பட்டு அந்த அற்புதமான பழமையான சிவலிங்கத்துக்கு தினசரி மீண்டும் நித்தியபடி பூஜைகளை ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் பணியை அற்புதமான சிவப்பணி
*19. நம் மன்னர்களாலும் நம் முன்னோர்களாலும் கட்டப்பட்ட அற்புதமான சிவாலயங்களை அனைவராலும் கைவிடப்பட்ட பொக்கிஷமான பழமையான சிவாலயங்களை மீண்டும் தினசரி வழிபாட்டுக்கு கொண்டு வருவது நம் வாழ்வில் சிறப்பான உழவாரப் பணியாகும்
 *20. பழமையான சிவாலயங்களில் இருக்கும் லிங்க திருமேனிகளையும் மற்றும் சாமி சிலைகளையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்காக இத்தனை வருடங்களாக பராமரித்து வந்த வயதான குருக்களுக்கும் வயதான அடியார்களுக்கும் அவர்களுக்கு உண்டான படி சேவை செய்வதே அற்புதமான சிவப்பணி 

 நமது கடமை பணி கடன் செய்து கிடப்பதே

*இப்பணிகளை குறைந்தது மாதம் ஒரு நாள் செய்வோமானால் உடலும் , மனதும் வலிமை பெறும்.*
*உழவாரம் செய்வீர் இறைவன் அருள் பெறுவீர்.*
*உழவாரப்பணி செய்யும் அன்பர்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்கு செல்வதில்லை* என்பது அடியார்களின் அனுபவம்.
*அடுத்த முறை உங்கள் அருகில் ஏதாவது உழவாரப்பணி நடைப்பெற்றால், தவறாமல் கலந்து கொண்டு ஈசன் அருள் பெறுங்கள்*! 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...