முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

As your habits are, there will be people who behave with you in the same way.

Subbiahpatturajan

நல்ல பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..*

_உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே..


 எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது._ 
_*இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.*_
_சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது._ 
_*இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.*_
_எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை_
_*நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கும்.*_ 
_கெடுதலான எண்ணங்கள் கெடுதலான செயல்களில் முடியும். எண்ணங்கள் செயல்களாகும்._ 
_*செயல்கள் பழக்கவழக்கங்களாகும்.பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..*_
_ஒரு தடவை ஒரு அப்பாவும் மகனும் ஒரு மலை மீது நடந்து சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது பையன் கல் தடுக்கி கீழே விழுந்து விட்டான்.._
_*அடி பட்டதனால் அவன் ''ஆ..ஆ..ஆ..ஆ..ஆ'' ன்னு கத்தினான். தூரத்துல இதே மாதிரி இவன் கத்தின மாதிரியே '' ஆ ஆ ஆ ஆ ஆ'' சத்தம் திரும்பக் கேட்டுது..*_
_பையன் சத்தம் வரும் திசையைப் பார்த்து,'நீ யார்'' என்று சத்தமாகக் கேட்டான். திரும்பவும் அந்தப் பக்கத்தில் இருந்து' நீ யார்''னு கேட்டுது._
_*பையன், '' நான் உன்னை விரும்புகிறேன்'' என்று சொன்னான். அந்தப் பக்கமும் அதே வார்த்தை திரும்ப வந்தது..*_
_பையன் '' நீ ஒரு கோழை" என்று சொன்னான்.அதே வார்த்தை திருப்பிக் கேட்டுது.. பையனுக்கு ஒரே ஆச்சரியம். அவனின் அப்பாவிடம் கேட்டான்..._
_*'' அது யாருப்பா அவன்.., நான் சொல்வதை எல்லாம் திரும்பச் சொல்றானே'' ன்னு கேட்டான்.*_ 
_அவனின் தந்தை சொன்னார். அது யாரும் இல்லை. அது உன் பேச்சின் எதிரொலி என்று சொல்லி விட்டு இதைப் போலத்தான் நம் வாழ்க்கை என்று சொன்னார்.._
_*அப்பா சொன்னார்,' 'நீ என்ன எல்லாம் கொடுக்கிறாயோ அதுதான் உனக்குத் திரும்பக் கிடைக்கும்.*_
_உன் பழக்கவழக்கம் எப்படி இருக்கின்றதோ, அது மாதிரி தான் உன்னிடத்தில் பழகுகின்றவர்களும் இருப்பார்கள்.._
_*உன் கோழைத்தனம் திரும்பவும் கோழைத்தனமான வாழ்க்கையைத் தான் உனக்குக் கொடுக்கும்.*_
_நீ உன்னைச் சுற்றி இருக்கிறதை ரசித்தாய் என்றால் வாழ்க்கையும் உன்னை ரொம்ப ரசிக்கும்படியாக வைத்து இருக்கும்'' னு சொன்னார்.,_
_*நம் மனதில் தோன்றும் எந்த எண்ணமும் வீணாவது இல்லை என்பதை நினைவில் கொள்வோம்.*_
_மகிழ்ச்சியான, உயர்வான வாழ்க்கைக்கு அடிப்படையான நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வோம்._

_*நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம்..*_

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...