முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெற்றோரை எதிர்த்து காதலித்து திருமணம் செய்துகொள்ளும் மகளுக்கு...

பெற்றோரை எதிர்த்து காதலித்து திருமணம் செய்துகொள்ளும் மகளுக்கு...

சினார் தமிழன்.


குடும்பப் பெண்ணாக இருப்பவர்கள் காலை எழுந்தவுடன் நீராடி நல்ல உடையை அணிய வேண்டும்.ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவர்.நாம் அணியும் உடையே நமது பொறுப்புகளை நமக்கு எடுத்துரைக்கும்.

குடும்பத் தலைவிகள் எப்பொழுதும் நல்ல வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்.குடும்பத்திலுள்ளவர்களை அவச் சொல் சொல்லி பேசி விடக்கூடாது.ஏனெனில் ஒரு பெண்ணின் வார்த்தை அப்படியே பலிக்க கூடிய சக்தி மிகுந்தவை ஆகும்.

குடும்ப பெண்கள் காலை மாலை என இரண்டு வேளையும் தீபமேற்றி இறை வழிபாடு செய்ய வேண்டும்.தீபமேற்றினால் பெண்ணிற்கு மன அமைதி ஏற்பட்டு குடும்பத்திலும் மன அமைதி நிலவும்.

பெண்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.சிரித்த முகத்தோடு இருக்கும் பெண்களின் குடும்பத்தில் மகாலட்சுமி தானாகவே குடிபுகுந்து விடுவாள்.

பெண்கள் எப்பொழுதும் அமைதியான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.குடும்பத்தின் ஆணிவேராக திகழும் பெண்ணானவள் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய சக்தி பெற்றவள் ஆவாள்.எனவே குடும்பப் பெண்கள் நேர்மையோடும் அமைதியாகவும் பேசி ஒரு பிரச்சினையை சரி செய்ய பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இருவரும் பிரிந்து தனிமைப்படும்போது தனித்திருந்து ஓரளவு தெளிவாக சிந்திப்பார்கள். அப்போதுதான் நல்லது கெட்டது தெரியவரும்.


மனைவி, கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு செல்லாமல் வேறு எங்கேயாவது சென்றால் அது பாதுகாப்பில் பிரச்சினையை ஏற்படுத்தும். கூடுதலாக வேறு விதமான பிரச்சினைகளையும் உருவாக்கிவிடும்.
அதனால் அம்மா வீட்டிற்கு செல்வது நல்லதே! அம்மா வீட்டில் ஆறுதலும், அன்பும் மட்டுமில்லை, சரியான வழிகாட்டுதலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அடிக்கடி கணவரிடம் சண்டையிட்டுக்கொண்டு அம்மா வீட்டிற்கு பயணமாவது நல்லதல்ல!

பெற்றோரை எதிர்த்து காதலித்து திருமணம் செய்துகொள்ளும் மகளுக்கு பொதுவாக அம்மா வீடு ஆறுதல் தருவதில்லை. 'எங்கள் சொல் கேட்காமல் நீயாகத்தானே திருமணம் செய்துகொண்டாய். நீயே அனுபவி' என்று சொல்கிறார்கள். அது சரியல்ல. மகளுக்கு வழிகாட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. அதில் இருந்து அவர்கள் பின்வாங்கக்கூடாது. குறிப்பாக அம்மாக்கள் திருமணமான மகளின் எதிர்காலத்தில் அக்கறை செலுத்தியே ஆகவேண்டும்.

கணவரோடு மனைவி சண்டையிட்டுக்கொண்டு மனப்போராட்டத்தில் இருக்கும் காலகட்டங்களில், எங்கேயாவது இருந்து நீளும் புதிய நட்பு அவளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் தெரியும். உடனே அதை பற்றிப் பிடித்துக்கொள்ளத் தோன்றும். ஆனால் அது எந்த அளவு பாதுகாப்பானது என்று சொல்வதற்கில்லை. கயிறா? பாம்பா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

இந்த மாதிரியான புதிய நட்பு, அந்த நேரத்தில் மட்டுமே ஆறுதலாக இருக்கும். பிற்காலத்தில் அதற்கு அதிக விலை கொடுக்கவேண்டியதாகிவிடும். அதனால் கூடுமானவரை கணவன்- மனைவி உறவு சிக்கல்களை உணர்ச்சிவசப்பட்டு அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப ரகசியங்களை சொல்வது வாழ்க்கையை சிதைத்துவிடும்.

கணவனும், மனைவியும் ஒருவர் மீது இன்னொருவர் குற்றஞ்சாட்டிக்கொள்ள பல்வேறு விஷயங்கள் இருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது இருவருக்குமே தங்கள் பக்கமே நியாயம் இருப்பதுபோல் தோன்றும். உணர்ச்சியை கட்டுப்படுத்தினால் கோபம் குறையும். பின்பு மனைவி, கணவர் நிலையில் இருந்தும், கணவர், மனைவி நிலையில் இருந்தும் அந்த விஷயத்தை சீர்தூக்கிப்பார்த்து, சுயபரிசோதனை செய்தால் உண்மை புரியவரும். கோபம் குறைந்து, சுபம் ஆகிவிடும்.

கோபமான நேரத்தில் நடக்கும் விவாதத்தின் தொடக்கம் சரியாக இருக்காது. சரியான வழியில் அந்த விவாதம் செல்லவும் செய்யாது. பிரச்சினைகளோடுதான் முடியவும் செய்யும். அதனால்தான் கோபத்தில் செய்யும் விவாதங்களை வீண் விவாதம் என்று சொல்கிறோம். வீண்விவாதங்கள் பகையை வளர்க்கத்தான் உதவும். அதனால் கணவன், மனைவி இருவருமே விவாதங்களில் ஈடுபடும்போது, 'விவாதத்தில் ஜெயிப்பதல்ல, வாழ்க்கையில் ஜெயிப்பதுதான் முக்கியம்' என்பதை உணர வேண்டும்.

செக்குமாடு போன்று எப்போதும் ஒரே மாதிரி வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கக்கூடாது. அவ்வப்போது வாழ்க்கையில் மாற்றம் இருக்கவேண்டும். மாற்றங்களை மனம், உடல், அலங்காரம் போன்று பலவிதங்களில் ஏற்படுத்திக்கொள்ளலாம். மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சலிப்பை போக்கி, தம்பதிகளை உற்சாகமாக்கும். அந்த உற்சாகம் கணவன்- மனைவி உறவில் புத்துணர்ச்சியை உருவாக்கும்.

தம்பதிகளுக்குள் ஏற்படும் 95 சதவீத பிரச்சினைகள் மிக சாதாரணமானதுதான் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இருவரும் பிரியக் கூடிய அளவுக்கு அதில் தீவிரம் இருப்பதில்லை. ஆனால் ஒன்றும் இல்லாத அந்த விஷயத்தை பேசிப்பேசி தீவிர பிரச்சினையாக்கி விடுகிறார்கள். சிலர் உடனே அவசரப்பட்டு, 'நாம் இனி ஒருபோதும் பேசிக்கொள்ளவேண்டாம். ஆனால் குழந்தையின் நலன்கருதி ஒரே வீட்டில் குடியிருப்போம்' என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அந்த முடிவு மிக மோசமானது. ஏன் என்றால் எந்த விஷயமானாலும் பேசித்தான் தீர்க்கமுடியும். பேசாமல் எதையும் தீர்க்க முடியாது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...