முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீங்கள் உடுத்தும் #சேலை, ஓர் உடையே இல்லை!!!

Subbiahpatturajan

நீங்கள் உடுத்தும் #சேலை, 
ஓர் உடையே இல்லை!!!





மேலே உள்ள தலைப்பைப் பார்த்துப் பயப்பட வேண்டாம். இப்படிக் கூறியது
 ஒரு ஜெர்மானியர்...

"#This_is_not_a_dress... #This_is_a_song". "நீங்கள் உடுத்துவது ஓர் உடையல்ல...
 #அது_ஒரு_கவிதை"...

ஆம் காஞ்சிபுரத்தைச் சுற்றிப் பார்க்க வந்த ஒரு ஜெர்மனி நாட்டு அறிஞர் #ஆரல்பக்பீயும்_அவரது_மனைவியும் பார்த்தது - ஒரு தமிழ்ப் பெண் குடத்தை ஏந்தி நடந்து போனாள், குடத்தைப் படியில் வைத்துவிட்டுக் குளத்தில் இறங்கினாள்.

அவள் உடுத்தியிருந்த சேலையைப் பார்த்த அந்த அறிஞர் "இந்தப் பெண் அணிந்துள்ள தமிழ்நாட்டுக் 'கவுன்' எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று தன் மனைவியிடம் சொன்னார். மனைவி சொன்னார் "இந்தத் தமிழ்நாட்டுத் தையல்காரன் கெட்டிக்காரன் மடிப்பு மடிப்பாக எத்தனை தட்டுகள் வைத்து இந்தக் 'கவுனைத்' தைத்து இருக்கிறான்".

சிறுது நேரம் கழித்து அந்தப் பெண் படிகாட்டில் அமர்ந்து நாகரிகமாகத் தன் சேலையைத் தண்ணீரின் மேல்பரப்பில் ஓடவிட்டாள். பிறகு தான் அந்தத் தம்பதிகள் அது கவுன் அல்ல அது #சேலை என்று கண்டு எவ்வளவு கலை நுணுக்கத்தோடு மடித்து உடுத்தி இருக்கிறாள் என்று திகைத்துப்போய் " this is not a dress,this is a song" என்றனர்.

இந்த அறிஞர் போவதற்கு முன் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார், "மேலைநாட்டவராகிய எங்களைப் பின்பற்றுவதாக நினைத்து ஏதோ புதிய பழக்கங்களை நீங்கள் பின்பற்றத் தொடங்கி இருக்கிறீர்கள். அதனால் உங்கள் அடையாளங்களைக், கலைச் செல்வங்களை இழப்பீர்கள்.



உங்களுடைய கலைகள் எல்லாம் ஒப்பற்ற கலைகள்... உங்கள் பெண்கள் புடவை அணிந்து கொள்கிறது அரிய கலையாகும். எதனை இழந்தாலும் இந்த உடைச் செல்வத்தை இழந்துவிடாதீர்கள்!! #உங்கள்_உடை_சேலை_ஒரு_கவிதை!!!" என்றாராம்...





நம் நாட்டின் பாரம்பரிய உடை சேலை தான். ஆனால் தற்பாேதைய தலை முறையினர் பலருக்கு புடவை கட்டவே தெரியாது என்பது யாவரும் அறிந்த உண்மையே இதற்கான காரணமாக மேலத்தேய கலாசாரம் நம் நாட்டினுள் புகுந்தது என சாெல்லப்படுகிறது..

நாம் புடவையை உடுத்தும் பாேது நினைவில் வைத்துக் காெள்ள வேண்டியவை,

  • புடவையில் அழகாக தாேன்ற விரும்பின் அளவுக்கு அதிகமான ஆபரணங்களை எப்பாேதும் அணியாதீர்கள்.  அதிகமாக அணியும் பாேது உங்கள் தாேற்றத்தை பாழாக்கி காட்டும்.

  • புடவையை அணியும் பாேது தாெப்புளுக்கு மேலாகவாே அல்லது கீழாகவாே அணியக்கூடாது. இது உங்கள் தாேற்றத்தை பாழாக்ககூடியது. மற்றும் சரியான அளவில் பாவாடைகளை உடுத்துங்கள்.

  • புடவை அணியும் பாேது கட்டாயம் ஹேண்ட் பேக்குகள் எடுத்துச் செல்லத் தேவையில்லை, தேவை இருப்பின் சிறிய அளவிலான பைகளை பயன்படுத்தலாம்.

  • புடவை அணியும் பாேது நிச்சயம் தட்டையான செருப்புகளை தவிர்க்க வேண்டும். இவை நிச்சயம் உங்கள் தாேற்றத்தை மிக மாேசமாக காட்டக்கூடியது.

  • புடவை உடுத்தும் பாேது அணியும் உள்பாவாடை தாெடர்பில் மிக அக்கறையுடன் இருங்கள். 

  • புடவையின் நிறத்துடன் பாெருந்தும் வண்ணம் தெரிவு செய்யலாம்.
  • பிரா ஸ்ட்ராப்க் வெளியில் தெரியாதவாறு ஜாக்கெட்டுகளை அணியுங்கள்.

  • அணியும் ஜாக்கெட்டானது மிக தளர்வாகவும், சரியான அளவில் இல்லாவற்றையும் அணியாதீர்கள். அது பாேல் புடவைக்கு ஏற்றால் பாேல் ஸ்டைலில் அணியுங்கள்.

இவற்றை கவனத்தில் காெண்டு புடவையில் தேவதையாக காட்சி தரலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...