முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உங்கள் திருமணமான புதிதில் இருந்த அதே வசந்தம் மீட்டெடுக்கப்படும்…

Subbiahpatturajan



#சினார்தமிழன் #lifeworkshop
#reallifestyle

#Lifeworkshop

தயவு_செய்து திருமணமான_பெண்கள் மட்டும்_படியுங்கள்…!!!

கல்யாணம் ஆன புதுசுல உங்க கணவர் சமயம் கிடைக்கும்போதெல்லாம் உங்களை கட்டி அணைத்திருப்பார்…

முத்தம் கொடுத்திருப்பப்பார்…

சமையலறைக்கு அடிக்கடி ஓடி வந்திருப்பப்பார்….

உங்கள் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசுகள் கொடுத்திருப்பப்பார்….

நள்ளிரவில் வாழ்த்தி இருப்பார்…..

திருமணநாளுக்கு புடவையோ நகையோ பரிசளித்திருப்பார்…. ஆனால்..

வருடங்கள் கூட கூட இதெல்லாம் குறைந்திருக்கும்….

உங்களை கட்டி அணைப்பதுவும், முத்தம் கொடுப்பதுவும் வெகுவாக குறைந்து போயிருக்கும்..

சமயங்களில் அறவே நின்றுகூட போயிருக்கும்…. சமையலறை பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டார்…

பிறந்தநாளை மறந்துகூட போயிருப்பார்…

எல்லா நாளையும் போல திருமண நாளையும் ஒரு சாதாரண நாளாக கடந்துகொண்டிருப்பார்..

இதுதான்_எதார்த்தம்…..

ஆரம்பத்தில் ஓடி வந்து ஓடி வந்து கட்டிப்பிடித்தீர்களே… இப்போது நானாக அருகில் வந்தால் கூட கசகசன்னு இருக்குன்னு புரண்டு படுக்கிறீங்களே…. என்னோட பிறந்தநாள் எப்போன்னு கூட தெரியலையே…. என்பது போன்ற பல ஆரம்பகால விஷயங்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு அவரை குடைய தொடங்குவீர்கள்…

உங்கள் கோபம் எரிச்சலாக வெளிப்படும்….. இந்த எரிச்சல் அவரை மேலும் மேலும் உங்களிடம் இருந்து விலக்குமே தவிர…. எந்த காலத்திலும் அந்த இன்ப நினைவுகளை மீண்டும் நிகழ்வில் கொண்டு வரவே வராது….

ஒரு குடும்பத்தலைவனின் மனசு என்பது ஒரு இளம் மூங்கில் குருத்து போல….. ஆரம்ப காலங்களில் நீங்கள் அந்த குருத்துக்கு சப்போர்ட்டாக நிற்பீர்கள் என்று அந்த குருத்து ஆனந்திக்கும்….

ஆனால்…..

அவரது சகோதரிகளுடன் முரண்பட்டு,

சகோதரர்களுடன் முரண்பாடு,

அப்பா-அம்மாவுடன் முரண்பாடு ,

பொருளாதார தேவைகள்

என தொடர்ச்சியாக நீங்கள் ஒவ்வொரு கல்லாக கட்டி கட்டி அந்த குருத்தில் கட்டும்போது,…..

அந்த குருத்து வளைந்து தரையை தொட்டிருக்கும்…..

உங்களையும் விட்டுக்கொடுக்க முடியாமல்….

உடன்பிறந்த, பெற்றோர்களையும் விட்டுக்கொடுக்க முடியாமல் , பொருளாதார தேவைகளை சமாளிக்கவும் திண்டாடி தன் சுயம் இழந்திருப்பார் அவர்….

இந்த சுய இழப்பு என்பது, இதெற்கெல்லாம் காரணம் என அவர் நினைக்கும் உங்கள் மீது எரிச்சலாய் திரும்பும்….

துரதிஷ்ட வசமாக அந்த எரிச்சலையும் கூட நேரடியாக காட்ட முடியாமல் தவித்து, உங்களை தவிர்ப்பார்….

நீங்களும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதை போல… அவர் உங்களிடம் பேசும் இரண்டொரு நிமிடங்களில் கூட குறைகளையும், பிரச்சினைகளையும் மட்டுமே பேசுவீர்கள்….

மாறாக…..

கிடைக்கும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் பழைய ஆனந்த வாழ்வை நினைவுகூர்ந்து மட்டும் பேசுங்கள்….

“நாம அங்க போனோமே…. அந்த ஹோட்டல்ல சாப்பிட்டோமே….

நம்ம பையன் பிறந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கா…

நீங்க கொண்டாடி தீர்த்தீங்களே…..

நான் கன்சீவ் ஆனதை சொன்னன்னிக்கு நீங்க ரெக்கை கட்டி பறந்தீங்களே….. நாம வீட்டு வேலை ஆரம்பிக்கும்போது எப்படித்தான் சமாளிக்க போறீங்களோன்னு பயந்தேன்…. நல்லவேளை.. தெய்வம் கூட நின்னுச்சு.. நீங்க சாதிச்சுட்டீங்க…. அப்படி இப்படினு உங்கள் ஞாபக அடுக்கில் நிறைந்திருக்கும் ஏதாவது நல்ல நினைவுகளை மட்டும் பேசுங்கள்…..

முக்கியமாக…. நாம மொத மொதல்ல என்ன படம் பார்க்க போனோம்?? என் கல்யாண பட்டுப்புடவை என்ன கலர் என்பது மாதிரியான கேள்விக்கணைகளை அறவே தவிர்த்து…. அவைகளை நீங்களே சொல்லி நினைவுகூருங்கள்…

உங்களோடு அவர் பேசத்தொடங்குவார்…. பிறகு உங்கள் எதிர்பார்ப்புகளை சொல்லுங்கள்…. நாம ஹனிமூன் போனோமே… அதே இடத்துக்கு நம்ம பிள்ளைகளை கூட்டிட்டு போகணும்ங்க…. உங்க அக்கா நம்ம வீட்ல வந்து சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு…. இந்த வாரம் வரச்சொல்லலாமா…. எங்க அம்மா கேட்டாங்க…. ஒரு நாளைக்கு கூட்டிட்டு வான்னு சொன்னாங்க…. நான்தான் “அவர் பாவம்மா.. ஒரு ஆள் எத்தனை இடத்துக்குத்தான் கிடந்து அலைவார்”ன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்…. அப்படி இப்படின்னு உங்கள் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை நயமாக வெளிப்படுத்திடுங்கள்…

ஏதாவது பணப்பிரச்சினை என்றால் அதை பிரமாண்டமாய் விவரிக்காமல் மிகச்சாதாரண விஷயமாய் சொல்லுங்கள்…

கவலைப்படாதீங்க.. சமாளிப்போம்.. என்று பன்மையில்.. நானும் உங்களுடன் இருக்கிறேன் என்று உணர்த்துங்கள்…

அவ்வளவுதான்….

உங்கள் திருமணமான புதிதில் இருந்த  அதே வசந்தம் மீட்டெடுக்கப்படும்…

ஐம்பதிலும் ஆசை வரும்… இளமை ஊஞ்சலாடும்… வாழ்க்கையில் மேன்மேலும் சந்தோஷம் பெறுக...
சினார் தமிழனின் வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...