Subbiahpatturajan உழவாரப் பணியின் 10 முக்கிய வேலைகள் இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை. உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர்* *திருநாவுக்கரசர்*. பழங்காலத்தில் கோயிலில் கிடைத்த நைவேத்யம், சிறுவருமானத்தை பெற்றுக் கொண்ட சிலர் தெய்வத் தொண்டாக கோயிலை துாய்மைப்படுத்தினர். இதற்காக சில கோயில்களில் மானிய நிலம் கூட இருந்தன* *நம்மை வாழவைக்கும் தெய்வத்தின் இருப்பிடத்தை உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் நம் சந்ததிகள் நலமுடன் வாழ்வர்* *கோயிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணி. இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவிக்கு ’உழவாரப் படை’ என்று பெயர். இதைக் கையில் ஏந்தியபடி இருப்பவர் திருநாவுக்கரசர்* *எப்போதும் உழவாரப்பணி மூலம் கோயிலை தூய்மை செய்தபடி பாடுவது இவரின் பணி. சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்* உழவாரப் பணி என்றால் என்ன? *சிவ ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி எனப்படும்* உழவாரப்பணி *1. பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை எடுத்து குப்பை கூடங்களில் போடுவது* *2. பக்தர
Subbiahpatturajan நல்ல பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..* _ உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது._ _*இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.*_ _சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது._ _*இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.*_ _எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை_ _ *நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கும்.*_ _கெடுதல