முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தங்க நகைக் கடன் எப்படி வாங்கலாம்?How to get a gold jewelry loan?

தங்க நகைக்கடன் - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது ?

How to get a gold jewelry loan?

தங்க நகைக்கடன் என்பது உண்மையில் மிகவும் பாதுகாப்பான ஒரு கடன் திட்டம். நம் வீட்டில் இருக்கும் நகைகளை வங்கியில் அடகு வைத்து, தேவையான பணத்தை கடனாக பெற்று, பின்னர் கடன் தொகையை திருப்பிச் செலுத்தி, நகைகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். வங்கிகளைப் பொறுத்தவரை, தங்க நகைக்கடன்களுக்கு வட்டியும் மிகப்பெரியதாக இல்லை.
தங்க நகைகளை வங்கியில் வைத்து கடன் வாங்குவது என்பது இந்தியாவில் பொதுவாக உள்ள நடைமுறை ஆகும். மருத்துவ தேவை, திடீர் பொருளாதார நெருக்கடி, விவசாய தேவை, தொழில் தேவை என அவரவர் தேவைகளுக்காக தங்க நகைக்கடன் மிகவும் உதவியாக உள்ளது.எனினும், தங்க நகைக்கடன் தொடர்பாக பல சந்தேகங்கள் & கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். அதனை இங்கே தெளிவுபடுத்தியுள்ளோம்.

தங்க நகைக்கடன் என்பது ஒரு பாதுகாப்பான கடன் திட்டம். வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் உங்களது நகைகளை அடமானமாக வைத்து, அதற்கேற்ப உள்ள சந்தை மதிப்பை வைத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். நகைகளை மீட்பதற்கான காலக்கெடு ஓராண்டாக இருக்கும் நிலையில், அதற்குள்ளாக வட்டியுடன் பணத்தை செலுத்தி நகைகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

எந்த மாதிரியான நகைகளை அடகு வைக்க முடியும்?

நீங்கள் உங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைக்கலாம். நகைகளில் கலந்துள்ள தங்கம் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், அதற்கேற்ப உள்ள சந்தை விலையை கணக்கிட்டு கடன் தொகை நிர்ணயிக்கப்படும். தங்கக்கட்டிகள், தங்க காசுகள் ஆகியவற்றை அடகு வைத்து வங்கிகளில் கடன் பெற முடியாது.

தங்கக் கடனை எவ்வாறு பெற முடியும்?
நீங்கள் தங்க நகையை வங்கி அல்லது தனியா நிதி நிறுவனங்களுக்கு கடன் வாங்குவதற்காக எடுத்துச் சென்றால், அங்குள்ள நகை மதிப்பீட்டாளர், உங்களுடைய நகையின் தூய்மையை மதிப்பிடுவார்கள், மேலும் நீங்கள் கடன் வாங்கக்கூடிய கடன் தொகையை உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.

ரிசர்வ் வங்கியின் விதிகளின் படி, நகையின் மொத்த மதிப்பில் 75 சதவிகிதத்தை கடனாக பெற்றுக்கொள்ளலாம். அதாவது, ₹ 1 லட்சம் சந்தை மதிப்புள்ள நகையின் மீது அதிகபட்சமாக ₹ 75 ஆயிரம் வரை கடனாக பெற முடியும். இந்த கடனை வழங்குவதற்காக வங்கிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கும்.

உங்கள் நகை வங்கியில் பத்திரமாக இருக்குமா?
அங்கீகாரம் இல்லாத வங்கி / நிதி நிறுவனங்களில் நகைகளை வைத்து கடன் வாங்குவதில் ஆபத்து இருக்கின்றன. அங்குள்ள பாதுகாப்பு பெட்டகங்களில் உங்களது நகை இருக்கும் என்பதால், அதன் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை.

என்னென்ன ஆவணங்கள் தேவை?
ஆதார், டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒரு புகைப்பட அடையாள அட்டை மற்றும் மின்சார பில் ரசீது, போன் பில் போன்ற முகவரி அடையாள தகவல் உடன் ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ போதும். பான் கார்டு இல்லை என்றால், பார்ம் 60 என்ற ஆவணம் சமர்பித்தால் போதும்.

நகைக்கடனுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?
18 வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்களுக்கு சொந்தமான நகைகளைக் கொண்டு கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
கடன் தொகையை பெற எவ்வளவு நேரம் செலவாகும்?

எல்லா ஆவணங்களும் கையில் இருக்கும் பட்சத்தில் HDFC போன்ற வங்கிகளில், அனைத்து வேலைகளையும் முடித்து 45 நிமிடத்தில் தொகை உங்களது கையில் இருக்கும்.

கடன் தொகையை திரும்ப செலுத்துவதற்கான வழிகள் என்னென்ன  வங்கிகளில் மிக எளிதாக கடன் தொகையை திரும்ப செலுத்த வழிமுறைகள் உள்ளன. நீங்கள் உங்களது வசதிக்கேற்ற முறையை தேர்வு செய்துகொள்ளலாம்.

Upfront Interest: கடன் தொகையை கையில் பெறும் போதே, வட்டியை மிச்சமில்லாமல் செலுத்திவிட்டு, கடன் முடிவடையும் போது அசல் தொகையை திரும்ப செலுத்துதல்.

Bullet Repayment: இந்த முறையில் மாதாமாதம் எந்த தொகையும் செலுத்த வேண்டாம். வட்டி மற்றும் அசல் ஆகிய இரண்டையும் கடன் திட்டம் முடியும் போது செலுத்தினால் போதும்.

Regular EMIs: இ.எம்.ஐ முறையில் மாதாமாதம் தொகையை திரும்ப செலுத்தும் வசதி.

Overdraft facility: பயன்படுத்தப்பட்ட தொகைக்கு மட்டுமே நீங்கள் வட்டி செலுத்தும் வசதி இது

கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் எவ்வளவு?

பொதுவாக தங்க நகைக்கடன் திட்டம் என்பது ஆறு மாதங்களில் இருந்து 2 ஆண்டுகள் வரை இருக்கும். இது கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஏற்ப மாறும்.  திட்டத்தை பொறுத்தவரை கால அவகாசம் ஆறு மாதங்களில் இருந்து 2 ஆண்டுகள் வரை உள்ளது. சிலர் மேலும் சில கால அவகாசம் கேட்டாலும், அதற்கும் வசதி உள்ளது. இந்த வசதியில் வட்டி என்பது கூடுதலாகும்.

கடனை செலுத்தவில்லை என்றால் என்ன ஆகும்? 

கடன் பெறும் முன்னரே, உங்களின் திருப்பிச் செலுத்தும் திறனைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். கடன் தொகையை உரிய கால அவகாசத்தில் செலுத்த தவறும் பட்சத்தில், அந்த நகையை ஏல முறையில் விற்பனை செய்யப்படும்.

தங்க நகைக்கடனுக்கான வட்டி சதவிகிதம் எவ்வளவு? 

கிரெடிட் கார்டு, வீட்டுக்கடன் போன்ற மற்ற கடன்களை விட நகைக்கடன் வட்டி விகிதம் குறைவாகும். 11 முதல் 17 சதவிகிதம் வரை, வங்கிகளைப் பொறுத்து கடன் வட்டி விகிதம் மாறும். இதே வட்டி விகிதத்தில் -

வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் எதை தேர்வு செய்யலாம்?

வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகிய இரண்டிலும் நீங்கள் நகைக்கடன் பெறலாம். எல்லாவற்றிலும் மேலே குறிப்பிட்ட நகையின் மொத்த மதிப்பில் 75 சதவிகித தொகையை கடனாக பெற்றுக்கொள்ள முடியும்.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை  விட வங்கிகள் குறைவான வட்டி விகிதத்தை கொண்டுள்ளன. மேலும், அலைச்சல் இல்லாமல் குறைவான ஆவணங்களைக் கொண்டு எவ்வித மறைமுக கட்டணமும் இன்றி கடன் பெற முடியும். மேலும், உங்களது நகை மிகப்பாதுகாப்பாக இருக்கும்.

கடன் வழங்க எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?

கடன் வழங்கும் திட்டத்தில் குறிப்பிட்ட தொகை செயல்பாட்டுக்கட்டணமாக வசூலிக்கப்படும். இது வங்கிகளுக்கு வங்கி மாறுபடும். எனினும், HDFC போன்ற வங்கிகளில் எவ்வித மறைமுக கட்டணமும் கிடையாது.

தற்போதைய பண நெருக்கடியான சூழலில் அதனை தடுக்க விரைவாக கடன் பெறுவதற்கான ஆதாரங்களை நீங்கள் தேடினால், தங்க நகைக்கடன் முதல் வாய்ப்பாக இருக்கும். தங்கத்தின் சந்தை மதிப்பும் அதிகரித்து வருவதால், கூடுதலான தொகையை நீங்கள் பெற முடியும்.

ஆதலால் நீங்கள் எந்த வித பயமும் இன்றி தங்க நகை கடன் வங்கிகளில் வாங்கி பயன்பெறலாம். இதில் முக்கிய விபரக்குறிப்பு என்ன வென்றால் விவசாய கடன் பெறுவோர் குறைந்த வட்டியில் வாங்கி பெற்றுபயன்பெறலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...