முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொத்து பத்திரங்கள் தொலைத்து விட்டால் என்ன செய்வது?

சொத்து ஆவணங்களைத் தொலைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு உதவும் சட்டங்கள், உபயோகமான தகவல்கள்

  1. முதலில், வழக்கறிஞர் (Advocate) மூலம் ஒரு தமிழ் மற்றும் ஓர் ஆங்கில நாளிதழில் பத்திரம் காணாமல் போனது பற்றிய பொது அறிவிப்பு கொடுக்க வேண்டும். அதில், சொத்து சம்பந்தமான முழு விவரங்கள், சர்வே எண், விஸ்தீரணம் (Area), பட்டா எண், அதன் நான்கு எல்லைகள், பத்திரப்பதிவு எண் உட்பட அனைத்து விவரங்களும் இருக்க வேண்டும். 
  2. அந்த அசல் பத்திரத்தை வைத்துக்கொண்டு யாரும் தவறான வழியில் அடமானம் வைத்து கடன் பெறுதல் போன்றவை செய்யக் கூடாது என்றும், இது சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஏழு நாள்களுக்குள் தெரிவிக்குமாறும் அதில் குறிப்பிட வேண்டும்.
  3. பொது அறிவிப்பு வெளியான ஏழு நாள்களுக்குப் பிறகு, ஒரு 20 ரூபாய் பத்திரத் தாளில் (Stamp paper) உறுதிமொழிப்பத்திரம் (Affidavit) தயார் செய்ய வேண்டும். அதில், அந்தப் பத்திரம் எங்கு எப்படித் தொலைந்தது என்கிற தகவலையும் சொத்து விவரங்களையும் முழுவதுமாகக் குறிப்பிட்டு, பத்திர எண், பதிவுசெய்த சார்பதிவாளர் அலுவலகத்தின் விவரம், யாரிடமிருந்து வாங்கினோமோ அவருடைய பெயர் போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும். 
  4. அந்த உறுதிமொழிப் றனபத்திரத்தில் நாம் கையொப்பமிடுவதோடு, நோட்டரி (Notary) ஒருவரிடமும் கையொப்பம் பெற வேண்டும். பிறகு, நாம் எந்தப் பகுதியில் ஒரிஜினல் பத்திரத்தைத் தொலைத்தோமோ அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு (Inspector - Crime Branch) அவர்களிடம் பின்வரும் ஆவணங்களின் நகல்களை இரண்டு தொகுப்பு (Set) இணைத்துப் புகார் அளிக்க வேண்டும்.
  5.  1. பத்திர நகல், 2. புகைப்பட அடையாளச் சான்று (Id Proof) மற்றும் இருப்பு முகவரி சான்று (Residential Proof) - ஆதார் அட்டை போதுமானது, 3. நாளிதழ்களில் வெளியான பொது அறிவிப்பு (Paper advertisement), 4. வில்லங்கச் சான்றிதழ் (E.C-அன்றைய தேதி வரை), 5. உறுதிமொழிப்பத்திரம்.
  6. நாம் புகார் கொடுக்கும் இடம் மாநகராட்சி யின் எல்லைக்குள் அமைந்தால், அது குற்ற ஆவணக் காப்பகம் (CRB - Crime Record Bureau)-க்கும், மற்ற இடங்களில் அமைந்தால், அது மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம் (DCRB District Crime Record Bureau) அலுவலகத்துக்கும் அனுப்பப்படும்.
  7.  நாம் அனுப்பிய ஆவணங்களை மேற்கண்ட துறையில் பரிசீலனைசெய்து, அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து, அத்துறையால் பராமரிக்கப்படும் குற்றம் மற்றும் நிகழ்வுத்தாள் (C&O sheet - Crime and occurance sheet)-ல் பதிவுசெய்து, அதற்கு ஓர் இலக்கம் கொடுத்து, திரும்பவும் நாம் புகார் கொடுத்த காவல் நிலையத்துக்கு அனுப்புவார்கள்.
  8. அந்த காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் நமக்கு ஒரு சான்றிதழ் கொடுப்பார். அதில் நாம் பத்திரத்தை எங்கு தொலைத்தோம், சொத்தின் முழு விவரங்கள், பத்திர எண் முதலியவற்றைக் குறிப்பிட்டு, crime & occurance sheet-ல் வெளியிடப்பட்டது என்றும், அதற்குக் கொடுக்கப்பட்ட இலக்கத்தையும் குறிப்பிட்டு, மேலும் அந்தப் பத்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தச் சான்றிதழ் பெற்ற பிறகு, சொத்து பதிவு செய்த சார்பதிவாளர் அலுவலகத்தில் நாம் தொலைத்த / தவறவிட்ட பத்திரத்தின் நகலுக்கு (Copy of document) விண்ணப்பம் செய்து, நகலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

முக்கியமாக பத்திரம் தொலைந்துவிட்டாலும் நகலைப் பெறுவதற்கு சொத்து சம்பந்தமான விவரங்கள் நமக்குத் தெரிய வேண்டும். அதற்கு, சொத்துப் பத்திரத்தின் நகல் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும். அதனால் சொத்துப் பத்திரங்களை ஒரு நகல் எடுத்து, அதை ஒரிஜினல் பத்திரங்களுடன் வைக்காமல் தனியாக வைக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...