முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூமியுடன்_தொடர்பில்_இருங்கள்

#பூமியுடன்_தொடர்பில்_இருங்கள் :-

நம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம் அதாவது வெறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம் ? பதில் முக்கால்வாசி இல்லை என்பதே.
வெறும் கால்களுடன் நடந்ததால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லியே காலனிக்கு (செருப்பு) பழகினோம், இப்பொழுது காலனியை விட shoes அணிவதை மார்டனகவும்,பெருமிதமாகவும் கொள்கிறோம்.
சரி இப்போது university of  California மற்றும் journal of Environmental and Public Health இவை இரண்டு அமைப்புகளும் மனிதன் காலனி அணியாமல் வெறும் கால்களுடன் பூமியில் நடந்தால் மனித உடம்பில் ஏற்ப்படும் மாற்றம் பற்றி ஒரு ஆய்வு நடத்தின அந்த ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை பார்ப்போம்.
ஆய்வறிக்கைப்படி நாம் பூமியில் வெறும் கால்களுடன் நடப்பதால் ஏற்ப்படும் நன்மைகள்:
புவி இயற்கையாகவே negative charge (-) கொண்டது மற்றும் anti-oxidants கொண்டது, எனவே வெறும் கால்களுடன் நாம் பூமியில் நடக்கும் போது  உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல்முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது அதாவது உடலுக்கு நேரடியாக பூமியில் இருந்து vitamin "C" கிடைக்கிறது.
உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பரமரிக்கபடுகிறது.
எலும்பு,கல்லிரல்,மூளை(பார்கின்சன்) போன்ற உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட சிதைவு எனப்படும் Chronic Degenerative Diseases  க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
மற்றும் வெறும் கால்களுடன் நடப்பதன் மூலம்  chronic stress, உடல்வலி,தூக்கமின்மை,உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது
தொடர்ந்து ஒருமணிநேரம் இடைவெளியில் பூமியில் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் இரத்தஓட்டம்  அதிகரிக்கிறது மற்றும் சீராகபராமரிக்கப்படுகிறது, இதன் மூலம் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கிறது   (முகத்திற்கு முகபொலிவிற்காக பயன்படுத்தும் cream அவசியம் இருக்காது))))
மிகமுக்கியமாக blood viscosity (((இரத்த பாகுத்தன்மை))
குறைக்கப்படுகிறது இதனால் இதயநோய்கள் முற்றிலும் குறைக்கபடுகிறது.
எனவே இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் இதுவே நமக்கும் நம் தலைமுறைக்கும் நல்ல வாழ்வியலை தரும் மற்றும் நாகரிகத்தால் வரும் நோய்களை களையெடுக்கும்.
முடிந்தவரை மரகன்றுகளை நட்டு பராமரியுங்கள்.
Regenerate & Save forest
நன்றி ; வாழ்க வளத்துடன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...