முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் பிற மொழிச் சமுகங்களால் தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

Subbiahpatturajan

தமிழக இடஒதுக்கீட்டின் அவலநிலை..?!

Tamils ​​are cheated by other language communities of India

பிராமணர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்றும் அவர்களுக்கு ஒரு நாள் ஊதியமே வெறும் 2000/ரூபாய் தான் கிடைக்கிறது அதனால் தான் நாங்கள் இந்த இட ஒதுக்கீடுகள் செய்து கொடுக்கிறோம் என்று நீதிபதி சொல்கிறார்கள்.இது போதாது என்று இவர்களுக்கு வருமான வரி விலக்கு 800000 வரை செய்து கொள்ள முடியுமாம் இன்னும் பல இந்த தீர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்தியாவின் பிற மொழிச் சமுகங்களால் தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

நீதி அரசர்களுக்கு நியாயமான 3 கேள்விகள் 

1.முதல் கேள்வி இப்போது உள்ள சமுகத்தில் இவர்கள் பின் தங்கிய சாதியினரா?
2. இவர்கள் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் மட்டும் தான் சம்பாதிக்கின்றார்களா? மற்றவை இந்த கணக்கில் எழுத… சக மனிதர் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிக்க முடியாத சமூக மக்கள் இந்த இந்தியாவில் இருக்கும்போது இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.
3. இந்தியாவில் எல்லோருக்கும் ஆன ஐந்து லட்சம் ரூபாய் வருமானவரி விலக்கு இருக்கும்போது இவர்களுக்கு மட்டும் எட்டு லட்ச ரூபாய் வருமான வரி விளக்கு அளித்திருப்பது வெட்கக்கேடான செயல் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் எப்படி எட்டு லட்ச ரூபாய் அளவுக்கு இவர்களுக்கு மட்டும் அறிவிலக்கு செய்து கொடுக்க முன் வந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தமிழக சாதியப் பட்டியலும் பிறமொழியாளர்களின் சாதியப் பட்டியலும்

ST பட்டியலில் மொத்த  சாதிகளின் எண்ணிக்கை = 36 கொண்டாரெட்டி, மலையாளி, மலையக்கண்டி, ஊராளி, காட்டு நாயக்கர், கம்மாரா, கொரகா, மலை அரையர், குடியா, கண்யான், இது போல இந்த பட்டியலில் உள்ள 36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர். 
SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76. ஆதி ஆந்திரர், ஆதி கர்நாடகர், அஜிலா, பைரா, ராணேயர், பஞ்சமா, நாயாடி, டோம், ஜக்கலி, பகூடா இது போல இந்த பட்டியலில் உள்ள 76 சாதிகளில் 40 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள். 
BC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 138. பில்லவா, செளத்திரி, கெளடா, ஜெட்டி, கன்னடிய நாயுடு, கேரள முதலி, மராட்டியர், ஒதியா, ரெட்டி, சாலிவாகனா, லம்பாடி, இது போல இந்த பட்டியலில் உள்ள 138 சாதிகளில் 65 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள். 
MBC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 41.  பெஸ்கா, பட்ராஜீ, இசை வேளாளர், சீவியர், ஜோகி, கொரச்சா, தெலுங்கு பட்டி செட்டி, தொம்மரா, நோக்கர், ஜம்புவானோடை, இது போல இந்த பட்டியலில் உள்ள 41 சாதிகளில் 20 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள். 
DC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 68.  பட்டுதுர்காஸ், சக்கலா, தெலுங்கு பட்டி செட்டிகள், மொந்த கொல்லா, தொங்க போயர், தொம்பர்கள், நோக்கர்கள், போயர்கள் , இது போல இந்த பட்டியலில் உள்ள 68 சாதிகளில் 35 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.
 முற்பட்டபட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கை= 79. ஆங்கிலோ இந்தியர், லண்டன் மிஷன், மலங்கரா, சட்ஸி, மைமன், நவாப், குதுப்பத்தான், நாயுடு, மூசிக பலிஜ குலம், கொண்ட ரெட்டி, இது போல இந்த பட்டியலில் உள்ள 79 சாதிகளில் 40 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள்.
 இவர்கள் எல்லாம் இங்கு இட ஒதுக்கீடு பெறுவது எப்படி என நாம் இது வரை சிந்தனை செய்தது உண்டா?
தமிழ்குடிகளால் வேறு மாநிலத்தில் அந்த மாநில அரசு பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியுமா? 
ஆனால் இங்கு மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும், மற்றும் பிற மொழியினரும் இங்கு இட ஒதுக்கீட்டை அனுபவித்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து பலன்களையும் இந்த நிலத்தில் அனுபவித்து வருகின்றனர். இது யாருக்கும் தெரிவதில்லை. தமிழகத்தில் உள்ள சாதிய எண்ணிக்கையில் பிற மொழியை சார்ந்த சாதிகள் தான் அதிகம். இதை பற்றி யாராவது இந்த நிலத்தில் பேசியது உண்டா? 
இது தெரியாமல் தமிழ்குடிகளுக்கு இட ஒதுக்கீடு பற்றிய போதிய தெளிவான பார்வை இல்லை.  ஏதோ குறிப்பட்ட மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருப்பது போல பொது வெளியில் பேசிக் கொண்டு தன்னை அறிவாளி போல காட்டி கொள்கிறது முட்டாள் தமிழ் சமூகங்கள்.
 இட ஒதுக்கீடு முறையில் தமிழ் சாதிகளை விட பிற மொழி சாதிகள் தான் அதிகளவு பயன் பெறுகிறார்கள். இதை கேட்க யாருக்கு தைரியம் உள்ளது. இங்கு தான் தமிழ் சாதிகளுக்குள் அடித்து கொள்வதற்கு மட்டுமே நேரம் உண்டு. இத்தனை உரிமைகளையும், அதிகாரத்தையும், பலன்களையும் பிற மொழி சாதியினருக்கு கொடுத்தவர்கள் திராவிடர்கள் தான். திராவிடர்கள் தான் இத்தனை பிற மொழி சாதிகளை இங்கு இடம் பெற செய்து நாம் முழுமையாக பெற வேண்டியதை பிற மொழி சாதியினரும் அனுபவிக்க காரணமானவர்கள். இந்த மண்ணில் திராவிட ஆட்சி தொடரும் வரை இந்த அவல நிலை இருக்க தான் செய்யும். இதற்கான ஒரே தீர்வு மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார முறையில் இட ஒதுக்கீடு. 

 சட்டநாதன் அறிக்கை போல நாம் மக்கட்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்டால் இங்கு பிற மொழி சாதியினர் பயன்பெறும் அளவு குறையும்‌‌. முடிந்தால் தமிழ் குடிகள் ஆதரவு தாருங்கள். இல்லை எனில் இந்த நிலத்தை பிற மொழி சாதியினர்  ஆக்கிரமிப்பு செய்வது உறுதி. பாதி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். இழந்தவற்றை மீட்க, உரிமையை வெல்ல, நிலத்தை காப்பாற்ற, அதிகாரத்தை கைப்பற்ற, ஆட்சியை கைப்பற்ற தமிழர்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...