முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாத்ரூம் கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம்...!?

Subbiahpatturajan






60/65 வயதிற்கு மேற்பட்ட  இருபால் அன்பர்களுக்கும்
சில முக்கியமான டிப்ஸ்:-

1.பாத்ரும் செல்லும்
பொழுது(வீட்டில்)
கதவை சும்மா சாத்தி வைங்க,
தாழ் போடவேண்டாம்.

2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது
நடக்கவேண்டாம்.

3.ஸ்டூல்,நாற்காலி,பெஞ்ச் போன்றவற்றின் ‌.மீது ஏறி
பொருட்களை எடுப்பது,சுத்தம் செய்வது, துணிகளை
காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும்.

4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே
கூடாது.கூட யாராவது
கண்டிப்பாக இருக்க
வேண்டும்.

5.மாத்திரை மருந்துகளை
வேளா வேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்..

6.உங்களை எந்தவிஷயம்
சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ்
செய்ய வேண்டாம்.

7.வங்கிக்கு பணம்
எடுக்கச்சென்றால்
தனியாகச்செல்ல வேண்டாம்.துணையுடன்செல்லவும்.

8.வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர்
யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை
தவிர்க்கவும்.அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும்.

9.கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை 
ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண
சூழலில் அழைப்பதற்கு உதவும்.

10.சைக்கிள் முதல் கார் வரை அனைத்து வாகனங்கள்
ஓட்டுவதை முடிந்த அளவு தவிர்க்கவும்.



11.வாழும் காலத்தில் உடல்நலம், மன அமைதி, மன மகிழ்ச்சி,
உறவினர்கள் நண்பர்கள் தொடர்பு மற்றும் துணை போன்றவை
அதி முக்கியம். மிக மிக அவசியம். எல்லோரிடமும் இனிமையோடு பழகவும்.

12.கடந்தகாலம்  மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் வேண்டாம்.
நிகழ்காலம் உன்னதமானது. அதை முழுமையாக, மகிழ்ச்சியாக,
இனிமையாக  அனுபவித்து வாழுங்கள்.

ஒவ்வொரு மகனும் , மகளும் படித்து உணர வேண்டியது

பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும்,
தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும்
கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க
வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு
முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை
கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி,
மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு
பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான்
பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத்
தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக
இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே
வயதான காலத்தில் வாய்திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர்
தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப்
பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.

மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்.

பேரன் பேத்திகளை அவரிடமிருந்து பிரிக்காதீர்கள். அவர்கள்
தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்



குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு,
இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே,
இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட
அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம்
அமைதியாகக் கழிவதற்கு வழி செய்யுங்கள்.

வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.
ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால்
தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.



தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக்
கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து
தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண்
சூழலுக்கு ஏற்றாற்போல வளைந்து கொடுப்பாள்.

குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன்,
பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை,
தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் என
வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை
இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை
உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்.
அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்!

*ஒவ்வொரு மகனும் , மகளும் படித்து உணர வேண்டியது .*
--  .




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...