முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது உங்களுக்காக மட்டுமல்ல, இந்த ஒட்டுமொத்த மனித குலத்துக்கானதாக இருக்கட்டும்.

https://www.cinartamilan.com/2021/06/blog-post_18.html
Subbiahpatturajan





*தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி...*

*தோல்வி*

தோல்வி நிலையானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு வெற்றிகரமான வாழ்க்கையில் அது ஒரு சிறு பின்னடைவு அவ்வளவுதான். அந்த சிறு நிகழ்வை வேலைப்பாடு மிகுந்த அழகிய திரைச்சீலையாக மாற்றுவது உங்கள் படைப்பு சாதனை. மீண்டும் நினைவில் கொள்ளுங்கள், தோல்வி ஒரு தற்காலிக நிகழ்வே. 

தவறு.

தோல்வி என்பது ஒன்றைத் தவறாகச் செய்தலே என்று அர்த்தப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தோல்வியிலும் சில சாதகமான அம்சங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு விஷயத்தை எப்படி அணுகக் கூடாது என்பதை அது நமக்கு கற்றுத் தருகிறது. ஒன்றை எப்படி செய்யக்கூடாது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், அதை எப்படி நேர்த்தியாக செய்வது என்பதையும் நீங்கள் அறிந்து கொண்டுவிடுவீர்கள். 

3. *கற்றல்*

உங்கள் தோல்விகளிலிருந்து, தவறான பாதை எது என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்ட நிலையில், உங்கள் வெற்றிகள் உங்களுக்கு அதை விடவும் சிறந்த பாடங்களைக் கற்றுத் தரும். அதன் பின் நேர்வழி எது என்பது பற்றி உங்களுக்கு சந்தேகமே இருக்காது. 

4. *ஒருபோதும் வேண்டாம்*

தோல்விகளை ஏற்றுக் கொள்ளவே வேண்டாம். தோல்விக்கான சூழல்களை உங்கள் நினைவுகளிலிருந்து விலக்கியே வையங்கள். வெற்றித் துணுக்குகளை மனதுக்குள் அசைபோடுங்கள். 

5. *சிந்தனை*

தாமஸ் ஏ. எடிசன் தன்னுடைய அலுவலக வாசலில் இவ்வாறு எழுதியிருக்கிறார்: *“இதை இன்னும் சிறந்த வழியில் செய்யலாம். அதைக் கண்டுபிடியுங்கள்.”* எல்லாம் சரி. ஆனால் அதை எப்படிக் கண்டுபிடிப்பது. பிரார்த்தனையால் முடுக்கப்பட்ட ஒழுக்கம் மற்றும் படைப்பு சிந்தனை அதற்கு உதவும். 

6. *சுறு சுறுப்பு*

தளராத உழைப்பு இன்றி வெற்றிகள் சாத்தியமே இல்லை. தளராத மனதுடன் உழைப்பு.. மேலும் உழைப்பு என்றிருப்பதே வெற்றிச் சாதனையின் ‘திறவுகோல்’. கடினமாய் உழைக்கும் திறனும், அதைத் தொடர்ந்து செய்து வருவதுமே வெற்றிமாலை சூடச்செய்யும். 

7. *இலக்கு*

வெற்றியாளர்கள் அனைவருக்குமே ஒரு இலக்கு இருக்கும். ஆனால் அது ஒளி மங்கிய, முடிவற்ற ஒன்றாக இருக்காது. மாறாக தீர்க்கமான, தெளிவாக விளக்கக்கூடிய, வரன் முறைக்குள் அடங்கியதாக இருக்கும். எங்கே போக வேண்டும் என்று தெளிவில்லாதவனால் எங்கேயுமே போகமுடியாது. எனவே ஒரு உறுதியான, பிராத்தனையை மையமிட்ட ஒரு இலக்கை வகுத்துக் கொள்ளுங்கள். 

8. *நேர்மை*

எப்போதுமே உங்கள் இலக்கு நேர்மையானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தவறான ஒரு இலக்கு ஒருபோதுமே சரியானதாக இருக்காது. தவறு, தவறில்தான் போய் முடியும். நேர்வழியே, நேர்நிலையை உருவாக்கும். எனவே எப்போதும் நேர்மையாகவே இருங்கள். 

9. *கேள்வி*

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டியதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறீர்களா என்று கடவுளிடம் கேளுங்கள். அவர் வழிகாட்டுவார். இறுதி கணக்கீட்டின்போது கடவுள் காட்டிய வாழ்க்கைதான் நிலையான உண்மையை சென்றடையும். 

10. *நல்வழி*

சுயநலமற்ற பிரார்த்தனையே வெற்றிக்கான நிச்சய வழி. இந்த உலகில் நீங்கள் செய்ய விரும்பும் மிகச்சிறந்தவற்றைப் பற்றி ஆழமாக சிந்தியுங்கள். உயர்ந்த மதிப்பீடுகளை எட்டிப் பிடியுங்கள். இது உங்களுக்காக மட்டுமல்ல, இந்த ஒட்டுமொத்த மனித குலத்துக்கானதாக இருக்கட்டும். அனைத்துவிதமான உங்கள் வாழ்வியல் அனுபவங்களையும், வெற்றி முனைப்பு என்னும் தளத்தில் குவியுங்கள். 

இதை புரிந்துகொண்டால் ...

💐 *வெற்றி நிச்சயம்* 👍

🌿 *வாழ்க வளமுடன்* 🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...