முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே...???

Subbiahpatturajan




ஏன்?
எதற்கு?
என,
சிந்தித்துண்டா?

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்


டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே 

நல்ல வேலைக்கு போகவா?

ஆங்கிலம் சரளமாக பேசவா?

குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??

ஏன்?
எதற்கு?
என்று சிந்தித்ததுண்டா??

11TO12 200000 லட்சம் ஆக மொத்தம்

Pre kg 25000 ல் துவங்குகிறது 

Lkg 40000
Ukg 50000
1st.60000
2ND 70000
3D. 80000
4TH 90000
5TH 100000
6TO8 1.20000

9TO10. 150000 9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.

சரி!
இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?

உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்

அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?

 ஒன்றை நினைவில் வையுங்கள்.  உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்கு கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவளித்து??

தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வரமுடியுமா?
சரி!
இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?

CBSE கல்லூரியிலா??
அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே??

அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான் இல்லையா?

இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,
மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?

இல்லை!
இல்லவே இல்லை!

இப்போது உங்கள் பிள்ளைகளோடு,அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?

பத்துலட்சத்திற்கு மேல் செலவளித்து படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியை பணமே செலவளிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் பிடிக்கவில்லையா?

இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி கடைசியில் ஏமளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?

 உங்கள் பிள்ளை சாதனையாளனா?

 இல்லை பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?

உங்களுக்கு தெரியுமா?

 TNPSC தேர்வில் தேர்வாகும் 99 சதவீதப்பேர் அரசுப்பள்ளியில் தமிழில் படித்தவர்கள் என்று?

TET தேர்வில் வெற்றி பெற்று  அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?

 இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?

ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?

உங்களால் ஆனித்தரமாக எடுத்துக்கூற முடியுமா? CBSE ,மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?

அந்த பள்ளிகளை பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்களாம் ??

இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள்

 அன்புப் பெற்றோர்களே?

அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்??

வாருங்கள் குரல் கொடுப்போம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள்(உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் கடைநிலை அலுவலக ஊழியர்களின் பிள்ளைகள் வரை) அரசுப்பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்ற குரல் கொடுப்போம்.

அப்படி சட்டம் இயற்றுவார்களா?

இயற்றினால் என்ன நடக்கும்?

அரசுப்பள்ளியில் அமைச்சர் மகனுடனும், கலெக்டர் மகனுடனும் நம்பிள்ளைகளும் படிப்பார்கள்.

கட்டட வசதிகள் அதிகமாகும்.

 சத்துணவு சத்தான உணவாகும்.

 நவீன  முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும்.

நம் செலவுகள் குறைக்கப்பட்டு நம் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கப்படும்.

சிந்திப்போம்!
மற்றவரின் சிந்தனையைத்தூண்டுவோம்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...