முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னொரு காலத்தில் பெண் சுதந்திரம் என்பது


Subbiahpatturajan

#பெண்சுதந்திரம்

காஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் உள்ள கிராமம் தான் நான் வளர்ந்தது.

என் வீட்டில் எல்லாம்  எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது ஆனா அக்கம் பக்கத்து வீடுகளில் பெண்களோட அடிப்படை உரிமைகள் கூட அவங்க பெற்றோர்களாலேயே பறிக்கப்படுவதை நேரில் பார்த்து வெறுத்துப் போய் இருக்கிறேன்.

பொட்ட புள்ளைங்க விளையாடக்கூடாது. பூமி அதிர நடக்கக்கூடாது.வாய்விட்டு சிரிக்க கூடாது . சமையல்கட்டு உள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும் .

ஆனால் இந்த கட்டுப்பாடு எல்லாம் ஆம்பளை பசங்களுக்கு கிடையாது .அதை விட கொடுமை சாப்பாடு விஷயம் தான். ஆண்பிள்ளை பசங்களுக்கு நிறைய சாப்பாடு போடுவாங்க பொம்பளை பசங்களுக்கு கம்மிதான் சொந்த அம்மா அப்பாவே இதை பண்ணா எப்படி இருக்கும் ஆம்பளையாகட்டும் பொம்பளையாகட்டும் வயிறு ஒன்றுதானே .
அப்பவே எங்க அம்மாகிட்ட ஏம்மா இப்படி பண்றாங்கன்னு சண்டை போட்டு இருக்கேன்.
அதுல எங்க அம்மா நம்ம வீட்டில இப்படி இல்லை மத்தவங்க வீட்ல நடக்கிற தான் நாம எப்படிமா கேட்க முடியும் என்று சொல்லுவாங்க.

நீங்களும் அந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கீங்களா...?

அந்த சமயத்துல அம்மா அப்பாவை எதிர்த்து ஒன்றும் பண்ண முடியாது ஒரு முட்டை பண்ணா கூட ஆம்பளை பையனுக்கு முழு முட்டை சாப்பாட்டுல வைப்பாங்க ஆனா பொம்பிளைக்கு   பாதிதான் அதுகூட ஆம்பளைங்க சாப்பிட்டது போக மிஞ்சினால் தான்.

 கேட்டா பெண் பிள்ளைகளுக்கு வயிற்றைச் சுருக்கி
வளர்க்கணும்பாங்க.

இப்போ நான் என் பிள்ளைகளை அந்தமாதிரி பாகுபாடு பார்க்கிறதே இல்லை எனக்கு ரெண்டு பொண்ணு ஒரு பையன் எல்லோருக்கும் சமமாக தான் சாப்பாடு போடுவேன்
இன்னும் சொல்லப்போனா பொட்டபுள்ளைக்கு ஒருகை அதிகமாகவே நாளைக்கு நெறைய வேலை செய்ய உடம்பில் தெம்பு வேணும்ல.

உங்க கல்யாணம் எப்ப நடந்துச்சு அதுல ஏதாவது உங்கள் தனிப்பட்ட விருப்பத்தை கேட்டாங்களா...


கல்யாணம் நடந்து 17 வருஷமா ஆச்சு.

 பஸ்ல வர்றப்ப எங்க மாமனார் என் பெரியப்பா கிட்ட உங்க ஊர்ல ஏதாவது பொண்ணு இருக்கான்னு கேட்க அப்படி கேள்விப்பட்டு தான் என்ன பொண்ணு பார்க்க வந்தாங்க.

 18 பொண்ணு பாத்துட்டு கடைசியா என்னை அவங்களுக்கு பிடிச்சு போகவே இரண்டாவது தடவை
வரும்போது என் கணவரை கூட்டிட்டு வந்தாரு அப்பதான் அவரைப் பார்த்தேன்.
எனக்கு அவரை சுத்தமா பிடிக்கல என்ன... அவரு எம்ஜிஆர் மாதிரி ஸ்டைலா இல்ல தேமேன்னு ரொம்ப அப்ரானியா  இருந்தாரு இத்தனைக்கும் பேண்ட் சட்டை தான் போட்டு இருந்தார்.

 ஆனால் என்னமோ அவரை பிடிக்கல.

அவர் போனதும் என் அம்மாகிட்ட அவரை கட்டிக்க இஷ்டம் இல்லன்னு சொல்லிட்டேன்.

 
ஆனா அவங்க கேட்கவே இல்ல அழுது கூட பார்த்தேன் ஒன்னும் நடக்கல என்ன செய்கிறது அவ்வளவுதான் ஒப்புக்கொண்டேன்.


பாத்தீங்களா ஒரு பெண்ணுக்கு அவை இஷ்டப்பட்ட கணவரை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட தரப்படவில்லை.


பெண்களுக்கும் மனது ஒன்று இருக்கிறதே... இவங்க யாருமே அதை ஒரு பொருட்டாக உணர்வதில்லை.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...