முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Femi otedolo மகிழ்ச்சியான பணக்காரர்கள்

Subbiahpatturajan




உலக பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா. இவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்... 

அவர் ஒரு நேர்காணலில் ....

 "உங்களை 
வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு ..

ஃபெமி கூறினார்:
"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் பொருளை புரிந்து கொண்டேன்."

1.முதல் கட்டமாக செல்வத்தை சேர்த்தேன், ஆனால் இதில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.

2.பின்னர் மதிப்புமிக்க பொருட்களை சேர்க்கும் கட்டம். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் இன்பமும் தற்காலிகமானது என்பதை உணர்ந்தேன். மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது.

3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% எரிபொருள் ( டீசல்) விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவே இல்லை.

4. இறுதிக்காலத்தில் தான் என் நண்பன் அவனுக்கு தெரிந்த பள்ளியில் ஊனமுற்ற  குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கி கொடுக்க சொன்னான், கிட்டத்தட்ட200 குழந்தைகள்.

என் நண்பன் கேட்டதற்காக நானும் உடனடியாக சக்கர நாற்காலிகள் வாங்கினேன்.

ஆனால் நண்பனோ  நானும் அவனுடன் வந்து சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தினான்.  நானும் மன மாறுதலுக்காக அவனுடன் சென்றேன்.

அங்கே சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு  நானே கொடுத்தேன். அப்போதுதான்  அந்த குழந்தைகளின் முகங்களில்  ஒருவிதமான ஒளிவீச்சைக்  கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து, சுற்றி, நகர்ந்து வேடிக்கை  பார்த்தனர்.

அவர்களின் மகழ்ச்சியை  என்னால் விவரிக்கவே முடியவில்லை... அது
எனக்குள் ஏதோ சொல்லமுடியாத ஒரு அற்புதத்தை உணர்த்தியது.

எல்லாம் முடிந்து நான் வெளியேற முடிவு செய்த போது அவர்களில் ஒரு பெண் குழந்தை என் கால்களை மிக நேசமாக பிடித்து கொண்டது,  நான் சிரித்து கொண்டே என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்து கொண்டே விடாமல் இறுக பிடித்து கொண்டது.

நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உனக்கு வேறு ஏதாவது வேணுமா?

அந்த குழந்தை எனக்கு அளித்த பதில் மிகுந்த திருப்தியை தந்து வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகு முறையையும் முற்றிலுமாக மாற்றியது.

அந்த குழந்தை கூறியது  இது தான்:

‌"நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை  சொர்க்கத்தில் சந்திக்கும் போது, உங்களுக்காக கடவுளிடம் பேசி நான் உங்களுக்கு பிடித்ததை வாங்கி தருகிறேன் என்று சொல்லி அந்த சக்கர நாற்காலியில் ஏறி மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்று விட்டது... தெய்வத்தின் அருளை நான் அன்று தான் முழுமையாக உணர்ந்தேன்....

பகிர்வு...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...