முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு எதையும் சாதிக்க போவது இல்லை

Subbiahpatturajan
நல்லா போயிண்டுருந்த லைப்ல ஹெல்த் பத்தி சொல்லறேன்னு எல்லாரும் ஆரம்பிச்சாங்க பாருங்க
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு எதையும் சாதிக்க போவது இல்லை

அய்யய்யோ...

காலையில் எழுந்தவுடனே வெறும் வயத்திலே முதல்ல ஒரு டம்பளர் தண்ணீர் குடிக்கணும்னு சொன்னா. அப்புறம் இல்லே ரெண்டு டம்பளர் வெந்நீர் தான் குடிக்கணும்னா. அப்புறம் இல்லை வெறும் வெந்நீர் இல்லை அதிலே எலுமிச்சம்பழம் பிழிஞ்சு, ரெண்டு சொட்டு தேன் விட்டு குடிக்கணும்னா. அப்புறம் அதிலே கொஞ்சம் இஞ்சி தட்டி போட்டு குடிச்சா ரொம்ப நல்லதுன்னா. ஆக இப்போ காத்தாலே நான் தண்ணீர் குடிக்கறதையே நிறுத்திட்டேன்.

 வாக்கிங் சோதனைகள்

வாக்கிங் சோதனைகள்
 - அடுத்தது வாக்கிங் போகலாம்னு பார்த்தா, முதலேயே வேகமா நடக்கப்படாது மெதுவா நடந்து அப்புறம் வேகத்தை கூட்டி மறுபடியும் முடிக்கறச்சே மொள்ள நடக்கணும்னா வெறும் வாக்கிங் போறாது. எட்டு போட்டு நடக்க சொன்னா. அதனாலே பலன் பல மடங்கு பெருகும்ன்னு சொல்லி ஒழுங்கா நடந்துண்டு இருந்தவனை கெடுத்து எட்டு போட்டு தலை சுத்த வெச்சு. வாக்கிங் க்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வெச்சாச்சு.

அடுத்த ஆப்பு சாப்பாட்டுல

அடுத்த ஆப்பு சாப்பாட்டுல
அந்த கதையாவது பரவாயில்லை - காபி, டீ தொடப்படாதாம். பால் நிறைய சேர்த்துக்க கூடாதாம். நாம ஆரோக்கியமா இருக்கணும்னா கண்ராவி கசப்பா பிளாக் காபியோ, க்ரீன் டீயோ குடிக்கலாமாம்...., அதுக்கு நான் சும்மாவே இருந்துடுவேன்.
அப்புறம் பிரேக் பாஸ்ட் இட்லி தோசை கூடாது. பிரட் தான் பெஸ்ட். பொங்கல் மாதிரி ஹெவியா சாப்பிடப்படாது. பூரி கூடாது. இன்னும் ஏதேதோ சொல்லி அதுவும் நிறுத்தப்பட்டது.
இப்போ மத்தியானம் நிறைய சாதம் சாப்பிடாதைக்கு வேக வெச்ச கறிகாய் இல்லேன்னா மைல்டு பொரித்த கூட்டு, அதிகமா மசாலா சேர்க்காமல் நிறைய சூப் சேர்த்துக்கலாம்னு சொன்னா. உருளைக்கிழங்கு , வாழைக்காய் சாப்பிடக்கூடாதாம்.  தயிர் அதுவும் கெட்டியா கூடவே கூடாதாம். ஐஸ் வாட்டர் கூடவேகூடாது.
சரி சாயங்காலம் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடலாம்னா நமக்கு பிடிச்ச கேசரி, பஜ்ஜி போண்டா அதெல்லாம் கூடாதாம். வித விதமான பழங்களை அழகா நறுக்கி ஒரு பெரிய பௌல்ல வெச்சுண்டு ரசிச்சு ருசிச்சு சாப்பிடணுமாம்.
ராத்திரி ரொம்ப பசித்தால் மட்டுமே டின்னர் சாப்பிடணுமாம். அதுவும் ரெண்டு சுக்கா ரொட்டி தால்(பருப்பு) தொட்டு சாப்பிடலாமாம். அப்புறம் ராத்திரி பால் சாப்பிடாதே,  வேணும்னா ஒரு டம்ளர் வெந்நீர் குடி.

தூக்கத்தில் துக்கம்

அதுக்கப்புறம் தூங்கறதுக்கும் தடா. இடது பக்கம் படுக்கணும். அப்போதான் இதயம் இயல்பா இருக்கும்னு சொன்னா அப்புறம் வலது பக்கம் படுத்தால்தான் கொழுப்பு ஜீரணமாகும்னு சொன்னா.. மல்லாக்கா படு அப்போதான் பார்கின்சன், அல்சைமர் எல்லாம் வராதுன்னா. இல்லேயில்லே குப்புற படுத்தால் நல்லது. தொப்பை வராது. ஒபிசிட்டி வராதுன்னு சொன்னீங்க ஏன்டா நான் magazine படிச்சது தப்பா இல்ல நீங்க சொல்லித் தந்தது பொய்யா? எங்களோட முன்னோர்கள் கூட இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை....அய்யோ...🙆🙏

கடைசியா ஒன்னு சொல்றேன்

அடேய்ய்...! அடங்குங்கடா எல்லாரும்... 
இப்படி எதுவுமே சாப்பிடாம ஆரோக்கியமா இருந்து ஒண்ணும் கிழிக்க வேண்டாம். எனக்கு பிடிச்சதை சாப்டுட்டு, சந்தோஷமா எப்போதும் போல 'ஜாலிலோ ஜிம்கானா'ன்னு பாடிண்டு போயிண்டே இருக்கேன்..! என்னிக்கு இருந்தாலும் ஒரு நாள் நான் மேலே போய்த்தானே ஆக வேண்டும், இப்படி எல்லாரும் பட்டினியா(டயட்டில்) இருந்து யாராவது இங்கேயே தங்கி இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா? ம்ம் இத உங்களுக்கு சொல்லி புரிய வைக்க ஏதோ முயற்சி பண்ணி இருக்கேன்.

ஏன் கோவில் கட்டி வச்சாங்கன்னா...

ஏன் கோவில் கட்டி வச்சாங்கன்னா...
மக்கா நம்ம முன்னோர்கள் ஏன் இவ்வளவு பெரிய உயரத்தில் போய் ஏன் கோவில் கட்டி வச்சாங்கன்னா...நாம எல்லாரும் ஆரோக்கியமாக இருக்கனும்னு தாம்ல... நான் திருநெல்வேலிகாரங்க ஏதோ மண்டயில உரச்சத சொல்லிபுட்டேங்க நல்லா சாப்பிடுங்க மக்கா ஆனா வாரத்துல ரெண்டு தடவ மலை கோவிலுக்கு போகனும் .
மக்கா ... சாமிகிட்ட ஆரோக்கியம் கேட்க தேவை இல்ல அது தண்ணால வரும்ல என்ன நான் சொல்றது....

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
சபாஷ் சரியான போட்டி நாவிற்கு எது பிடிக்கும் அதை சாப்பிட வேண்டும் கட்டாயம் அவ்வளவு தான்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...