Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
மின்சார ஆதார் இணைப்புக்கான முழுமையான வழிகாட்டி - மின்சாரக் கட்டணம் செலுத்துவது எப்படி எளிமையான விளக்கம்.
Subbiahpatturajan
ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியை தொடங்குவதற்கு முன்பாக...
தங்களது ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஆதார் அட்டையின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் 500 'கே.பி.' அளவுக்கு மிகாமல் அதனை தயாராக வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tangedco.gov.in என்ற இணையதள பக்கத்திற்கோ அல்லது மின்சார வாரியத்தில் ஆதார் அட்டை இணைக்க என்ற இணையதள பக்கத்திற்கோ சென்று ஆதாரை இணைக்கும் பணியை தொடங்க வேண்டும்.
முதலில் மின் இணைப்பு எண், அதன்பின்பு செல்போன் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும். இதன்பின்பு செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதனை பதிவிட வேண்டும்.
அடுத்த பக்கத்தில் உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா அல்லது வாடகைதாரரின் ஆதார் எண்ணா என்று விவரமும் கேட்கப்படும். சரியான தகவலை அளித்து, ஆதார் எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஆதார் எண்ணில் இருக்கும் பெயரை பதிவிட வேண்டும்.
இதன்பின்பு தயாராக வைத்திருக்கும் 300 'கே.பி.' அளவுள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பின்னர், கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என சான்றளித்து 'சப்மிட்' செய்ய வேண்டும். இதன்பிறகு உங்களது ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டது. விரைவில் இணைப்பு உறுதி செய்யப்படும் என்ற பதில் வரும். இத்தோடு ஆதாரை இணைக்கும் பணி முடிவடையும்.
வாடகை வீட்டில் குடியிருப்போர் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாடகைக்கு குடியிருப்போர் ஆதார் எண்ணை இணைக்கும் போது சம்பந்தப்பட்ட நபர் தங்களது வீட்டில்தான் வாடகைக்கு குடியிருக்கிறாரா என வீட்டின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் உறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்