Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
இந்திய மக்களின் இப்போதைய அலட்சியம் நாளை உங்கள் குழந்தைகள் வரை பாதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
Subbiahpatturajan
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவு சிக்கலானது
இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் உள்ளன. தனியார் துறை மிகவும் திறமையானது மற்றும் போராடும் பொது நிறுவனங்களைத் திருப்ப முடியும் என்று சிலர் நம்புகிறார்கள், மற்றவர்கள் பொதுத் துறை மிகவும் பொறுப்புடன் மற்றும் பொதுமக்களின் தேவைகளுக்கு பதிலளிக்கக்கூடியது என்று நம்புகிறார்கள்.
இந்தியாவில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் செயல்முறை "முதலீடு" என்று அழைக்கப்படுகிறது. 1990 களின் முற்பகுதியில் இருந்து இந்திய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக, அரசாங்கத்தின் மீதான நிதிச் சுமையைக் குறைக்கவும், பொருளாதாரத்தில் போட்டியை அதிகரிக்கவும் இது உள்ளது. எவ்வாறாயினும், இந்த செயல்முறை விமர்சனங்களை எதிர்கொண்டது, இது வேலை இழப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலைக் குறைக்கும், குறிப்பாக பின்தங்கிய சமூகங்களுக்கு வழிவகுக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர்.
இறுதியில், ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு விற்பது ஒரு சிக்கலான முடிவாகும்,
இது சாத்தியமான செலவுகள் மற்றும் நன்மைகளை கவனமாக பரிசீலிக்க வேண்டும். அரசாங்கம் முடிவெடுப்பதற்கு முன் பொருளாதாரம், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் மீதான தாக்கத்தை கருத்தில் கொள்வது முக்கியம்.
"இந்திய மக்களே கவனியுங்கள்"
இந்தியாவில் படித்த இளைஞர்கள் அறிவாளிகள் கூட தனியார் மயமாக்களை மிக எளிமையாக எடுத்துக்கொள்கிறார்கள்.
தனியார் துறை என்பது ஒரு "அடிமை பேட்ஜ்" அது மெல்ல மெல்ல நமது குரல்வளையை நெரித்துவிடும்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஒரு நேரம் வரும் அந்த நேரம் வெகுதொலைவில் இல்லை. அது இந்தியாவில் ஒரு காலத்தில் கடைசி அரசாங்க இரயில், கடைசி அரசாங்க பஸ், கடைசி அரசாங்க மின்சார துறை, கடைசி அரசாங்க விமான நிலையம், கடைசி பொதுத்துறை வங்கி மற்றும் நிறுவனம் இருந்தது என்று ஏட்டளவில் கேள்விப்படுவோம்.
மக்களின் அலட்சியம் போக்கு
சாதாரண மக்களின் அமைதியின் காரணமாக பொதுத்துறை வங்கி நிறுவனங்கள் தனியார்மயமாவதால் அதன் பாதிப்பு இந்திய மக்கள் அனைவரையும் பாதிக்கும் அதனால் கல்வித்துறை, விமானநிலையம், இரயில்வே நிலையம், அரசாங்க மருத்துவமனை, மின்துறை, தண்ணீர், பேங்க், எல்லைப்பகுதி இவை அனைத்தும் மோசமானவர்களின் கைக்கு போகும் போது அப்போது தெரியும் சர்வாதிகாரம் (Dictatorship) என்பது என்னவென்று தெரியும்.
அரசாங்கம் என்றால் என்ன ?
என்பது பற்றி குறைந்த பட்சம் நமது பொது மக்களுக்கு அதிக அளவில் தெரியப்படுத்த வேண்டும். உதாரணமாக தனியார் கம்பெனிகள் அதிகபட்சம் லாப நோக்கில் மட்டுமே செயல்படும். அதில் பொதுநலன் மற்றும் வேலைவாய்ப்பு இருக்காது. இதில் சந்தேகம் வேண்டாம். இதனால் வேலைவாய்பின்மை மற்றும் சமுதாய பிரச்னை வர வாய்ப்புகள் உண்டு.
தனியார் மயம் விளைவுகள்
உதாரணமாக இன்றைய தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றி உங்களுக்கே தெரியும். இதில் உள்ளே நுழைந்தால் கடன் மற்றும் சொத்துக்களை விற்றுவிட்டுதான் வர வேண்டும். சாதாரண மக்கள் இங்கே செல்ல முடியாது.
தனியார்துறையின் சதி மற்றும் பொதுமக்களின் அமைதியும் பெரும் பணக்காரர்களை உருவாக்குவதும் அவர்களிடம் நாம் அடிமையாவதற்குதான் உதவும்.
நீங்கள் விழித்துக்கொள்ளுங்கள்
தேசத்தின் சொத்துக்களான பொதுத்துறை வங்கி நிறுவனங்கள் இரயில், விமானநிலையம், மின்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை, தபால்துறை, BSNL, LIC, Bank இவைகளை காப்பாற்ற வேண்டும். பொதுத்துறை வங்கி ஊழியர்களையும் காப்பாற்ற வேண்டும். தற்போது நடப்பவையாவும் கிழக்கிந்திய கம்பெனி நினைவுக்கு வருகிறது. வியாபாரத்துக்காக வந்தவர்கள் நாட்டின் வளங்களை கண்டு பிறகு நாட்டையே 100 ஆண்டுகளுக்கு மேல் நம்மீது ஆட்சி செய்தார்கள்.
இயற்கை சீற்றம் வெள்ளம் பூகம்பம் ஏற்படும் போது தனியார் நிறுவனம் வந்து உதவுவதில்லை மாறாக அரசாங்கம் அரசாங்க ஊழியர்கள் தான் உதவுகிறார்கள். நீங்களே பார்த்திருப்பீர்கள். உதாரணம் சமீபத்தில் கொராணா ஊரடங்கில் எத்தனை தனியார் பஸ் மற்றும் தனியார் விமானம் உதவிக்கு வந்தது? ஏன் ஆப்கானிஸ்தானில் தலிபான் புரட்சியில் இந்திய மக்களை மீட்டது எந்த விமானம்?
எனவே ஒவ்வொரு இந்திய மக்களும் பொதுத்துறையில் தனியார் ஆக்கிரமிப்பதை எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் இவர்கள் அரசாங்கத்தை வீட்டிலிருந்து நடத்துவார்கள். இவர்கள் நம்மை மீண்டும் பழைய காலத்திற்கு கொண்டு செல்வார்கள். இவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசாங்கத்தை வழி நடத்துவார்கள்.
நாளைய இந்தியாவில் முடிவு
இந்திய மக்களில் ஒரு சாரார் எதிர்கால சிந்தனையின்றி அவர்கள் போக்கில் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் சுய நலத்திற்கு மக்களை திசைதிருப்பி அவர்களை பலிகடா ஆக்குகிறார்கள். இரண்டு வழி ஒன்று அம்பானி இல்லையென்றால் அதானியிடம் அடிமையாக வேலை பார்க்க வேண்டியதுதான்.
முன்பு : JIO TATA
முதலில் இலவசமாக
அடுத்து ₹49/-
அடுத்து ₹99/-
பிறகு ₹149/-
அடுத்து ₹199/-
பிறகு ₹249/-
அடுத்து ₹299/-
பிறகு ₹399/-
₹499/-
₹599/-
₹699/-
இப்போ ₹720/-
ஐந்து ஆண்டிற்குள் ₹49/-லிருந்து ₹720/- வரை 1400% உயர்ந்துவிட்டது.
அடுத்து பெட்ரோல் ₹65/- லிருந்து 109/-க்கும் டீசல் ₹55/- லிருந்து ₹95/- க்கும் எரிவாயு (Gas cylinder) ₹450/- லிருந்து ₹ 1114/- க்கும் இந்த எட்டு ஆண்டுகளில் உயர்ந்துவிட்டது. 50% லிருந்து 100% வரை உயர்ந்துவிட்டது.
உப்புக்கு வரி போட்ட வெள்ளைக்காரனை எதிர்த்து போராடினோம் ஆனால் இன்று அரிசிக்கு வரி கட்ட வேண்டிய நிலைமைக்கு போய்விட்டோம்.
உதாரணமாக: முதலில் 25 கிலோ அரிசி பேக்கிங் 1500 இப்போது அதற்கும் வரி விதிப்பு 1750 நீங்கள் வீட்டு சாப்பாடு வரை வந்து விட்டார்கள்.
சிந்தியுங்கள் இதுதான் தனியார்துறையின் பரிணாம வளர்ச்சி. இதை தடுத்து நிறுத்த வேண்டும் ஒரு தேச பக்தனாக இருந்து ஒவ்வொருவரின் கடமை.
இதைப்படித்து மற்றவர்களுக்கு அனுப்புங்கள்.
நம்மால் முடிந்த அளவு சமுதாயத்தை விழிப்புணர்வு செய்வோம். இதனால் அரசாங்கத்திற்கு அழுத்தம் ஏற்படுத்தும் அவர்கள் தனியார் மயமாக்களைப்பற்றி சிந்திக்கட்டும்.
இதை ஒரு சமுதாய நல்ல நோக்கத்தோடு இதை பகிர்ந்தேன்.
நன்றி
கருத்துகள்