முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

CPCL History தமிழ்நாட்டில் பெட்ரோலிய துறை வர யார் காரணம்...?

Subbiahpatturajan

CPCL History தமிழ்நாட்டில் பெட்ரோலிய துறை வர யார் காரணம்...?

சென்னை மணலியில் அமைந்துள்ள ,, தமிழகத்தின் பெட்ரோலியத் துறையின் ஆணிவேரான   MRL-சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (CPCL) பிறந்த கதை தெரியுமா....

தென் இந்தியாவில்   எண்ணெய் நிறுவனம் ஒன்று அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. 
அப்போது அந்த நிறுவனம் எந்த மாநிலத்தில் அமைத்தால் நல்லது என அப்பொழுது தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருந்தலைவர்  காமராஜரிடம் மத்திய அரசு கேட்டது.... 
அனைத்து நிறுவனங்களையும்  தமிழகத்திலேயே அமைத்து தமிழகத்தை ஒரு உயர் இடத்திற்கு  கொண்டுவர கனவு கண்டு அதை நடைமுறைப் படுத்தவும் செய்து கொண்டிருந்த பெருந்தலைவர் விடுவாரா இந்த பொன்னான வாய்ப்பை ! 
உடனே தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் கடலோரப் பகுதியில் இடம் தேட ஆரம்பித்து விட்டார். சென்னை நகரின் வடக்கு எல்லை மணலியில்  தகுந்த இடத்தைக் கண்டுகொண்டார். அந்த இடம் எண்ணெய் நிறுவனம் அமைக்கச் சரியான இடம் எனவும் அதை ஆய்வு செய்த அதிகாரிகள் ரிப்போர்ட்டும் கொடுத்து விட்டார்கள். 
ஆனால் அந்த இடம் அரசாங்க இடம் அல்ல மணலியை சார்ந்த பெரும் பணக்காரர் திரு. ராமகிருஷ்ணன் முதலியார் அவர்களின் பூர்வீக இடம். பல நூறு ஏக்கர்களைக்  கொண்டது.  

இதனை அரசாங்கத்துக்கு விலைக்கு வாங்க அன்றைய தமிழக முதல்வர்  பெருந்தலைவர்  காமராஜர் நினைத்தார். ஆகவே அந்த நிலக்கிழார் திரு. ராமகிருஷ்ணன் முதலியார் அவர்களை தன்னை சந்திக்கும்படி அதிகாரிகளிடம் கூறினார். ஏற்பாடு நடந்தது , முதலியாரும் பெருந்தலைவரை சந்தித்தார்.

பெருந்தலைவர் முதலியாரிடம்....
அய்யா, நமது தமிழகத்திற்கு ஒரு பொன்னான வாய்ப்பு ஒன்று வந்துள்ளது .... 
அது நீங்கள் மனது வைத்தால் மட்டுமே சாத்தியமாகும் இல்லையெனில்.... அடுத்த மாநிலத்திற்கு அந்த வாய்ப்பு சென்றுவிடும் 

நீங்கள் மனம் வைத்து ... உங்கள் பூர்விக இடமான மணலி இடத்தை நம் 
அரசாங்கத்திற்கு விலைக்கு தரமுடியுமா ? என்று கேட்டார்.

முதல்வர் நம் பூர்வீக இடத்தை நாட்டுக்கு  கேட்கிறாரே என்று சற்று அதிர்ந்துதான் போன  முதலியார் .....

 தனது பூர்விக இடம்..... மற்றும் மிகப்பெரிய  இடம் ......  மேலும் அந்தப் பெரிய இடத்தின் தனிப்பட்ட சொந்தக்காரர் .... என்ற பெருமையை ... யாரோ பயன்பெற, விலைக்கு என்றாலும் கூட  விட்டுக்கொடுக்கத் தயங்கிய முதலியார் அந்த எதிர்பார்ப்பை தயவுசெய்து விட்டுவிடுங்கள் அதற்கு வாய்ப்பே  என்று  பெருந்தலைவரிடம் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். 

பூர்வீக பூமியை .... பெரும் சொத்தை ......
 யார் தான் எளிதில் பொதுவுக்கு தருவார் என்ற மனித எதார்த்தம் புரிந்த பெருந்தலைவர்.... 
மீண்டும்  முதலியாரிடம் , "அய்யா, தமது  பெரும் சொத்தை பணத்துக்கு என்றாலும் 
அதை தர எவருக்கும் மனம் வராதுதான், அதனை தரும்படி உங்களிடம் நான் கேட்பதே தவறு என்று எனக்கும் தெரியும்,  ஆனால் .....

அய்யா நீங்கள் நினைத்தால் , கருணை கொண்டால் நம் தமிழகம் செழிக்கும் பல நூறு குடும்பங்களுக்கு வாழ்வு கிடைக்கும். பின்தங்கிய இந்த சுற்றுக் கிராமப்பகுதியும் வளம் பெறும். பொருளாதார நலனும்  தமிழகம் கிடைக்கப்பெறும், 

ஆகவே அய்யா.....  நான் உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும் , சிறிது யோசித்து முடிவு சொல்லுங்கள் உங்கள் வீட்டிலும் கலந்து பேசுங்கள். உங்கள் வார்த்தையில் தான் நாட்டிற்கு பெரும் நலன்கள் காத்து இருக்கிறது ". என்று கூறி முதலியாரை வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.

வீட்டிற்கு சென்ற முதலியாருக்கு அன்று இரவு  தூக்கமே வரவில்லை இவ்வளவு பெரிய பாரம்பரிய இடத்தை எப்படி கொடுப்பது என்று  முடிவு கூறமுடியாமல் மனம் படபடத்துக்கொண்டிருந்தார்.    

திடீரென அவர் மனதில் .... 

நம்மையும்  ஒரு பொருட்டாக மதித்து , ஒரு முதலமைச்சர் நம்மிடம் கெஞ்சி கெஞ்சி கேட்டாரே .... நாட்டு மக்களின்மேல் இவ்வளவு அக்கரை கொண்டுள்ளாரே ....

அவர் நினைத்தால்..... ஒரே ஒரு அரசாணை பிறப்பித்தால் ....   அடுத்த நிமிடம் நம் இடம் அரசுக்கு சொந்த மாகிவிடுமே ஆனால்..... அப்படிச்செய்யாமல் ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமையையும் அவனது மனதையும் மதித்து பெரிய மகானாக நடந்து கொண்டாரே 

இவரது ஆசை தனக்காக இல்லாமல்  நாட்டுக்காக, ஏழை மக்களுக்காக  மட்டுமே  இருந்ததே என்று குழம்பிக்கொண்டே தூங்காமல் படுக்கையில் புரண்டுகொண்டே இருந்தார் .

மேலும்
 "விருப்பம் இருந்தால் கொடுங்கள் ..., தொந்தரவு தந்தமைக்கு மன்னிக்கவும்" 
என்ற பெருந்தலைவரின் பெரிய வார்த்தைகள் முதலியாரின் மனதை மிகவும் தொட்டது.


இந்த இடம் என் கையில் இருந்தால் என் குடும்பம் மட்டுமே வாழும். ஆனால் அரசுக்கு கொடுத்தால்..... பல்லாயிரம் குடும்பத்தை அல்லவா வாழ வைக்கும் என்று புத்தி தெளிந்து ஒரு முடிவுக்கு வந்தவராய் ... 
அதி காலையிலேயே படுக்கையை விட்டெழுந்து ....... 
பெருந்தலைவரைப் பார்க்க விரைந்தார்

முதல்வர் வரும்வரை கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் காத்திருந்து, அனுமதி பெற்று பின்பு பெருந்தலைவரை சந்தித்தார் ...

முதலியாரைப் பார்த்ததும்......,
வாய்ப்பே இல்லை என்று நேற்று சட்டெனச் சொன்னவர் ,, யோசித்து சொல்லுங்கள் என்று சொல்லியும் உடனே மறு நாள் அதி காலையிலேயே வந்துள்ளாரே .....,, 
அப்படியெனில் முடியாது என்றுதான்  கூற வந்துள்ளாரோ....!
என்ற அங்கலாய்ப்பும் பெருந்தலைவரை சற்று அசைத்தது. 

ஆனால் முதலியார் பெருந்தலைவரை கண்டதுமே ,,,, 
"அய்யா பெருந்தலைவரே தாங்களை கஷ்டப்படுத்தியமைக்கு மன்னியுங்கள் உங்கள் உயர்ந்த நோக்கம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன் , எனது மொத்த இடத்தையும் நான் அரசாங்கத்திற்கு நீங்கள் கூறியபடியே விலைக்குத் தந்து விடுகிறேன் என்று சொன்னதுதான் தான் தாமதம் , 

உடனே தனது இருக்கையை விட்டு எழுந்து ஓடிவந்த காமராஜர்  முதலியாரை கட்டி அணைத்துக் கொண்டார், கண்கள் கலங்கியவராய்  முதலியாரை உச்சி முகர்ந்து .. அவர் குடும்பம், சுற்றம் எல்லாம் நீடூழி வாழ மனமார வாழ்த்தினார். 

உடனே அதிகாரிகளை அழைத்து அதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்கும்படி செய்து, மத்திய அரசிடம் பேசி நம் தமிழகத்திற்கு அரும் பெரும் சொத்தான நம் CPCL. ஐ தாரைவார்த்துக் கொடுத்தார்.

 அந்த ஒப்பற்ற  பெருந்தலைவர் திரு.காமராஜர்  அவர்களின் ஈடிணையற்ற  முயற்சியாலும் அந்த வள்ளல் திரு.ராமகிருஷ்ண முதலியார் அவர்களின் நல்ல மனத்தாலும் மட்டுமே.... எங்களையும் எங்கள்  குடும்பங்களையும்  வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்த ""சென்னை பெட்ரோலியம் கார்பரேசன் லிட்."" 
இந்த மணலியில் அமையப்பெற்றது. இதுவே ,, இன்று தென்னகத்தின் பெட்ரோலிய பொருட்களின் தேவையை முழுவதும்  பூர்த்தி செய்யும் ஒரே நிறுவனமாக விளங்குகிறது ........

சுயநலமில்லா அந்தப் பெருந்தலைவரின் முயற்சியே எங்களைப் போன்றோரின் குடும்பங்களுக்கு இன்று சோறு போடுகிறது . வாழ்வளித்திருக்கிறது
இதை எவராலும் மறுக்க முடியாது .

நாட்டுக்காக தம்மையே அற்பணித்த தலைவர்களை.... பொதுவாகவே இந்த உலகம் எளிதில் மறந்துவிடும், அதுவே இன்றைய எதார்த்தம்.

ஆனால்,, இந்தக் காலகட்டத்தில் ....
எவர் மறந்தாலும். CPCL ஊழியர்கள் எங்களாலும்,, எங்கள் குடும்பத்தாராலும் ஒருபோதும் மறக்கவே முடியாத,, மறக்கவும் கூடாத ,,, ஒப்பற்ற தலைவர் கர்மவீரர், பெருந்தலைவர் , பாரத ரத்னா கு.காமராஜர் அவர்கள் என்றால் அது  மிகையாகாது.

(தகவல்: 
நல்லாசிரியர் திரு. சு. பால்ராஜ், 
திரு. நெடுமாறன் ,
மற்றும். வேணுகோபால ரெட்டி.)

இன்று யார் யாரோ..... அரசியல்  ஆதாயத்துக்காக மட்டுமே சொந்தம் கொண்டாடும் .... 
அந்த கர்மவீரர் ,,
ஒப்பற்ற  பெருந் தலைவர் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...