முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கணவன் மனைவி போல குடும்பம் நடத்துபவர்கள் தான் ஆரியர்களும் திராவிடர்களும்..

Subbiahpatturajan

கணவன் மனைவி போல குடும்பம் நடத்துபவர்கள் தான் ஆரியர்களும் திராவிடர்களும்..

கணவன் மனைவி போல அடித்துக்கொண்டே ஒன்றாக குடும்பம் நடத்துபவர்கள்தான் ஆரியர்களும்,  திராவிடர்களும்.



வைகை நாகரிகம், பொருணை நாகரிகம் எனும் பெயர் சூட்டல்களும் உள்ளடி ஆரிய - திராவிட சூழ்ச்சிகளும் !

தென்குமரி தொடங்கி வடவேங்கடம் வரை பரவியிருந்த தமிழ்நாடு - என்கிறது தமிழர் சங்ககால ஆவணங்கள்.

இந்தியா முழுதும் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.


தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரத்தை மையமாகக்கொண்டு கிழக்கு ஆசியா முழுவதும் ஆட்சி ஆண்டிருக்கிறார்கள் ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் என்கிறது வரலாற்று ஆவணங்கள்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை,  உண்மையில் தொல்லியல் இடங்களில் கிடைக்கின்ற ஆவணங்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன.

தென்னிந்தியா முழுவதும் தமிழ் கல்வெட்டுகள் ஏராளமாய் உள்ளன.
இந்திய நிலப்பரப்பில் கிடைக்கிற 100 விழுக்காடு கல்வெட்டுகளில் 60 விழுக்காட்டிற்கும்  அதிகமான கல்வெட்டுகள் தமிழர்கள் கல்வெட்டுகளே.

தெலுங்கு மொழி செம்மொழி அந்தஸ்தைப் பெற்றது தமிழ்க் கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டே. 


தமிழ் மொழியில்தான் அதிக எண்ணிக்கையிலான ஓலைச்சுவடிகள் உள்ளன.

இத்தனை பெருமைகளை கொண்டிருக்கக்கூடிய தமிழ் தமிழர் இனம், தமிழியம், தமிழியல் உள்ளிட்டவை ஆரிய மற்றும் திராவிட சூழ்ச்சிகளில் சிக்குண்டு கிடக்கின்றன.

விஜயநகர தெலுங்கு மன்னர்கள் வருகைக்கு முன்பாக இந்த சிக்கல் தமிழர்களுக்கு இல்லை.


அதன்பிறகுதான் வைதிக பிராமண ஆதிக்கம் இங்கே மேலோங்குகிறது. உடன் பிறந்த குழந்தையாக திராவிட பிராமண ஆதிக்கமும் இங்கே மேலோங்குகிறது.

ஆரிய பிராமணியம் கோவில்களைக் கைப்பற்றுகிறது. தமிழர் பண்பாட்டை கைப்பற்றுகிறது. தமிழர் வழிபாட்டை கைப்பற்றுகிறது.

திராவிடம் பிராமணியம் தமிழர்களுடைய அரசாட்சியை கைப்பற்றுகிறது. தமிழர் தொல்லியல் கலை பண்பாடு நாகரீகம் ஆகியவற்றை கைப்பற்றுகிறது.

ஆனால் தோற்றத்தில் ஆரிய பிராமணியமும் திராவிட பிராமணியமும் அடித்துக்கொள்வது போலத் தோன்றும்.

கடவுள் இருக்கிறது என்று ஆரிய பிராமணியமும், கடவுள் இல்லை என்று கூறி பார்ப்பான் எதிர்ப்பு எனும் பெயரில் திராவிட பிராமணியமும் அடித்துக் கொள்வது போல நடித்து தமிழர்களை தொடர்ந்து ஏமாற்றும்.

உண்மையில் வைதீக பிராமணர்களுக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது திராவிடர்களுக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது இரண்டு பேரின் வேடங்கள் மட்டும்தான் வேறு வேறே தவிர கொள்கை ஒன்றுதான்.

ஆரிய பிராமணர்கள் தமிழர்களை கருவறைக்குள் வரக்கூடாது என்பார்கள். திராவிட பிராமணர்கள் தமிழர்களைக் கோயிலுக்குச் செல்லாதே என்பார்கள்.

மொத்தத்தில் இரண்டு பேருக்கும்
தமிழர்களின் கோவில் சொத்துக்களின்,  நகைகள் மீதுதான் கண்.

கோவில் நகைகளை பார்ப்பான் திருடி விடுவார் என்று கூறி, அதை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி தமிழர் அடையாளங்களை அழித்து விடுவது திராவிடத்தின் வேலை.

ஆரிய பிராமணர்கள் பூணூல் அணிந்திருப்பார்கள் திராவிட பிராமணர்கள் பூணூல் அணியாமல் கருப்பு சட்டை அணிந்திருப்பார்கள்.

ஆரிய பிராமணியம் தமிழர்களின் வழிபாட்டு முறைகளில் வைதீகத்தைப் புகுத்தியது.

திராவிட பிராமணியம் தமிழ் தமிழர் ஆவணங்கள் தமிழர் கோவில்கள் வைதீகப் பார்ப்பனிய இடம் என்று கூறி அதைத் தமிழர்கள் கைவிடவேண்டும் என்று கூறி பரப்புரை செய்யும்.

சங்கி, என்றுகூறி ஆரியத்தை கேலி செய்யும் திராவிட பிராமணியம். ஆனால் காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும்.

திராவிடர்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருத எதிர்ப்பு என்பது கிடையாது. அவர்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டார்கள். 

காரணம் தெலுங்கு கன்னடம் ஆகிய திராவிடர்களின் மொழிகள் சமஸ்கிருதம் இன்றி இயங்க முடியாது. 

(இங்கே திராவிடம் என்றால் தமிழர்கள் அல்லாதவர்கள் என்று பொருள் கொள்க.


காரணம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தங்களைத் தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்ளாமல் திராவிடர்கள் என்று கூறுகிறவர்கள் எப்படித் தமிழர்களாக இருக்க முடியும்?! )

எனவே மொழியே சமஸ்கிருதம் ஹிந்தி ஆகியவற்றைத் சார்ந்து தான் வாழ முடியும் என்கிற நிலைதான் தெலுங்கு மற்றும் கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு இருக்கிறது.

ஆனால் எந்த மொழியையும் சாராமல் தனித்து இயங்க வல்லது தமிழ்.

எனவேதான் தமிழுக்குள் சமஸ்கிருதம் ஹிந்தி உள்ளிட்ட பிற திணிப்புகள் வந்துவிடக்கூடாது என்று பன்னெடுங்காலமாக தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சிக்கல்,திராவிடர்களுக்கு இல்லை. அவர்கள் எப்படி மொழி அடிப்படையில் சமஸ்கிருதத்தை ஹிந்தியை சார்ந்துதான் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறதோ, அதேபோல திராவிடர்கள் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை வலியுறுத்தக் கூடிய ஆரிய பிராமணர்களுடைய தயவில்தான் வாழ முடியும்.

இது இயல்பான உண்மை.

தமிழர்களை ஏமாற்றுவதற்காக பிரித்தாளும் சூழ்ச்சியுடன் ஆரியமும் திராவிடமும் இருவேறு எதிரிகள் போல தோற்றத்துடன் களமிறங்கி தமிழ்நாட்டைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றன.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் என்று தனித்த தொன்ம வரலாறு கிடையாது.


தமிழர்களைப் போல நீண்ட வரலாறு கிடையாது. தமிழர்களுக்கு இருப்பதுபோல கல்வெட்டுகள் பாறை ஓவியங்கள் ஓலைச்சுவடிகள் சங்ககால ஆவணங்கள் என எந்த ஆவணமும் அவர்களுக்கு கிடையாது.

இலங்கையில் சிங்களவர்களுக்கு எந்தவிதமான தொன்மமும் வரலாறும் எப்படி இல்லையோ அதேபோலத்தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஆரியர் மற்றும் திராவிடர்களுக்கு எந்தவிதமான தொன்மை வரலாறும் கிடையாது.

எனவே ஆரியம் திராவிடம் சிங்களம் ஆகிய மூன்றுக்கும் ஒரு கட்டாயம் இருக்கிறது.

அது ஆட்சி அதிகாரத்தை எப்படியோ பிடித்துக் கொண்டு விட்டனர், ஆனால் கலை பண்பாடு கடவுள் வழிபாடு வரலாறு ஆகியவை அவர்களிடம் இல்லை.

எனவே தமிழர்களுடைய வரலாற்றைத் தொன்மத்தை, கலை பண்பாடு கடவுள் வழிபாடு சமயநெறி கோட்பாடு ஆகியவற்றைத் தங்களுடையதாக களவாடிக் கொள்வது ஒன்று மட்டும்தான் அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு.

கூர்ந்து கவனியுங்கள் வைதீக ஆரியமும் திராவிடமும் இதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் சிங்களமும் இதைத்தான் செய்கிறது.

வைதீக ஆரியம், தமிழர்களுடைய கடவுளர் முருகன் தெய்வானையை மணந்தார் என்று கட்டுக் கதை எழுதி முருகனை ஆரியக் கடவுளாக இணைத்து பொய்க் கதை எழுதியது.

தமிழர் நாகரிகங்கள் அனைத்தையும் திராவிட நாகரீகம் என்று கூறி திராவிடம் கட்டுக்கதை கட்டுகிறது.

தமிழர் பேரரசன் ராவண பெருந்தகையை தங்களின் முன்னோர் என்று தற்போது சிங்களம் கூறத் தொடங்கியிருக்கிறது. தங்களுக்கு என்று வரலாறும் இல்லை என்பதை அறிந்ததும் தமிழர் வரலாற்றை களவாடி தங்களுடைய வரலாறாக மாற்றிக் கொண்டிருக்கிறது சிங்களம்.

எனவே ஆரியம் - திராவிடம் - சிங்களம் வேறு வேறு அல்ல.

தமிழர்களை ஏமாற்றி சூழ்ச்சி செய்து அடித்து துன்புறுத்தி தமிழர் வரலாற்றை தொன்மத்தை கலையை பண்பாட்டை கடவுள் வழிபாட்டை மெய்யியலைத் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு, தமிழர்களின் நிலங்களை, நாட்டைப் பறித்துக்கொண்டு தமிழர்களை விரட்டியடிக்கும், ஒரே கூட்டத்தின் மூன்று பிரிவுகள்தான் இந்த ஆரிய - திராவிட - சிங்களம்.

தென்குமரி முதல் வடவேங்கடம் வரை விரவிக் கிடக்கின்ற தமிழர் நாகரிகத்தை தமிழர் நாகரிகம் என்று சொல்லாமல் நொய்யல் நாகரீகம்,  பொருணை நாகரீகம். வைகை நாகரீகம் என்று தனித்தனியாக பிரித்து ஆறப்போடுவதன் மூலமாக மிகப்பெரிய சூழ்ச்சி வலை பின்னப்பட்டு கொண்டிருக்கிறது.

தமிழர்கள் விழிப்போடு இல்லையெனில் ஆரியமும் திராவிடமும் - இலங்கையில் தமிழர்களுக்கு சிங்களம் என்ன செய்ததோ அதை இங்கேயும், வருமாண்டுகளில் செய்யத் தயங்க மாட்டார்கள்.

ஆரிய - திராவிட இயக்கங்கள் மற்றும் கட்சிகளில் உள்ள மான உணர்வும் வெட்க உணர்வும் உள்ள தமிழர்கள் இந்த சூழ்ச்சிகள் எல்லாம் மனதில் எண்ணி அசை போட்டு சிந்தித்துக் கூர்ந்து கவனியுங்கள். சூழ்ச்சிக்கு விலை போய் விடாதீர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...