Cinar tamilan

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

Subbiahpatturajan ✍🏻‌  ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ* *என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பு கறிகள், மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம். இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் முக்கியமான ஒன்று. இதற்கு ‘அன்னாசி மொக்கு’, தக்கோலம், நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும் உண்டு. இது வெறும் மணத்துக்காக மட்டுமல்லாமல் உணவை அழகுபடுத்துவதற்க்கும், மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ பூர்வீகம்* *அண்ணாச்சி பூ சீனாவை பூர்வீகமாக கொண்டது. சீன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள். இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் பரவி சென்று இந்தியாவில் தற்போது இது ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறி உள்ளது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *நோய் எதிர்ப்பு சக்தி* *அதிகரிக்கும்* *அண்ணாச்சி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.* *இதில் பாக்டீரியா வைரஸ், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளது. இந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்று...

“என் வாழ்வில் என் மனைவியைத் தொடர்ந்து நேசிப்பதை விட வேறு முக்கியமான பணி ஏதும் இல்லை”

Subbiahpatturajan “என் வாழ்வில் என் மனைவியைத் தொடர்ந்து நேசிப்பதை விட வேறு முக்கியமான பணி ஏதும் இல்லை” அன்பின்றி அமையாது உலகு நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த மற்ற நண்பர்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை. “குமார் இப்போ நல்லா இருக்கான். நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி ஒரு கார் வாங்கினான். போனவருஷம் தான் வீடு வாங்கினான். ஒரு இருபத்தைஞ்சு முப்பது சம்பளம் வாங்குவான்னு நினைக்கிறேன். அப்படியே லைஃப்ல செட்டில் ஆயிட்டான்” “அருள் பாவம்டா. இன்னும் சரியான வேலை கிடைக்காம கஷ்டப்படறான். வாடகை வீட்ல தான் இருக்கான்.” இப்படிப்பட்ட கதைகளைக் கொஞ்சம் அலசி ஆராந்து பாருங்கள். நமது ஒப்பீடுகளும், அளவீடுகளும், மகிழ்ச்சிக்கான எல்லைகளும் பெரும்பாலும் பொருளாதாரம் சார்ந்தே இருக்கின்றன என்பது புரியும். ஒரு வீடு, கார் வாங்கி ஒரு நல்ல வேலையில் இருந்தால் அவன் பாக்கியசாலி! இதில் ஏதாவது குறைவு படுபவனோ அனுதாபத்துக்குரியவன். இந்த மதிப்பீடுகள் சரியா என்பதைப்பற்றி நாம் எப்போதாவது ஆர அமர யோசித்ததுண்டா? ஆனந்தமும், வாழ்வின் உன்னதமும் பொருளாதாரத்தால் அமைவதல்ல என்பதைப் புரிந்து கொள்ளும்...

உலகத்தில் ராணுவமே இல்லாத நாடு பற்றி உங்களுக்கு தெரியுமா?

Subbiahpatturajan ஒரு நாட்டின் எல்லைகளை பாதுகாக்க இராணுவம் இன்றியமையாத படை. ஆனால் உலகில் இராணுவமே இல்லாத நாடுகளும் சில உள்ளன. அந்த நாடுகளுக்கு அருகில் உள்ள சில நாடுகள் தமது இராணுவத்தை வழங்கி பாதுகாப்பு அம்சங்களுக்காக உதவுகின்றன. அந்த வகையில் இராணுவமே இல்லாத நாடுகளும் அவற்றின் பாதுகாப்புக்காக அவற்றுக்கு உதவும் ஒருசில நாடுகள் & பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றி காண்போம். 1.அண்டோரா (Andorra) இந்த நாடானது தமது பாதுகாப்புக்காக ஸ்பெயின் & பிரான்ஸ் உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்நாட்டுக்கு துணை இராணுவ பாதுகாப்புப் படை இருந்தாலும் அதுவும் அந்நாட்டின் காவல்துறையின் ஓர் அங்கமாகவே செயல்படுவதால் இதற்கான இராணுவ பாதுகாப்பை மேற்கண்ட நாடுகள் பெற்றுள்ளன. 2. டொமினிகா (Dominica) இந்த நாட்டுக்கு கடந்த 1981 ம் ஆண்டு முதல் இராணுவப் படை இல்லை. உள்நாட்டு பாதுகாப்புப் படையே (நம்ம காவல்துறை மாதிரி) இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது. 3.கிரினாடா (Grenada) இந்நாட்டுக்கும் கடந்த 1981 முதல் உள்நாட்டு காவல் படையே நாட்டின் காவல் பொறுப்பையும் கண்காணித்து வருகிறது. 4.கிரிபாட்டி (Kribati) இந்நாட்டின் அரசியலம...

சதுரங்கம் எப்படி விளையாடலாம் டிப்ஸ்...!?

Subbiahpatturajan சதுரங்கத்தின் சில நுணுக்கங்கள் சதுரங்கம் விளையாடும்போது பலருக்கு பயம். எதிராளி ராணியை முன்னிறுத்தி விட்டாரே நம்ம ஆட்டம் என்னாகுமோன்னு. என்னைக்குமே ஒரு சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். சதுரங்கத்தில் இரு ராணிகளும் நேருக்கு நேர் தான் இருப்பார்கள். அதனால் முதலிலேயே உங்கள் ராணியைக் கொண்டு எதிராளியின் ராணியை வீழ்த்துங்கள். ஒரே நேரத்தில் இருவரும் தமது பலத்தை இழப்பீர். அடுத்ததாக குதிரைகளை ஒவ்வொன்றாக வெளியேற்றுங்கள். எந்தவொரு சூழலிலும் குதிரையை மட்டும் பலியாக்கிவிடாதீர்கள். ஆட்சிக்கு வேண்டுமானால் ராணி அவசியம் ஆட்டத்துக்கு குதிரைதான் உண்மையான ராணி. எப்போதும் ராஜாவுடன் ஒரு யானையாவது இருப்பதை உறுதி செய்யுங்கள். ராஜாவுக்கும் அருகில் உள்ள யானைக்கும் நடுவில் ஒரு இடமாற்றுக் கட்டம் இருக்கும். அதைக் கொண்டு இருகாய்களையும் இடம் மாற்றிக்கொள்ளுங்கள். முக்கியமாக ராஜாவுடன் இருக்கும் அந்த ஒரு யானையை மட்டும் எதற்காகவும் நகர்த்திவிடாதீர்கள். முடிந்தவரை பலமான காய்களையே முன்னிறுத்துங்கள். சிப்பாய்களை களமிறக்காதீர்கள். (சிறு துரும்புதான் பல் குத்த உதவும்). சிப்பாய்களை காப்பாற்றுங்கள்.  இறுத...

சார் என் குழந்தைக்கு ஷு லேஸ் கூட கட்ட தெரியாது சார். தலை சீவ மாட்டான், நான் தான் இன்றும் உணவு கூட ஊட்டி விடுகிறேன்.

Subbiahpatturajan _*குழந்தைகள் ஆரோக்கியத்துடனும்,   வளமுடனும் வாழ சில வரிகள்.*_   *அன்றாட வீட்டு வேலைகளில் உதவிடும் குழந்தைகள் தாம் வாழ்வில் மிகச்சிறந்த வெற்றியடைய முடியும்.*   _சமீப காலங்களில் என்னுடைய மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் தரும் செய்தி._  சார் என் குழந்தைக்கு ஷு லேஸ் கூட கட்ட தெரியாது சார். தலை சீவ மாட்டான், நான் தான் இன்றும் உணவு கூட ஊட்டி விடுகிறேன்.  *வயசென்னமா ஆச்சு ??. 10 வயசு சார்.*   _சரி!! 😲 என்ன படிக்கறார் மா?. 6 ம் வகுப்பு சார்._  சூப்பர். எப்படி படிப்பார் ?. நல்லா படிக்கறான் சார், ஆனா க்ரேட் தான் நெனச்ச மாதிரி வரல. கணக்குல ரொம்ப வீக், ஸ்போர்ட்ஸ் இண்ட்ரெஸ்ட் இல்ல, செஸ் வரமாட்டேங்குது, கராத்தே போக மாட்டேங்கறான், ஸ்விம்மிங் க்ளாஸ் போறான் ஆனா சளி பிடிக்குது வேண்டாம்னு வெச்சுட்டோம்.!! இப்போது வெஸ்டெர்ன் மியூசிக் படிக்கறான்.  *ஒகெ ஒகெ..!  வீட்டு வேலைகளில் அக்கரை இருக்காமா?. வீட்டு வேலனா என்ன சார் ?.*   _அவன் உங்களுக்கும் உங்கள் அன்றாட தேவைக்கும் செய்யும் உதவிகள் மா.!_...

அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

Subbiahpatturajan ♦️♦️♦️ படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி பின் படியுங்கள்.  ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்... (இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை) ♦️ பயனுள்ள பதிவு தவறாமல் படிக்கவும்... ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே. நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே. உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்.... *ஒவ்வொரு மனிதனும்* *தனித்தனி ஜென்மங்கள்.* அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் . அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்கள...

Try this to live fully in New Year 2025...

Subbiahpatturajan  புது வருடம் 2021ல் *நமது வருமானம் குறைவாக இருந்தாலும்*,நிறைவாக வாழ பழகலாமே !இதை செய்து பாருங்கள். நமது உடல் ஆரோக்கியத்திற்கு  மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.   உதாரணமாக-- 1.  ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று) 2.  விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை. 3.  பிரிட்ஜில் வைக்காத பொருள்கள். 4.  ஒரு கேரட்டுடனும் , (அல்லது) சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது. (இது --- கண்ணுக்கும், இரத்தம் அதிக மாவதற்கும், அறிவிற்கும், ஞாபக சக்திக்கும்  நல்லது.) 5.     80 சதம் கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது. 6.   தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே. 7.   முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே. 8.   சாதத்தை வடித்து சாப்பிடலாமே. 9.   வடித்த கஞ்சியை பழய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாமே. 10.   இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை...

*குண்டக்க மண்டக்க : விளக்கம்*

Subbiahpatturajan *சூடு சொரனை* : இருந்தால்... விளக்கம்.... *🔷🔶இரட்டை சொற்களுக்கான விளக்கம்* .... *குண்டக்க மண்டக்க :* 🔸 *குண்டக்க* : இடுப்புப்பகுதி, 🔸 *மண்டக்க* : தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்... *அந்தி, சந்தி:* 🔸 *அந்தி* : . மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.. 🔸 *சந்தி* : . இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.. *அக்குவேர்,ஆணிவேர்:* 🔸 *அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.. 🔸 *ஆணி வேர்:* செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்... *அரை குறை:* 🔸 *அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.. 🔸 *குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது... *அக்கம், பக்கம்:* 🔸 *அக்கம்* : தன் வீடும், தான் இருக்கும் இடமும்... 🔸 *பக்கம்* : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்... *கார சாரம் :* 🔸 *காரம்* : உறைப்பு சுவையுள்ளது... 🔸 *சாரம்* : காரம் சார்ந்த சுவையுள்ளது... *இச...

குடும்ப நல நீதிபதிகள் வழங்கும் முக்கிய பத்து கட்டளைகள் (ஆலோசனைகள்)_*

Subbiahpatturajan *_குடும்ப நல வழக்குகளைக் கையாண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் முக்கிய பத்து கட்டளைகள் (ஆலோசனைகள்)_* _1) உங்கள் மகன் மற்றும் மருமகளை உங்களோடு ஒரே வீட்டில் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டாம் .வாடகை வீட்டிலாவது தனியாக குடியிருக்கச் செய்யுங்கள்.தங்களுக்கென்று ஒரு குடியிருப்பை தேடிக் கொள்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எவ்வளவு இடைவெளி ஏற்படுத்துகிறீர்களோ அவ்வளவு பிரச்சனைகளை உங்கள் மருமக்களோடு தவிர்க்கலாம்._ _2) உங்கள் மருமகளை உங்கள் மகள் போல பார்த்துக் கொள்ள வேண்டாம் .உங்கள் மகனின் மனைவியாகவே நினைத்துக் கொள்ளுங்கள்.அல்லது அவளை ஒரு தோழியாக பாருங்கள்.உங்கள் மகன் உங்களுக்கு கீழ்ப்பட்டவன் என்று நினைப்பது போல் அவன் மனைவியும் உங்களுக்கு கீழ்ப்பட்டவள் என்று நினைத்து திட்டி விடாதீர்கள்.ஏனென்றால் அவள் காலத்திற்கும் அதை நினைவில் வைத்திருப்பாள்.தன்னை திட்டுவதற்கும்,சரிப்படுத்துவதற்கும் தன்னுடைய தாயாருக்கே அன்றி வேறொருவருக்கும் உரிமையில்லை என்று எண்ணுவாள்._ _3) உங்கள் மகனின் மனைவி எப்படிப்பட்ட பழக்கவழக்கம் மற்றும் குணமுடையவராயிருந்தாலும் ...

அவரை என் *அம்மாவுக்கும்* பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர்.

Subbiahpatturajan *"நான் குழந்தையாக* இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் *அப்பா."* அவரை என் *அம்மாவுக்கும்* பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார். நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது. என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது. அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி, அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார். காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார். அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர். விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார். அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்.. சிந்திக்கவும் வைப்பார். அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார். ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அவஸ்தை...

தமிழானது எப்படியெல்லாம் சமஸ்கிருதத்துக்கு மாறி யிருக்கிறது.

Subbiahpatturajan  தமிழானது எப்படியெல்லாம்   சமஸ்கிருதத்துக்கு மாறி யிருக்கிறது.  குடமுழுக்கை - கும்பாபிஷேகமாக்கி அருள்மிகுவை - ஶ்ரீ ஆக்கி கருவறையை - கர்ப்பகிரகமாக்கி நீரை - ஜலமாக்கி தண்ணீரைத் -தீர்த்தமாக்கி குளியலை -ஸ்நானமாக்கி அன்பளிப்பை - தட்சணையாக்கி வணக்கத்தை - நமஸ்காரமாக்கி ஐயாவை - ஜீயாக்கி நிலத்தை - பூலோகமாக்கி வேளாண்மையை -  விவசாயமாக்கி வேண்டுதலை - ஜெபமாக்கி தீயை - அக்னியாக்கி குண்டத்தை - யாகமாக்கி காற்றை - வாயுவாக்கி விண்ணை - ஆகாயமாக்கி பூவை - புஷ்பமாக்கி தொழுதலை - பூஜையாக்கி முறைகளை -  ஆச்சாரமாக்கி படையலை -  நைவய்தியமாக்கி திருமணத்தை - விவாகமாக்கி பிள்ளைப் பேறை -  பிரசவமாக்கி பிணத்தை - சவமாக்கி மக்களை - ஜனங்களாக்கி உணர்வற்றதை - சடமாக்கி ஒன்பதாம் நாளை -  நவமியாக்கி பத்தாம் நாளை -  தசமியாக்கி பிறந்தநாளை - ஜெயந்தியாக்கி பருவமடைதலை -  ருதுவாக்கி -  அறிவைப் - புத்தியாக்கி ஆசானைக் - குருவாக்கி மாணவனை -  சிஷ்யனாக்கி அறிவியலை -  விஞ்ஞானமாக்கி படிப்பித்தலை - அப்பியாசமாக்கி பள்ளிகளை -  வித்யாலயமாக்கி அவையை - சபையாக்கி...

உங்களால் உழைத்து நிறைய பணம், புகழ் சம்பாதிக்க முடியும் என்றால் செய்யுங்கள்.

Subbiahpatturajan புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்...! 1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள் 2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள் 3. ஞாயிற்று கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்  4. எந்த மதமானாலும் ஒரு ஞாயிற்று கிழமை குடும்பத்துடன் உங்களுக்கு பிடித்த கோயிலுக்கு (செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல முயற்சியுங்கள். 5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள், குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள் அதில் இருக்கட்டும். பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது, பத்து கிலோமீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை. எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள். 6. நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல் டி வி அணைக்கப...

அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த *சம்பந்தமும்* இல்லை.

Subbiahpatturajan     *👊மனமே        பிரச்சினை👊* தனியாக *வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் ஒருவன்* வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான். *காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு* அன்று இரவுப்பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்.. முனிவரும் தாராளமாக *தங்கி* கொள்ளுங்கள் என கூறினார்.. முனிவரும், அரசரும் அந்த சிறிய குடிலில் *தூங்க* ஆரம்பித்தனர்.  இரவு முழுவதும் *முப்பது அல்லது நாற்பது நாய்கள்* அந்த குடிலை சுற்றி *குரைத்துக்* கொண்டே இருந்தன.  அரசரால் *தூங்கவே* முடியவில்லை. அவர், அன்று காலை முழுவதும் வேட்டையாடி *களைத்து* இருந்தார்.. மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க *அரசருக்குக் கோபம் அதிகமானது*. நாய்களோ *வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக்* கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக *உறங்கிக்* கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அரசர்,  ''என்ன மனிதர் நீங்கள்...  இவ்வளவு *சத்தத்துக்கு* மத்தியில் உங்களால் எப்படி *உறங்க* முடிகிறது...???'' என்று புலம்பினார...

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

Do you know which country has the longest distance bus route in the world?

காலத்தின் பயணம் Cinartamilan.com

தமிழ்நாட்டின் "காலா காந்தி"

காலத்தின் பயணம் *காமராஜர் பற்றி 100 அற்புதமான அரிய தகவல்கள்..!!* *1. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார்.* *2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.* *3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.* *4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்*.. *5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.* *6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.* *7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.* *8. காமராஜர்...

சொந்த வீடு கட்டுபவர்களுக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 50 டிப்ஸ்கள்.....!!

Subbiahpatturajan சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!! 1. பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம். 4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது. 5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ...

உங்களுக்கு காது கேட்கும் திறன் மெதுவாக குறைந்தது வருகிறதா என்ன செய்ய வேண்டும்

Subbiahpatturajan செவித்திறனை மேம்படுத்துதல் எப்படி?  உங்கள் செவித்திறனை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன:  உரத்த சத்தங்களைத் தவிர்க்கவும்: உரத்த சத்தங்களை வெளிப்படுத்துவது உங்கள் உள் காதில் உள்ள முடி செல்களை சேதப்படுத்தும், இது காது கேளாமைக்கு வழிவகுக்கும். முடிந்த போதெல்லாம் உரத்த சத்தங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், மேலும் நீங்கள் சத்தமாக இருக்க வேண்டும் என்றால் காதில் செருகி அல்லது பிற பாதுகாப்பு கியர் அணியுங்கள்.  உங்கள் காதுகளை சுத்தமாக வைத்திருங்கள்:  காதுக்குள் மெழுகு போன்ற அழுக்கு காதில் கால்வாயில் குவிந்து இருந்தால் சத்தங்கள் செவிப்பறையை அடைவதைத் தடுக்கும். உங்கள் காதுகளின் உள்ப்புறத்தை துவைக்கும் துணி அல்லது பருத்தி துணியால் மெதுவாக சுத்தம் செய்யுங்கள், ஆனால் உங்கள் காது கால்வாயில் எதையும் செருகாமல் கவனமாக இருங்கள், ஏனெனில் இது செவிப்பறையை சேதப்படுத்தும்.  உங்கள் செவித்திறனைப் பரிசோதிக்கவும்:  உங்களுக்கு காது கேளாமை இருந்தால், உங்கள் செவித்திறனை ஒரு நிபுணரால் பரிசோதிக்க வேண்டியது அவசியம். செவிப்புலன் சோதனையானது உங்கள் ச...