முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகத்தில் ராணுவமே இல்லாத நாடு பற்றி உங்களுக்கு தெரியுமா?

Subbiahpatturajan






ஒரு நாட்டின் எல்லைகளை பாதுகாக்க இராணுவம் இன்றியமையாத படை.

ஆனால் உலகில் இராணுவமே இல்லாத நாடுகளும் சில உள்ளன.

அந்த நாடுகளுக்கு அருகில் உள்ள சில நாடுகள் தமது இராணுவத்தை வழங்கி பாதுகாப்பு அம்சங்களுக்காக உதவுகின்றன.

அந்த வகையில் இராணுவமே இல்லாத நாடுகளும் அவற்றின் பாதுகாப்புக்காக அவற்றுக்கு உதவும் ஒருசில நாடுகள் & பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றி காண்போம்.

1.அண்டோரா (Andorra)

இந்த நாடானது தமது பாதுகாப்புக்காக ஸ்பெயின் & பிரான்ஸ் உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்நாட்டுக்கு துணை இராணுவ பாதுகாப்புப் படை இருந்தாலும் அதுவும் அந்நாட்டின் காவல்துறையின் ஓர் அங்கமாகவே செயல்படுவதால் இதற்கான இராணுவ பாதுகாப்பை மேற்கண்ட நாடுகள் பெற்றுள்ளன.

2. டொமினிகா (Dominica)




இந்த நாட்டுக்கு கடந்த 1981 ம் ஆண்டு முதல் இராணுவப் படை இல்லை.

உள்நாட்டு பாதுகாப்புப் படையே (நம்ம காவல்துறை மாதிரி) இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது.

3.கிரினாடா (Grenada)


இந்நாட்டுக்கும் கடந்த 1981 முதல் உள்நாட்டு காவல் படையே நாட்டின் காவல் பொறுப்பையும் கண்காணித்து வருகிறது.

4.கிரிபாட்டி (Kribati)

இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்த நாட்டின் காவல் படையே இதன் தேசிய அளவிலான பாதுகாப்புக்கும் பொறுப்பு.

இந்நாட்டின் பாதுகாப்புக்கு ஆஸ்திரேலியா & நியூசிலாந்து ஆகிய நாடுகள் பொறுப்பேற்றுள்ளன.

5.லீக்டன்ஸ்டைன்

இராணுவத்துக்கான செலவு அதிகம் ஏற்படுவதால் இந்நாட்டின் இராணுவம் 1868ல் நீக்கப்பட்டது.

எனினும் போர் தொடர்பான சூழ்நிலைகளில் தற்காலிகமாக ஏற்படுத்த வழிவகை உண்டு.

இருந்தாலும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

இந்நாட்டுக்கான பாதுகாப்பு பொறுப்பையும் ஆஸ்திரேலியா & நியுசிலாந்து ஆகிய நாடுகளே ஏற்றுள்ளன.

இந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.இந்தியாவுடன் ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் கொண்டாடும் 4 நாடுகளுள் இதுவும் ஒன்று.

6.மார்ஷல் தீவுகள்

நாடு உருவானதிலிருந்து கடலோரக் காவல்படையுடன் ஒருங்கிணைந்த உள்நாட்டுக் காவல்படையே எல்லைப் பகுதியையும் காக்க பொறுப்பேற்றுள்ளது.

இந்நாட்டுக்கான பாதுகாப்பு பொறுப்பை அமெரிக்காவும் ஏற்றுள்ளது.

7.மைக்ரோனேசியா

இந்நாட்டுக்கான பொறுப்பையும் அமெரிக்காவே ஏற்றுள்ளது.

8.நவ்ரு

இந்நாட்டுக்கான பாதுகாப்புப் பொறுப்பை ஆஸ்திரேலியா ஏற்றுள்ளது.

இந்நாட்டுக்கு உள்நாட்டு காவல் பொறுப்பை அந்நாடே (நவ்ருவே) ஏற்றுள்ளது.

9.பலாவு

30 நபர்களுடைய உள்நாட்டு காவல் படையே நாட்டின் பாதுகாப்புக்கும் அனுமதிக்கிறது.

அமெரிக்கா இதனுடனான ஒப்பந்தத்தின் மூலம் பாதுகாப்பு வழங்குகிறது.

10.செயிண்ட் லூசியா

Special Service Unit, Coast Guard ஆகிய அமைப்புகள் இந்நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளன.

11.செயிண்ட் வின்செண்ட் & கிரினாடின்ஸ்

94 நபர்களைக் கொண்ட 2 துணை இராணுவப் படைகள் உள்ளன.

Special Service UnitCoast Guardஇதனுடன் உள்நாட்டு காவல்படை இதன் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.

12.சமோவா

நாடு உருவானதிலிருந்து இதற்கு இராணுவம் உருவாக்கப்படவில்லை.

சிறிய காவல் படை & கடலோர காவல்படை இதற்கான பாதுகாப்பை ஏற்றுள்ளன.

நியுசிலாந்தும் இதன் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ளனது.

13.சாலமன் தீவுகள்

இன் ரீதியான பிரச்சினை ஏற்படும் வரை இராணுவம் இருந்தது.

பிரச்சினையை ஆஸ்திரேலியா & நியுசிலாந்து நாடுகளின் தலையீட்டால் உள்நாட்டு பிரிச்சினை முடிவுக்கு வந்தது.

உள்நாட்டு காவல் துறை அமைப்புகளே நாட்டின் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றுள்ளன.

14.துவாலு

நாடு உருவானதிலிருந்து இராணுவம் ஏற்படுத்தப்படவில்லை.

கடலோர காவல்படை மே நாட்டின் பாத்துகாப்புக்கும் பொறுப்பேற்றுள்ளது.

15.வாடிகன் சிட்டி

இந்நாட்டின் Gendarmerie படையே இதன் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றுள்ளது.

இத்தாலி நாட்டின் பாதுகாப்புப் படை இதன் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது.

இதன் பாதுகாப்புப் படை 1970ல் நீக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...