முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சார் என் குழந்தைக்கு ஷு லேஸ் கூட கட்ட தெரியாது சார். தலை சீவ மாட்டான், நான் தான் இன்றும் உணவு கூட ஊட்டி விடுகிறேன்.

Subbiahpatturajan



_*குழந்தைகள் ஆரோக்கியத்துடனும்,   வளமுடனும் வாழ சில வரிகள்.*_ 

 *அன்றாட வீட்டு வேலைகளில் உதவிடும் குழந்தைகள் தாம் வாழ்வில் மிகச்சிறந்த வெற்றியடைய முடியும்.* 


 _சமீப காலங்களில் என்னுடைய மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் தரும் செய்தி._ 

சார் என் குழந்தைக்கு ஷு லேஸ் கூட கட்ட தெரியாது சார். தலை சீவ மாட்டான், நான் தான் இன்றும் உணவு கூட ஊட்டி விடுகிறேன்.

 *வயசென்னமா ஆச்சு ??. 10 வயசு சார்.* 

 _சரி!! 😲 என்ன படிக்கறார் மா?. 6 ம் வகுப்பு சார்._ 





சூப்பர். எப்படி படிப்பார் ?. நல்லா படிக்கறான் சார், ஆனா க்ரேட் தான் நெனச்ச மாதிரி வரல. கணக்குல ரொம்ப வீக், ஸ்போர்ட்ஸ் இண்ட்ரெஸ்ட் இல்ல, செஸ் வரமாட்டேங்குது, கராத்தே போக மாட்டேங்கறான், ஸ்விம்மிங் க்ளாஸ் போறான் ஆனா சளி பிடிக்குது வேண்டாம்னு வெச்சுட்டோம்.!! இப்போது வெஸ்டெர்ன் மியூசிக் படிக்கறான்.

 *ஒகெ ஒகெ..!  வீட்டு வேலைகளில் அக்கரை இருக்காமா?. வீட்டு வேலனா என்ன சார் ?.* 

 _அவன் உங்களுக்கும் உங்கள் அன்றாட தேவைக்கும் செய்யும் உதவிகள் மா.!_ 

 *அட நீங்க வேற சார், தண்ணீர் குடிக்க கூட எந்திரிக்க மாட்டான்!! 😢*
 



இது நல்லதாம்மா?. நல்ல படிச்சா போதும் சார்.

 *அப்படியானால் எதுக்கு கராத்தே, நீச்சல் எல்லாம் அனுப்பறீங்க.!? எல்லாம் தெரிஞ்சிருக்கனும் இல்லையா  சார், நாளைக்கு அவன் தனி ஆளா இந்த உலகத்தை  சமாளிக்கனுமே!!.* 

 _ஓஹோ..! ரைட்டு. வீட்டில் உள்ள விஷயங்களை சமாளிக்க தெரியாமல் எப்படிமா ஊரிலும், நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள விடயத்தினை சமாளித்திட முடியும் !._ 

 *அதில்ல சார், ஒரே பையன்.* 

 _இது இன்னும் மோசம், அப்ப, நீங்க மேலும் எச்சரிக்கையாக இருக்கணுமே மா!!._ 

அவரிடம் விபரங்களை கூறி, அந்த சிறுவனிடமும் அவனது பழக்க வழக்கங்களில் இருந்த சாதக பாதகங்களை எடுத்து கூறி, அன்றாடம் அவன் செய்ய வேண்டிய விடயங்களை ஓர் அட்டவணை போட்டு கொடுத்து அனுப்பிவிட்டேன்!.

*தற்போது கதை சுருக்கம்* ..! 

ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்தும் மானுடர்களுக்கான மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றான *Harvard Grant Study* எனும் ஆய்வில், *குழந்தைகளை அன்றாட வீட்டு பணிகளில் இருந்து விலக்கி வைப்பது பெரும் அபத்தம் எனவும், இதனால் அவர்களது பலவகையான ஆற்றல்களின் ஆக்கங்கள் குறைபடும் எனவும் அறிவுறுத்துகிறது.* 

மேலும், *படிப்பு, கற்றல், போட்டி தேர்வு, தரவரிசை, மதிப்பெண், மதிப்பீடு, பல்வேறு கலை கற்றல் இவை அனைத்திற்கும் தேவைப்படும் ஆக்கமும், ஊக்கமும், மன தைரியமும், நம்பிக்கை தூண்டலும், வெற்றி, தோல்விகளை பகுத்தறியும் பக்குவமும், உடனிருப்போருடன் உறவாடும் உளவியலும், நிச்சயமாக வீட்டில் நடத்திடும் நடத்தைகளே தீர்மானிக்கும் என்கிறது இந்த ஆய்வு.! மாறாக, சிறு வேலைகளை கூட செய்திட அனுமதிக்காத பெற்றோர்களை இந்த ஆய்வு எச்சரிக்கிறது ,* 

 _சார் .. என்ன சார் இது குழந்தையை எல்லாம் வேலை வாங்க சொல்றீங்க,_ 

*குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க பாடுபடும் தேசம் சார் இது* ??.

உண்மை .!/ நான் அவர்களை வேலை வாங்க சொல்லவில்லை. உங்கள் அன்றாட வேலைகளில் அவர்களை சேர்த்துக் கொள்ள தான் சொல்கிறேன். 

 *தினமும் பள்ளி செல்லும் குழந்தைகளானால் அவர்களது தண்ணீர் பாட்டிலை அவர்களே நிறைக்க செய்யுங்கள். அவர்களின் உணவு தட்டினை அவர்களை எடுத்து வந்து உணவை வாங்கி, தானாக உண்ண செய்யுங்கள். அவர்கள் தலை சீவுவது, காலணி அணிவது, அதற்கான பாலிஷ் போடுவது. வார விடுமுறைகளில், வீட்டின் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்தல், செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், கார் (அ) பைக் கழுவ உதவுதல், படுக்கை உறை மாற்றுதல், வாஷிங் மெசினில் அவர்கள் துணிகளை எடுத்து போடுதல், வெயிலில் காய்ந்த துணிகளை மடித்து வைத்தல், சமையலுக்கு காய்கறி கழுவுதல், குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்தல், சமையலறை பொருட்களை அடுக்குதல் என சின்ன சின்ன வேலைகளை வார கடமையக்கிடுங்கள்.* 



 _அவர்களை அன்றாட வாழ்வியலிலிருந்து அன்னியப்படுத்திடாதீர்கள். இவ்வனைத்திற்கும் ஒரு அழகான சன்மானம் வாராவாரம் வழங்கிடுங்கள்._ 

அவர்கள் விரும்பும்படி ஏதேனும் ஓர் ஹாபி அமைத்துக் கொடுத்து. உ.ம், மீன் தொட்டி, பறவை, நாய்குட்டி, புறாக்கள், பூச்செடி கொடிகள், அவைகளை பராமரித்திட செய்யுங்கள்.

 *முடிந்தவரை வீட்டில் இருக்கும் நேரங்களில் தொலைக்காட்சி 📺, கணினி விளையாட்டுக்கள், திரைப்படங்கள். உணவக உணவுகள் என அவர்களின் எண்ணங்களை செயற்கையான விடயத்திலிருந்து இயல்பான நம் அன்றாட தினசரி வேலைகளில் ஈடுபட செய்யுங்கள்.* 

 _இன்று பல கல்லூரி மாணவர்கள், அதிலும் முக்கியமாக மருத்துவம் பயிலும் மாணாக்கர் கூட தற்கொலை வரை சுலபமாக முடிவெடுத்து விடுகிறார்கள். மிக முக்கிய காரணம், தம்மையும் தம் சுற்றத்தினையும் பேணிட அறியாததால் மட்டுமே!!._ 

 _*குழந்தைகள் ஒன்றும். வீட்டில் வளர்க்கும் ஆர்க்கிட் பூச்செடி அல்ல பொத்தி, பொத்தி, உரம் போட்டு, நீர் ஊற்றி வளர்க்க, சிறு வெப்ப நிலை மாறினாலும் அது வாடிப்போய் இறந்துவிடும். மாறாக, அவர்கள் காட்டு மரங்கள் போல் வளர்ந்திட வேண்டும், முறையான வழிகாட்டுதலும், அரவணைப்பும், அக்கறையும் மட்டுமே இருத்தல் வேண்டும்.*_ 




 *

அதீத ஆர்வமும், தேவையற்ற கரிசனையும், எல்லை மீறிய அன்புபாராட்டுதலும் அவர்களுக்கு நிச்சயமாக நன்மை பயக்காது. *வாழ்க நல் ஆரோக்கியத்துடன்.* 
⚘⚘🌻🌻🌹🌹⚘⚘🌻🌻 நன்றி மருத்துவர்
Safi nagercovil.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...