முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

*குண்டக்க மண்டக்க : விளக்கம்*

Subbiahpatturajan



*சூடு சொரனை* : இருந்தால்... விளக்கம்....

*🔷🔶இரட்டை சொற்களுக்கான விளக்கம்* ....

*குண்டக்க மண்டக்க :*

🔸 *குண்டக்க* : இடுப்புப்பகுதி,
🔸 *மண்டக்க* : தலைப் பகுதி,

சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது,
வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்...

*அந்தி, சந்தி:*

🔸 *அந்தி* : .
மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது..
🔸 *சந்தி* : .
இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது..

*அக்குவேர்,ஆணிவேர்:*

🔸 *அக்குவேர்* :
செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்..
🔸 *ஆணி வேர்:* செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்...

*அரை குறை:*

🔸 *அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது..
🔸 *குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது...

*அக்கம், பக்கம்:*

🔸 *அக்கம்* : தன் வீடும், தான் இருக்கும் இடமும்...
🔸 *பக்கம்* : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்...

*கார சாரம் :*

🔸 *காரம்* : உறைப்பு சுவையுள்ளது...
🔸 *சாரம்* : காரம் சார்ந்த சுவையுள்ளது...

*இசகு பிசகு:*

🔸 *இசகு* : தம் இயல்பு தெரிந்து ஏமாற்றறுபவர்களிடம் ஏமாறுதல்...

🔸 *பிசகு* : தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்...

*இடக்கு முடக்கு:*

🔸 *இடக்கு* : கேலியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்...
🔸 *முடக்கு* : கடுமையாக எதிர்த்து தடுத்துப் பேசுதல்...

*ஆட்டம் பாட்டம் :*

🔸 *ஆட்டம்* : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது...

🔸 *பாட்டம்* : ஆட்டத்திற்கு பொருத்தமில்லாமல் பாடுவது...

*அலுப்பு சலிப்பு :*

🔸. *அலுப்பு* : உடலில் உண்டாகும் வலி...

🔸. *சலிப்பு* : உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்,..

*தோட்டம் துரவு ,*
*தோப்பு துரவு,*

🔸 *தோட்டம்* : செடி, கொடி கீரை பயிரிடப்படும் இடம்...

🔸 *தோப்பு* : கூட்டமாக இருக்கும் மரங்கள்...

🔸 *துரவு* : கிணறு...

*காடு கரை :*

🔸 *காடு* : மேட்டு நிலம் (முல்லை)...

🔸 *கரை* : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்)...

*காவும் கழனியும்:*

🔸 *கா* : சோலை...

🔸 *கழனி* : வயல்.. (மருதம் )...

*நத்தம் புறம்போக்கு :*

🔸 *நத்தம்* : ஊருக்குப் பொதுவான மந்தை...

🔸 *புறம்போக்கு* : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்...

*பழக்கம் வழக்கம் :*

🔸 *பழக்கம்* : ஒருவர் ஒரே செயலை பல காலமாக செய்வது...

🔸 *வழக்கம்* : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்தது செய்வது..

*சத்திரம் சாவடி :*

🔸 *சத்திரம்* : இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி )...

🔸 *சாவடி* : இலவசமாக தங்கும் இடம்...

*நொண்டி நொடம் :*

🔸. *நொண்டி* : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்....

🔸. *நொடம்* : கை, கால் . செயல் சுற்று இருப்பவர்.

*பற்று பாசம் :*

🔸 *பற்று* :நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்...

🔸 *பாசம்* : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது.

*ஏட்டிக்குப் போட்டி :*

🔸 *ஏட்டி* : விரும்பும் பொருள் அல்லது செய்வது... ( ஏடம் : விருப்பம்)

🔸 *போட்டி* : விரும்பும் பொருள். செயலுக்கு எதிராக வருவது தான்...

*கிண்டலும் கேலியும்:*

🔸 *கிண்டல்* : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது....

🔸 *கேலி* : எள்ளி நகைப்பது,..

*ஒட்டு உறவு :*

🔸 *ஒட்டு* : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.

*உறவு* : கொடுக்கல் சம்மந்தமான வகையில், நெருக்கமானவர்கள்...

*பட்டி தொட்டி :*

🔸 *பட்டி* : கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்)...

🔸 *தொட்டி* : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்...

*கடை கண்ணி :*

🔸 *கடை* : தனித்தனியாக உள்ள வியாபார நிலையம்.

🔸 *கண்ணி* : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடைவீதிகள்...

*பேரும் புகழம் :*

🔸 *பேர்* : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை..

🔸 *புகழ்* : வாழ்விற்கு பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை.

*நேரம் காலம்:*

🔸*நேரம்* : செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கெள்வது (Time,..

🔸 *காலம்* : ஒரு செயலை செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு..

*பழி பாவம் :..*

🔸 *பழி* : நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச்சொல்...

🔸 *பாவம்* , : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி...

*கூச்சல் குழப்பம்:*

🔸 *கூச்சல்* : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம்.(கூ-கூவுதல்)

🔸 *குழப்பம்* : துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்...

*நகை நட்டு :*

🔸 *நகை* : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒடஒட்டியானமந

🔸 *நட்டு* : சிறிய அணிகலன்கள்..

*பிள்ளை குட்டி:*

🔸 *பிள்ளை* : பொதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்...
🔸 *குட்டி* : பெண் குழந்தையை குறிக்கும்...

*பங்கு பாகம்:*

🔸 *பங்கு* : கையிருப்பு.. பணம்,நகை, பாத்திரம்.( அசையும் சொத்து)...
🔸 *பாகம்* : வீடு, நிலம்.. அசையா சொத்து...

*வாட்டம் சாட்டம் :*

🔸 *வாட்டம்* : வளமான தோற்றம், வாளிப்பான உடல்...
🔸 *சாட்டம்* : வளமுள்ள கனம். தோற்றப் பொலிவு...

*காய் கறி :*

🔸 *காய்* : காய்களின் வகைகள்...
🔸 *கறி* : சைவ உணவில் பயன்படுத்தப்படும் கிழங்கு வகைகள்...

*ஈவு இரக்கம் :*

🔸 *ஈவு* : (ஈதல்) கொடை கொடுத்தல், வறியவருக்கு உதவுதல்...
🔸 *இரக்கம்* : பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்...

*பொய் புரட்டு:*

🔸 *பொய்* : உண்மையில்லாததைக் கூறுவது...

🔸 *புரட்டு* : ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி பொய்யை உண்மையென கூறி நடிப்பது...

*சூடு சொரனை* :

🔸 *சூடு* : ஒருவர் தகாத செயல், சொல்லை செய்யும் போது உண்டாகும் மனக்கொதிப்பு...

🔸 *சொரணை* : நமக்கு ஏற்படும் மான உணர்வு,,,


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...