முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சதுரங்கம் எப்படி விளையாடலாம் டிப்ஸ்...!?

Subbiahpatturajan




சதுரங்கத்தின் சில நுணுக்கங்கள்

சதுரங்கம் விளையாடும்போது பலருக்கு பயம்.

எதிராளி ராணியை முன்னிறுத்தி விட்டாரே நம்ம ஆட்டம் என்னாகுமோன்னு.

என்னைக்குமே ஒரு சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

சதுரங்கத்தில் இரு ராணிகளும் நேருக்கு நேர் தான் இருப்பார்கள்.

அதனால் முதலிலேயே உங்கள் ராணியைக் கொண்டு எதிராளியின் ராணியை வீழ்த்துங்கள்.

ஒரே நேரத்தில் இருவரும் தமது பலத்தை இழப்பீர்.

அடுத்ததாக குதிரைகளை ஒவ்வொன்றாக வெளியேற்றுங்கள்.

எந்தவொரு சூழலிலும் குதிரையை மட்டும் பலியாக்கிவிடாதீர்கள்.

ஆட்சிக்கு வேண்டுமானால் ராணி அவசியம் ஆட்டத்துக்கு குதிரைதான் உண்மையான ராணி.

எப்போதும் ராஜாவுடன் ஒரு யானையாவது இருப்பதை உறுதி செய்யுங்கள்.

ராஜாவுக்கும் அருகில் உள்ள யானைக்கும் நடுவில் ஒரு இடமாற்றுக் கட்டம் இருக்கும்.

அதைக் கொண்டு இருகாய்களையும் இடம் மாற்றிக்கொள்ளுங்கள்.

முக்கியமாக ராஜாவுடன் இருக்கும் அந்த ஒரு யானையை மட்டும் எதற்காகவும் நகர்த்திவிடாதீர்கள்.

முடிந்தவரை பலமான காய்களையே முன்னிறுத்துங்கள்.

சிப்பாய்களை களமிறக்காதீர்கள். (சிறு துரும்புதான் பல் குத்த உதவும்).

சிப்பாய்களை காப்பாற்றுங்கள். 

இறுதியில் அவைதான் ராணியாகவும் குதிரைகளாகவும் மாறும்.

எப்போதும் எதிராளியின் காய்களுக்கு எதிரான பலமுள்ள காயை முன்னிறுத்துங்கள்.

உதாரணத்துக்கு எதிராளியின் யானையை வெட்டும்படி மந்திரி அல்லது குதிரையை நிறுத்துங்கள்.

யானைக்கு சமமான யானையை நிறுத்தினால் உங்கள் பலத்தை இழக்க நேரிடும்.

குதிரையை நன்கு பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு குதிரையைக் கொண்டு ஆட்டத்தையே மாற்றலாம். சுருக்கமாக கூறினால் இந்த 'ப்ளாக் மெயில் ' பன்றான்னு சொல்லுவோம் பாருங்க. 

அந்த விசயத்துல நம்ம குதிரையை அடிச்சுக்க ஆளே இல்ல.

உங்கள் ஆட்டத்திலேயே கவனமாக இருக்காதீர்கள். எதிராளியின் அசைவைப் பொறுத்து உங்கள் வியூகங்களை மாற்றிக் கொண்டே இருங்கள்.

உங்கள் சிப்பாயை கொண்டு எதிராளியின் முனையை அடைந்தால் பெரும்பாலும் அனைவரும் ராணியை எடுப்பர். 

இவ்வளவு தூரம் யோசிக்கும் பலர் அவ்விடத்தில் கோட்டைவிடுவர்.

அவ்விடத்தில் உள்ள சூழலைப் பொறுத்து குதிரையை களமிறக்க முடியுமா என சிந்தியுங்கள்.

காரணம் ராணியைக்கூட மடக்கலாம். குதிரையை அடக்க முடியாது.

ஒருவேளை நீங்கள் தோல்வியை நோக்கி பயணிப்பதாக தோன்றினால் உங்களிடம் உள்ள காய்களில் ஏதேனும் வலிமையற்ற காய்கள் மூலம் எதிராளியின் வலிமையான காய்களை வீழ்த்த முடியுமா என்பதை கவனியுங்கள். 

எதிராளியின் ராணியின் நகர்வை கவனிப்போமே தவிர அவரது ராணியை வெட்டும் நிலையில் தயாராக உள்ள நம்ம சிப்பாயை கவனிக்கவே மாட்டோம்.

இறுதியாக, அடிக்கடி அனைத்து காய்களையும் கவனியுங்கள். 

நிச்சயம் ஏதேனும் ஒரு காய் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தயாராகவே இருக்கும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...