முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழானது எப்படியெல்லாம் சமஸ்கிருதத்துக்கு மாறி யிருக்கிறது.

Subbiahpatturajan



 தமிழானது எப்படியெல்லாம்

  சமஸ்கிருதத்துக்கு மாறி யிருக்கிறது. 




குடமுழுக்கை - கும்பாபிஷேகமாக்கி
அருள்மிகுவை - ஶ்ரீ ஆக்கி
கருவறையை - கர்ப்பகிரகமாக்கி
நீரை - ஜலமாக்கி
தண்ணீரைத் -தீர்த்தமாக்கி
குளியலை -ஸ்நானமாக்கி
அன்பளிப்பை - தட்சணையாக்கி
வணக்கத்தை - நமஸ்காரமாக்கி
ஐயாவை - ஜீயாக்கி
நிலத்தை - பூலோகமாக்கி
வேளாண்மையை -  விவசாயமாக்கி
வேண்டுதலை - ஜெபமாக்கி
தீயை - அக்னியாக்கி
குண்டத்தை - யாகமாக்கி
காற்றை - வாயுவாக்கி
விண்ணை - ஆகாயமாக்கி
பூவை - புஷ்பமாக்கி
தொழுதலை - பூஜையாக்கி
முறைகளை -  ஆச்சாரமாக்கி
படையலை -  நைவய்தியமாக்கி
திருமணத்தை - விவாகமாக்கி
பிள்ளைப் பேறை -  பிரசவமாக்கி
பிணத்தை - சவமாக்கி
மக்களை - ஜனங்களாக்கி
உணர்வற்றதை - சடமாக்கி
ஒன்பதாம் நாளை -  நவமியாக்கி
பத்தாம் நாளை -  தசமியாக்கி
பிறந்தநாளை - ஜெயந்தியாக்கி
பருவமடைதலை -  ருதுவாக்கி - 
அறிவைப் - புத்தியாக்கி
ஆசானைக் - குருவாக்கி
மாணவனை -  சிஷ்யனாக்கி
அறிவியலை -  விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை - அப்பியாசமாக்கி
பள்ளிகளை -  வித்யாலயமாக்கி
அவையை - சபையாக்கி
கலையை - சாஸ்திரமாக்கி
இசையை - சங்கீதமாக்கி
ஓவியத்தை - சித்திரமாக்கி
ஆடலை - நடனமாக்கி
ஆடையை - வஸ்திரமாக்கி
அழகை -  சுந்தராக்கி
முகத்தை - வதனமாக்கி
முடியை - கேசமாக்கி
உறக்கத்தை -  நித்திரையாக்கி
உண்மையை -  சத்தியமாக்கி
நல்லதை - புண்ணியமாக்கி
கெட்டதை - பாவமாக்கி
கொடையை - தர்மமாக்கி
அமிழ்தை - அமிர்தமாக்கி
நஞ்சை - விஷமாக்கி
சான்றை - ஆதாரமாக்கி
பெரியதை - மஹாவாக்கி
செருப்பை -  பாதரட்ஷையாக்கி 
திருவிழாவை -  உற்சவமாக்கி
பயணத்தை - யாத்திரையாக்கி
உலகத்தை - லோகமாக்கி

எப்படி எப்படி அழகு தமிழ்ச் சொற்கள் அழிந்து ள்ளன. 
வெப்பம்+இல்லை
வேப்பிலை!
உடல் வெப்பத்தை
இல்லையென்றாக்கும்
வேப்பிலை!

கரு+வெப்பம்+இல்லை
கருவேப்பிலை!
கருப்பை வெப்பத்தை
இல்லையென்றாக்கும்
கருவேப்பிலை!

அகம்+தீ−அகத்தீ
உடலின் உள்ளே
அகத்தின் தீயைக் குறைக்கும்
அகத்தி!

சீர்+அகம்−சீரகம்
அகத்தின் சூட்டைச்
சீராக்கும்
சீரகம்!

காயமே இது பொய்யடா−வெறும்
காற்றடைத்த பையடா!
காயத்தின் காற்றை
வெளியேற்றும்
பெருங்காயம்!

வெம்மை+காயம்−வெங்காயம்
உடலின் வெம்மையைப்
போக்கும் வெங்காயம்!

பொன்+ஆம்+காண்+நீ
பொன்னாங்கண்ணி!
உண்டால்
உடல் பொன் ஆகும்
காண்நீ!

கரிசல்+ஆம்+காண்+நீ
கரிசலாங்கண்ணி
காய்ச்சிய எண்ணெய்
கூந்தலைக் கரிசலாக்கும்
காண் நீ!

சொற்களுக்குள்ளே
மருத்துவம் வைத்தான்!
நம் மகத்தான பாட்டன்!

தமிழ்ச் சொற்களை
மறந்தோம்!
நம் மருத்துவம்
மறந்தோம்!
சொன்ன பாட்டியை
மறந்தோம்!
பாட்டனை மறந்தோம்!

மனிதக் கிருமி மறந்த மருத்துவம்!
மனிதக் கிருமி மறுத்த மருத்துவம்!
மனிதக் கிருமி
அழித்த மருத்துவம்!

மனிதனை அழிக்கும் 
கிருமியால் உயிர்த்தது.
இது இயற்கையின் வெற்றி!நம் தமிழ்
இனத்தின் வெற்றி!👍👍
படித்தேன். பகிர்ந்தேன்..💐💐
நன்றி🙏🙏

தமிழ் மொழியைப் பேணுவோம். முடிந்த வரை மேற்க ண்ட தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்துவோம் தமிழ் வாழ்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...