முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Try this to live fully in New Year 2025...


Subbiahpatturajan
 புது வருடம் 2021ல் *நமது வருமானம் குறைவாக இருந்தாலும்*,நிறைவாக வாழ பழகலாமே !இதை செய்து பாருங்கள்.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு 

மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.
 
உதாரணமாக--
1.  ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று)

2.  விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை.

3.  பிரிட்ஜில் வைக்காத பொருள்கள்.

4.  ஒரு கேரட்டுடனும் , (அல்லது)
சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது.

(இது --- கண்ணுக்கும்,
இரத்தம் அதிக மாவதற்கும்,
அறிவிற்கும்,
ஞாபக சக்திக்கும்  நல்லது.)

5.     80 சதம் கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது.

6.   தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே.

7.   முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே.

8.   சாதத்தை வடித்து சாப்பிடலாமே.

9.   வடித்த கஞ்சியை
பழய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாமே.

10.   இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக வைத்து பயன் படுத்தலாமே.

11.   ஒரு நாளின் எல்லா நேரத்திலும்

கீழே கண்டபடி சுவாசித்து பழகலாமே.

வேகமாக தொப்புள் வழியே காற்று உள்ளே வந்து ,

மெதுவாக உச்சந்தலை வழியே வெளியே செல்வதாக மனதில் நினைத்தபடியே சுவாசிக்கலாமே.

12. காலையில் முதல் வேலையாக அதிக தண்ணீரை குடித்து மலத்தை கழித்துவிடலாமே.  (அ)
 வெதுவெதுப்பான தண்ணீரை பயன் படுத்தலாமே.
(அ)
உப்பும் , எலுமிச்சை சாறும் கலந்து குடிக்கலாமே.

ஒரே மாதத்தில் குடல் நார்மலாக செயல் படும் நிலைக்கு வந்து விடுமே.

13.   வடக்கு பக்கம் தலைவைத்து படுப்பதை தவிர்க்கலாமே.

14.   பசிக்கும்போது உடைத்த-கடலை , முளைகட்டிய பயறுகளில்  ஏதாவது ஒன்று, வேர்க்கடலை கொய்யா பழம் போன்ற விலை மலிவான பொருட்களை பயன் படுத்தி பழகலாமே.

15.   தினமும் சூரியன் நம்மீது 10 to 20 நிமிடம் படும்படி இருக்கலாமே.

பல பல லட்ச ரூபாய் மருத்துவ செலவை குறைக்கலாமே.

16.   நமது மகிழ்ச்சி என்பது வெளியில் எந்த பொருளிலும் இல்லை.

நாம் நினைக்கும் நேர் மறை எண்ணத்தில் மட்டுமே இருப்பதை நம்பலாமே.

17.  எண்ணெய் குளியல், 
குடல் சுத்தம்,
போன்றவற்றை கடைபிடிக்கலாமே.


18.   மிக சிறந்த உணவையும் சாப்பிடாமல்,
மனக் கட்டுப் பாடுடன்

படையலைப் போட்டு, 

அதை பார்த்து ரசித்த படி இருக்கும் போது

அதன் சத்துகளை உடல் கிறகிப்பதை உணர்ந்த பிறகு

நிதானமாக சிறிது சாப்பிட்டதுமே

திருப்தி உண்டாவதை உணரலாமே. 

19.  அடிக்கடி உண்ணா விரதம் இருந்து ,

உடல் காற்றின் உதவியுடனும் செயல் படுவதை ரசனையுடன் உணரலாமே.

20.   செக்கு எண்ணெய்யின் விலை அதிகமாக இருந்தாலும்

அதையே பயன்படுத்தலாமே. 

சுட்ட எண்ணையை மீண்டும் பயன் படுத்துவதை தவிர்க்கலாமே.

21.  மைதா பொருட்களை தவிர்க்கலாமே.

22.  வெது வெதுப்பான நீரை முதலில் தலையில் ஊற்றியும் ,

சாதாரண நீரை முதலில் காலில் இருந்து ஊற்றியும்

குளிக்கலாமே.

குளிக்கும் போது வாயை மூடி இருக்கலாமே.

பலர் அப்போது வாயால் சுவாசித்து உடல் நலத்தை கெடுத்து கொள்வதை கவனிக்கலாமே.

23.   தூக்கம் உடனே வராத மனநிலையில் இருப்பவர்கள்,

கடைசி சொட்டு காற்றையும் வெளியே விட்டு விட்டு,

மூச்சை இழுக்காமல் இருக்கவும்.

அதிகப்படியான காற்றை வேகமாக முடிந்த வரை இழுத்து ,

சிறிது நேரத்தில்

மெதுவாக வெளியே விடலாமே.

இவை ஒரு சுற்று சுவாசம்.

இப்படி இருபது சுற்றுவரை

எண்ணுவதற்கு முன்பே நாம் தூங்கி விடுகிறோம்.
 
24. *மிக எளிதான உடற்பயிற்சி*: தோப்புக்கரணத்தை முடிந்த வரை போடலாமே.

படிப்படியாக அதிகப் படுத்திக் கொள்ளலாமே.

அப்போது மூச்சை விட்டபடியே உட்கார வேண்டும்.

கைகள் பெருக்கல் குறியை போல காதுகளை பிடித்து இருக்க வேண்டும்.

25.  வீட்டில் நேர்மறை சக்தி அதிகமாவதற்கு
வசம்பு,
படிகாரம்,
எலுமிச்சை,

போன்ற பொருள்கள் உதவுகிறது.

விருப்பம் உள்ளவர்கள்
படுக்கை அறைகளில் மறைவாகவும் வைத்து பயனைப் பெறலாமே.

26.  உடலில் 
நேர்-மறை சக்தி அதிகமாவதற்கு

நல்ல எண்ணம் உள்ளவர்களின் அருகில் இருக்கலாமே. (அல்லது)  

கோவில் சுற்றலாமே. 

பிரமிடு அமைப்பின் மையத்தில் வைக்க பட்ட கருங்கல்லில் இருந்து வெளிப்படும்

காந்த சக்தியை அருகில் சென்று பெறலாமே.
 
உச்சரிக்க கடினமான வார்த்தைகளை 

நாம் தவறு இல்லாமல் படிக்கலாமே. 

நாம் மனம் ஒன்றி படித்தால் மட்டுமே தவறே இல்லாமல் படிக்க முடியும்.

இதுவே மந்திரம்.

உச்சரிக்கவே கடினமான (மந்திர) சப்தத்தம் 

வேறு ஒருவரிடம் இருந்து வெளிப்பட்டாலும்

அந்த சப்தம்  நமது வாயில் இருந்தே வெளிப்படுவதை போலவே

நாம் மனதால் நினைக்க முடியும்.

ஒருவித காந்த சக்தி நம்முள் வந்து சேர்வதை நம்மால் உணர முடியும்.

27.   நாம் நம்பிக்கை வைத்து வணங்கும் அளவுக்கே ,

நமது காந்த அலைவரிசையானது 

எங்கும் எப்போதுமே செயல் போட்டபடியே உள்ள பிரபஞ்ச காந்த அலைவரிசையுடன் (ஓரளவுக்கு) ஒத்துப் போகும். 

எந்த கடவுளை எந்த பெயரில் வணங்கினாலும்,

நமக்கு இந்த பிரபஞ்சத்தின் காந்த சக்தி கிடைக்கிறது .
*நல்ல பலன் கிடைக்கிறது.* 

28.  இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர் இல்லாத வைகளும்,  உயிர் உள்ள வைகளும் 

நாம் ஒவ்வொரு வரும்,

கடவுளின் ஒவ்வொரு துளிகளே.

28.  மாதம் ஒரு முறை யாவது சமையல் அறையில் எல்லா பொருட்களையும் 

நிறப்பினால் தான் 
சமையல் சரியாக இருக்கும்.

இதுபோல--
உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களையும் உடலில் சேர்க்கவே 

பண்டிகை காலங்களில் பல தரப்பட்ட உணவு பழக்கவழக்கங்கள் கடைபிடிக்க படுகிறது.

சமூகத்தில் சத்துகுறைவால் வியாதி வருவது தடுக்கப்படுகிறது.   சமூக தர்ம பழக்கங்களின் மூலமாக எளிய மனிதர்களுக்கும் நல்லது நடக்கிறது.

எலுமிச்சை+இஞ்சி+பூண்டு மருந்து இதய அடைப்பை நீக்குகிறது.

கருஞ்சீரகம்+ஓமம்+ வெந்தயம் மருந்து மனிதர்களுக்கு வரக்கூடிய 4448 வியாதிகளையும் தடுத்து கட்டுப்படுத்துகிறது.

உடலில் அதிக ஆக்ஸிஜனை சேர்ப்பதன் மூலம் கேன்சரை கட்டுப்படுத்த முடிகிறது.

மேலே குறிப்பிட்டவைகளை கடைபிடித்து வாழ நம் எல்லோராலும் எளிதாக முடியும்.

இந்த உலகிலேயே மிகவும் உயர்ந்த பதவியையும்,

அளவிடவே முடியாத பணத்தையும் வைத்து கொண்டு இருந்தாலும் பயன் இல்லை.

தினமும் பரபரப் பாகவே வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பவர்களே அதிகம் .

எல்லா பழத்திலும் தோலும் கொட்டையும் இருப்பதை நினைத்து கவலைபடுபவர்களே அதிகம்.

இதுபோலவே--

அனைவரிடமும் குறைகளை மட்டுமே கவனித்து குறைகளையே பேசி வாழ்பவர்களே அதிகம்.

நாம் நேர்மறை எண்ணத்துடன் வாழும் போது நமது மனம் ,

நமது சுவாசத்தை ஆழமாக நிர்வகித்து ,

அதிக நிம்மதியையும், 
அதிக திருப்தியையும்,
அதிக ஆயுளையும் தருகிறது.

நன்றி.
வணக்கம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...