முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை...

Subbiahpatturajan

Cinartamilan

கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை...

ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.

முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.

இப்படிதான் ஒருநாள்.


ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான்.

இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.
வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கணவனின் நன்பருக்கும் Phone செய்கிறாள். கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புலம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்

இவளை பார்த்த கணவன் பயந்து போய் திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கணவனின் நண்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கணவனை அனைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறான். அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கணவன்.

மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு... என்கிறார்
மருத்துவர்...உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...
அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.

காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
எங்கோ பிறந்து வளர்ந்து நமக்காக தாயை விட நம்முள் அய்க்கிய மாகும் உன்னதமான உறவு அது இதில் சில பணப்பேய்களும் உண்டு நாம் ஜாக்கிரதை ஆக இருக்க வேண்டும் கட்டாயம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...