முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நினைத்துப்பாருங்கள் இவை எல்லாம் இந்தியாவில் சாத்தியமா என்று.?

Subbiahpatturajan
 நான் என் இளங்கலை மருத்துவபடிப்பை ரஷ்யாவில் பயின்றேன்.முதுகலை மகப்பேறு மருத்துவத்தை தமிழ்நாட்டில் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் முடித்தேன்.
நினைத்துப்பாருங்கள் இவை எல்லாம் இந்தியாவில் சாத்தியமா என்று.?

கல்லூரி வாழ்க்கையில்

       இளங்கலை படிக்க நான் ரஷ்யா சென்றபோது எனக்கான அனுபவங்கள் நம் நாட்டிற்கு நேர் எதிராக இருந்தது.நான் சென்றபோது விடுதியில் என் அறை தோழிகளாக கென்ய நாட்டை சேர்ந்த இரு மாணவிகள் இருந்தனர்(கதீஜா மற்றும் லும்பிரியாது).அதுவே ஒரு சிறப்பான அனுபவம் தான்.அப்போது தான் தெரிந்தது நான் மொழிப்பாடம் பயின்ற அந்த கல்லூரியில் இந்திய பெண்களே யாரும் இல்லை,இந்தியாவில் இருந்து அங்கு படிக்கும் ஒரே பெண்ணாக நான் இருக்கிறேன் என்பது.பிறகு சில மாதங்கள் கழித்து வேறு இந்திய பெண்கள் வந்தனர்.பிறகு தமிழ் பெண்களும்(மாணவிகள்) ஒருசிலர் வந்து இணைந்தனர்.அதன்பிறகு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்டேன்.

ரஷ்ய காவல்துறை

         மொழிப்பாடம் பயின்ற காலத்தில்(MADI Institute) ஒருநாள் அவசரமாக கல்லூரிக்கு சென்ற நேரத்தில் என்னுடைய passport மற்றும் student ID card எடுத்துச்செல்ல மறந்துபோனேன்.இது இல்லாமல் சாலையில் நாங்க பயணிக்க கூடாது.ஆனால் அவசரத்தில் கல்லூரிக்கு சென்ற போது இதை எடுக்காமல் சென்றேன்.வழியில் காவல்துறை மடக்கியது.ரஷ்ய ஆண்களை பார்த்து இருப்பீர்கள் நீங்கள்.எல்லாரும் உயரமா உடல்வாகுவோடு குஸ்தி வாத்தியார் போல இருப்பார்கள்.அதிலும் காவல்துறை என்றால் கேட்கவே வேணாம்.விசாரணைக்கு வா என என்னை காவல்நிலையம் அழைத்து சென்றார்கள்.மனசுக்குள் பக் பக் என அடிக்குது.தனியொரு பெண்ணாக அங்குள்ள காவலர்களிடம் மாட்டி காவல்நிலையமும் செல்கிறேன்.என் வயசு 18.எனது நிலையை யாரிடம் பகிர்வது?தொலைபேசி இல்லையே.
            சிதம்பரம் பத்மினியின் காவல்நிலைய பாலியல் வன்புணர்வும்,அதற்காக தோழர்களோடு இணைந்து என் அம்மா போராட்டம் நடத்தியதும் என் கண் முன் நின்றது.ஒருவித அச்சத்தோடு தான் காவல் நிலையம் சென்றேன்.police jeapல வச்சு ஏத்திக்கொண்டு போனாங்க என்னை.ஒரு 8 மணிநேரம் அங்கு உட்கார வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டேன்.எனக்கு தேநீர் மற்றும் choclates,biscuits வழங்கப்பட்டது.இதுல மயக்கமருந்து  எதுவும் தடவி கொடுப்பானுங்களோ என்ற பயத்தில் முதலில் அதை தொடதயங்கிய நான் பிறகு அவர்களும் அதை உண்ணுவது பார்த்து நானும் எடுத்து சாப்பிட்டேன்.8மணிநேர விசாரணைக்கு பிறகு அதே காவல் வாகனத்தில் விடுதிக்கு வந்து விடப்பட்டேன்.விடுதிக்கு வந்தபோது என் விடுதி அறைக்குள் உள்ளே வந்து என் passport மற்றும் student card பார்த்துவிட்டு சென்றனர்.நன்றிகூறி வாழ்த்தி சென்றனர் என்னை.

இந்தியாவில் சாத்தியமா?

       நினைத்துப்பாருங்கள் இவை எல்லாம் இந்தியாவில் சாத்தியமா என்று.தமிழக காவல்நிலையத்திற்குள் நம்மால் இப்படி சென்று வர முடியுமா?18வயது இளம் பெண்,துணைக்கு யாரும் இல்லாமல்,ஆண் காவலாளிகள் சூழ 8மணிநேரம் இருக்க முடியுமா இங்கு?மேலை நாடுகளில் மட்டும் இது சாத்தியம் ஆவது ஏன்?

தங்கும் அறையில்

       அதேபோல் விடுதிகளிலும் ஆண்களுக்கு தனி விடுதி,பெண்களுக்கு தனி விடுதி இல்லை.ஆண் மற்றும் பெண் மாணவ மாணவிகள் ஒரே விடுதியில் தான் தங்கினோம்.ஏழு ஆண்டுகள் இப்படி வாழ்ந்து இருக்கேன் ரஷ்யாவில்.ஒரு நாள் கூட ஐயோ பயமா இருக்கே இவன் தொட்டுடுவானோ அவன் தொட்டுடுவானோ என பயந்ததே இல்லை.பெண்கள் பெரிதும் போற்றப்பட்டோம் ரஷ்யாவில்.

பெண்களிடம் மரியாதை

      பேருந்து,மெட்ரோ,டிராம் எதில் பயணம் செய்தாலும் ஆண்கள் அமர்ந்து பெண்கள் நிற்பதுபோல் ஒரு காட்சியை காணமுடியாது.ஒரு ஆண் அமர்ந்து இருக்கும்வேளையில் ஒரு பெண் அந்த பேருந்திற்குள் ஏரியமாத்திரத்தில் அந்த ஆண் தாமாக எழுந்து பெண்ணனிற்கு இருக்கையை கொடுப்பார்.

இந்தியாவில் பெண்கள்

      அங்கு இரவு 12மணிக்கும் சாலையில் பயணிக்க முடியும் ஒரு பெண்ணால்.இங்கு ஏன் அப்படி பயணப்பட முடியல?காரணம் பெண்களை ஒரு போகப்பொருளாவே இங்கு நாம் பார்க்கிறோம்.கலாச்சாரம் என்றபெயரில் பெண்களை அடக்கியே வைக்கிறோம்.
இழுத்துபோர்த்திக்கொண்டு ஆடை அணிந்துவந்தால் நிர்பயாக்கள் இங்கு உருவாகமாட்டார்கள் என நினைக்கிறோம்.இழுத்துபோர்த்தப்பட்ட ஆடைக்குள் பெண் என்கிற பொக்கிசம் இருப்பதாக நினைக்கிறோம்.பொக்கிஷமா நினைக்க நினைக்க தான் அதை தீண்ட இங்கே வெறி கிளம்புகிறது.
மேலைநாடுகளில் வன்புணர்வுகள் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அங்கே பெண்கள் பெண்களாகவே பார்க்கப்படுகின்றனர்.

         ஆகவே தமிழ்நாட்டிலும் பெண்கள் பெண்களாகவே பார்க்கப்படவேண்டும்.ஆடைகளில் மறைத்துவைக்கப்படுவது அல்ல பெண்மை.
மருத்துவர்.அனுரத்னா  

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
நாமும் இது போல் பழக்கம் பழகிக் கொள்ள வேண்டும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...