முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை ஒரேயொரு முறை தான்... நல்லா தான்...வாழ்ந்து பார்க்கலாமே...

Subbiahpatturajan




இதுதான் வாழ்க்கை!

தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர்,

தனது நண்பனும் பகைவனும் 
என்ற பத்து பேர்,

தனது தொழிலில் ஒரு பத்து பேர்,

தனது வீதியில் ஒரு பத்து பேர்,

தனது மதத்தில், ஜாதியில் 
ஒரு  நூறு பேர்..!

இந்த 140 பேரின் நடுவில் 
தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது.

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து 
அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கைவாழ கட்டாயப்படுத்துகிறது.

அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது.

பொருளாதார ரீதியாக 
தன்னிறைவு அடைந்ததும் 
பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.

இந்த 140 பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன.

இதற்காக தன்னுடைய 
அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து,   
மனித ஜடமாக வாழும் பலருக்கு 
இந்த பூமிப்பந்து 
எழுநூறு கோடி மக்களால் ஆனது 
என்பது தெரிவதில்லை.

என்னுடைய தாத்தாவின் தாத்தா 
எப்படி இருந்தார் என்பது எனக்குத்தெரியாது!

எப்படி வாழ்ந்தார் என்பது 
எனக்குத் தெரியாது!

அவர் நல்லவரா கெட்டவரா 
எனக்குத் தெரியாது!

அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது,

எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது!

இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!

நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் 
கால ஓட்டத்தில் மறையும்!

ஆக 
எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரக்தை நான் 
கண்டு கொள்ள வேண்டும்?

யார் இவர்கள்?

என்னுடைய வாழ்க்கையில் 
யாரெல்லாம் வர வேண்டும், 
வரக்கூடாது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்?

நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!

அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!

அதுவும் வெகு தொலைவில் இல்லை!

சர்வமும் ஒருநாள் அழியும்.

மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!

தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்.

வாழ்க்கை ஒரே ஒருமுறைதான்!

தோற்றால் பரவாயில்லை, 
ஆனால் பங்கெடுக்காமலேயே 
அழிந்து விடாதீர்கள்.

நம் தாத்தாவின் தாத்தாவை 
நாம் பார்த்ததில்லை. 
அதேபோல் 
நம் பேரனின் பேரனை 
நாம் பார்க்க இருக்கப் போவதில்லை. இதுதான் வாழ்க்கை.

"பிறரை வஞ்சிக்காமல் 
தொந்தரவு செய்யாமல் 
எவ்வளவு இயலுமோ 
அவ்வளவு மகிழ்ச்சியாய் 
வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள்."

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
ஆமா இப்போது நாம் எல்லோரும் மகிழ்ச்சியான முறையில் வாழ்கிறோமா என்று சந்தேகமாக இருக்கிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...