முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீரப்பனும் - விலகாத மர்மங்களும்....

Subbiahpatturajan





வீரப்பனும் - விலகாத மர்மங்களும்:
      

மனிதன் பொய் சொல்லுவான், ஏமாற்றுவான், பழிவாங்குவான், நேர்மையற்ற செயலை செய்வான், யானைகளை பிடித்து சர்க்கசிற்கு விற்பான், யானையைக் கொடுமைப்படுத்தி பணம் காண்பான். மனிதனைப்போல கொடுமைக்காரர்கள் யாரும் இல்லை.

இதைக் கூறியவர் வேறு யாருமல்ல, யானைகளைக்கொன்று தந்தங்களைக் கடத்துகிறார் என்று குற்றம்சாட்டப்பட்ட கூசு முனிசாமி என்ற வீரப்பன் தான்.

மேட்டூர், சத்தியமங்கலம் மலைகளையும், காடுகளையும் கட்டிக்காத்த காவல்காரன்,
விலங்குகளுடனும், பறவைகளுடனும், பாம்புகளுடனும் காட்டிற்குள்ளேயே சேர்ந்து வாழ்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையை தனது ராஜாங்கமாக்கி, எந்த சந்தர்ப்பத்திலும் அசராத வீரம் கொண்டு, தமிழ்நாடு,கர்நாடகா, என இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் படைக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி 34 வருடங்களுக்கு மேல் சத்தியமங்கலம் காட்டை ஆண்டு வந்த "காட்டுச்சிங்கம்"...!
இன்று வரை பெரும் சவலாக இருந்து வரும் "காவேரி பிரச்சனையைக்" கூட ஒற்றை ஆளாய் இருந்து சமாளித்து , "வந்து பார்" என்றவர்..!
யானை தந்தங்களை கடத்தியதாகவும், சந்தன மரங்களை கடத்தியதாகவும், 184க்கும் மேற்பட்ட கொலை செய்ததாகவும் இவர் மீது பதியப்பட்ட வழக்குகள் ஏராளம். (அதில் பெரும்பாலும் பொய் வழக்குகளே)

அரசும் சரி, காவல்துறையும் சரி, ஊடகங்களும் சரி, வீரப்பனை ஒரு வில்லனைப் போன்று தான் சித்தரித்தன. நிச்சயமாக அவரை எதிர்மறையாகத்தான் அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.
ஆனால் உண்மையென்னவென்றால்,
"ஊடகங்கள் முன் அவன் கடத்தல்காரன்,
மக்கள் முன் அவன் காவல்காரன்". போராளி.

வீரப்பன் இருந்த காட்டிற்கு அருகே வசிக்கும் மக்கள் வீரப்பனை காவல்தெய்வமாகத்தான் பார்க்கிறார்கள்.
இருப்பவனிடம் இருந்து பொருட்களை எடுத்து, இல்லாத ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கியவர்.

சட்டம் அவரை கொலையாளி என்று சொன்னாலும், ஊர் மக்கள் அவரை "கொடையாளி" என்று தான் சொல்லுகிறார்கள்.

பீடி, சிகரட், மது என எந்தப்பழக்கமும் இல்லாதவர்.தனி மனித ஒழுக்கத்திலும் தூய்மையானவர்.

#அவன்_இருக்கும்போது:

பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலே ஒரு கன்னட காக்கை கூட பறக்க முடியாது

அவன் இருக்கும்போது, கர்நாடகவில் இருந்து காவேரி ஆற்றங்கரைப் பக்கம் குளிக்கக்கூட யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை..!

தமிழகத்தில் கால் வைக்க வாட்டாள் நாகராஜுக்கு கூட தைரியம் வந்திருக்காது..

அவன் இருந்திருந்தால், ஒகேனக்கல் நீர் பிரச்சனை இங்கு வந்திருக்காது.
இப்போது இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை வீரப்பனுக்கு முன், வீரப்பனுக்கு பின் என்று பிரித்துவிடலாம்.
அந்த அளவிற்கு மலைகளின் வளத்தையும், காடுகளின் வளத்தையும் கட்டிக் காத்தவன்.

இப்போதெல்லாம் ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவிட்டன. வீரப்பன் இருக்கும்வரை ரியல் எஸ்டேட் முதலைகள் இங்கு முதலீடு செய்யத் தயங்கின. அப்போதெல்லாம் காடுகள் - காடுகளாகவே இருந்தன. ஆனால் அவன் இல்லாதபோது தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலையில் தான் உள்ளது.

#தேடுதல்_வேட்டை:

ஜெயலலிதா அரசும், கருணாநிதி அரசும் வீரப்பனைத் தேடிப்பிடிப்பதில் ஆர்வமாக இருந்தார்களா? இல்லையா? என்பதெல்லாம் அடுத்தபட்சம்.. இனால், வீரப்பனுக்கும், பல அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் தொடர்பு இருந்தது என்பது உண்மையே.!

இதை நான் கூறவில்லை, ஐயா.பழநெடுமாறன் அவர்கள் கூறியது. அவரிடம் யார் சொன்னது என்றெல்லாம் கேட்கவேண்டாம். பழநெடுமாறன் அவர்கள் வீரப்பனை சந்திக்க சென்றபோது வீரப்பனே அவரிடம் சொன்னது தான் இது.!

தமிழ்நாடு, கர்நாடகா என இரு மாநில அதிரடிப்படைகளும் சேர்ந்து "வன அரசனாக" விளங்கிய வீரப்பனை பிடிக்க கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு தேடுதல் வேட்டையை நடத்தின.

ஆனால் அவரைத் தொட முடியவில்லை.இவ்வளவு ஏன்? கிட்டே நெருங்கக்கூட முடியவில்லை எனலாம்.

வீரப்பனை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 5கோடி சன்மானம் என அறிவித்தும் கூட, ம்..ஹும்.. பருப்பு வேகவில்லை...

"வீரப்பன் தேடுதல் வேட்டை" என்ற பெயரில் அவரது கிராமத்திற்குள் புகுந்து அப்பாவி மலைவாழ் மக்களை அதிரடிப்படையினர் அடித்து துன்புறுத்தினர். நாசமாக்கினர். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த காவல்துறை மீது ஊர் மக்கள் அளித்த புகார்களும் நிராகரிக்கப்படன.

தமிழக வனத்துறை வரலாற்றில் கருப்பு அத்தியாயமாகிப் போன "வாச்சாத்தி பலாத்கார சம்பவமும்" இந்த கால கட்டத்தில் தான் நிகழ்ந்தது.

#மரணமும்_மர்மங்களும்:

தமிழினம் வீழ்ச்சியுற்றதற்கான வரலாற்றை எடுத்துப் பார்த்தோமேயானால், "துரோகம், சூழ்ச்சி" என்ற வார்த்தைகளுக்கு அதில் பெரும் பங்கு இருக்கும்..

18.10.2004 அன்று (ஜெயலலிதா ஆட்சியின் போது) அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் அவர்கள் வீரப்பனை சுட்டுக் கொன்றுவிட்டதாக அறிவித்தார்.

அவரின் தலைமையிலான குழுவினருக்கு தமிழக அரசு பரிசுகளையும், பதக்கங்களையும், பதவி உயர்வினையும் வாரி இறைத்தது.

வீரப்பன் இறந்ததென்னமோ உண்மைதான். ஆனால், அவரை சுட்டுக் கொன்றார்களா? இல்லை கொன்று விட்டு சுட்டார்களா? என்பது தான் கேள்விக்குறி........

வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான போலீசாரின் முன்னுக்குப் பின் முரணான வழக்கமான கட்டுக்கதைகளை மக்களும் நம்ப மறுத்தனர்..

போலீசாரின் அறிக்கை என்னவென்றால்,

16.10.2004 அன்றிரவு தருமபுரி மாவட்டம் பச்சனம்பட்டி என்ற ஊருக்கு அருகில் இலங்கைக்கு தப்பிச் செல்லும் நோக்கிலே ஆம்புலன்ஸ் வேனில் வந்த வீரப்பனை Sketch எல்லாம் போட்டு வளைத்துப் பிடித்ததாகவும், இதற்காக  கஷ்டப்பட்டு, கருமாயப்பட்டு, சாப்பிடாமல், இரவு பகல் பாராது கண் விழித்து சுட்டு வீழ்த்தியதாகவும் அதிரடிப்படைத்தலைவர் விசயக்குமார் அறிக்கையை தாக்கல் செய்தார்.

விசாரணைக்குழு:

வீரப்பன் மரணம் குறித்த உண்மைத் தன்மையை ஆராய 16பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக் குழுவானது வீரப்பனின் சொந்த ஊர், உறவினர்கள், பொதுமக்கள், சுடப்பட்டதாக சொல்லப்பட்ட இடம், உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதில்,

வீரப்பனோடு கூடவே இருந்த ஒருவன் தான் அவரைக்காட்டிக் கொடுத்து உளவாளியாக இருந்து இந்த துரோக வரலாற்றை அரங்கேற்றியுள்ளான் எனத் தெரியவருகிறது.

அதிரடிப்படை ஆள்காட்டி ஒருவரின் மனைவியும், மற்றுமொரு உறவுக்கார பெண்ணின் மூலமாக மோரில் விசம் கலந்து கொடுத்து கொன்றதாகவும் அறிக்கையில் சமர்ப்பித்தனர்.

ஆனால் காவல்துறையினர் வீரப்பனை 18.10.2004ல் இரவு 7.30 மணிக்கு சுட்டுக்கொன்றதாக அதிரடிப்படையினர் அறிக்கையை சமர்பித்தனர்..

இதுபோன்ற இவரது மரணம் குறித்த சந்தேகங்கள் இன்னும் தீர்க்கப்படாமலே தான் உள்ளது..

எது எப்படியோ, ஆனால் வீரப்பன் சூழ்ச்சியால்தான் கொல்லப்பட்டார் என்பது மட்டும் உண்மை.

#அரசியல்_மர்மங்கள்:

வீரப்பன் தந்தங்களை கடத்தினான், சந்தனமரங்களை கடத்தினான், அவன் குற்றவாளியென்றால், அவர் கடத்திய பொருட்களை யாரிடம் வர்த்தகம் செய்தார்?

அவர் விற்ற பொருட்களை வாங்கியவர்கள் யார்..?
கடத்தி விற்றவன் குற்றவாளி என்று சுட்டுக்கொல்லப்பட்டது நியாயமென்றால், அதே நியாயப்படி வாங்கியவர்களையும் சுட்டுக் கொல்ல அரசு தவறியது ஏன்? (தயங்கியது ஏன்)

இரு மாநில அரசின் கண்ணில் படாமல், வனத்துறை அதிகாரிகளின் கண்ணில் படாமல், காவல்துறையினரின் கண்ணில் படாமல், எப்படி இவரால் பலகோடி மதிப்புள்ள சந்தனமரங்களை கடத்தியிருக்க முடியும்?

விற்றவன் காட்டிற்குள் இருந்தான்..
வாங்கியவன் எங்கிருந்தான்?
அப்படி அவர் கோடி கோடியாக சம்பாதித்த பணத்தை எந்த வங்கியில் சேமித்து வைத்திருந்தார்?

வீரப்பன் கொள்ளையடித்து கட்டி வைத்த பங்களாக்கள் எத்தனை? பெற்ற பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்த சொத்துகள் எத்தனை?

அப்படி அவர் கோடி கோடியாக கொள்ளையடித்த சொத்துக்களை சேர்த்தார் என்றால், அந்த சொத்துக்களை அரசுத்துறை ஏன் முடக்கவில்லை?
பதில் உண்டா?

இதுபோன்ற சந்தேகங்களுக்கு எந்த ஆதாரங்களையும், அரசு நிர்வாகமோ, அதிரடிப்படையினரோ, வனத்துறையினரோ, வருமான வரித்துறையினரோ, இதுவரை சமர்ப்பிக்கவிலையே ஏன்?

அவ்வளவும் அரசியல்…. (அவர்கள் மாட்டிக்கொள்வார்கள்)

அவர் குற்றவாளியாக இருக்கலாம், வனச் சொத்துக்களை அழித்தார் என்று குற்றம் சாட்டலாம். அவர் குற்றவாளியென்றால், மலையின் இயற்கை வளத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்துச் சுங்கம் தோண்டிய "வேதாந்தா" குற்றவாளி இல்லையா? அதன் இயக்குநர்களில் ஒருவரான ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா?

எட்டுவழிச்சாலை என்ற பெயரில் ஒட்டுமொத்த காடுகளையும் காசை வாங்கிக்கொண்டு காண்ட்ராக்ட் காரனுக்கு தாரை வார்த்து அழித்துக் கட்டிய ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றவாளி இல்லையா??

"வீரம்" என்பது என்ன தெரியுமா?

மோரில் ஒருவனை விசம் வைத்துக் கொன்று விட்டு பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, அந்தப் பிணத்தோடு போட்டோவிற்கு போஸ் கொடுப்பதல்ல வீரம்.

ஒற்றை ஆளாய் 34 வருடங்களாக இரண்டு மாநில அரசுக்கும், காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் படைக்கும் "சிம்ம சொப்பனமாக" விளங்கி, அனைவரது கண்களிலும் விரலை விட்டு ஆட்டி, மலைவாழ் மக்களின் கதாநாயகனாக வாழ்ந்து காட்டினானே அதுதான் "வீரம்"...

தமிழர்கள் என்றைக்கும் வீரத்தில் சளைத்தவர்கள் இல்லை, எதிரியால் வீழ்ந்ததுமில்லை..
துரோகத்தாலும், சூழ்ச்சியாலும் வீழ்ந்தான் என்பதே வரலாறு..

"தனக்காக வாழ்பவன் மனிதனாகிறான்,
பிறருக்காக வாழ்பவன் இறைவனாகிறான்".

"வீரம் இங்கே விதைக்கப்பட்டுள்ளது"


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...