முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“யோவ் வெளிநாடு போறது இருக்கட்டும் நான் முதல்ல கக்கா போகணும்.

Subbiahpatturajan


“யோவ் வெளிநாடு போறது இருக்கட்டும் நான் முதல்ல கக்கா போகணும்.




அடேங்கப்பா.. என்னம்மா அனுபவித்து எழுதியிருக்கார் இந்த பதிவாளர். பிரமாதம். சிரித்து சிரித்து வயிறே புண்ணாகிவிட்டது..!

___

நம்மைப் போலவே கார்ப்பரேட் விளம்பரத்தால் கடுப்பான யாரோ ஒருவர் தான் இதை எழுதியிருக்க வேண்டும். சிரிச்சு சிரிச்சு வாயே வலிக்குது..

உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருப்பதை போன்ற விளம்பரங்கள் நிஜம்தானா?

காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி வைத்த செட் அப் மருத்துவர் “உங்கள் பல்லிடுக்கில் பதுங்கி இருக்கும் கிருமிகளை உங்கள் பற்பசை கொல்லுமா? எங்கள் பற்பசை உபயோகித்தால் பனிரெண்டு மணிநேரம் கிருமிகளிடமிருந்து உங்கள் பல்லுக்கும் வாய்க்கும் பாதுகாப்பு” என்று பாடம் நடத்துகிறார்.

விட்டால் வீடுவீடாக வந்து காலங்காத்தாலே பல் துலக்கி விட்டு ஹோம்டெலிவரி என்று சர்வீஸ் சார்ஜும் போட்டு பில்லை தலையில் கட்டுவார்கள் போல இருக்கு.

ரெண்டுக்கு போகலாம் என்று கக்கூசுக்கு போனால் உட்காராதீங்க உட்காராதீங்க என்று அங்கே ஒரு மாஜி நடிகர் வலக்கையில் துடைப்பமும் இடக்கையில் கிருமிநாசினியுமாக உள்ளே நுழைகிறார்.

“அட நிம்மதியா காலைகடன் கழிக்க கூட விடமாட்டீங்களா என்றால் உங்க டாய்லெட்டு 100 % சுத்தமா இருக்கா?” என்கிறார் “அட வாரத்துக்கு ஒருக்கா கழுவி வுடுறேன் நீங்க போங்க பாஸ்” என்றால் கையிலிருக்கும் பூதக்கண்ணாடியால் கக்கூசை ஆராய்ச்சி செய்கிறார். “சார் இது போதவே போதாது எங்க டாய்லட் கிளீனர யூஸ் பண்ணினீங் கன்னா கிருமிகள் எல்லாம் செத்துரும் நாள் முழுக்க டாய்லட் நல்லா இருக்கும்” என்கிறார்.

“யோவ் நான் என்னய்யா நாள் முழுக்க டாய்லட்லயா குடித்தனம் நடதுறேன் போய்யா” என்றால் “சார் ஸ்மார்ட் டாய்லட் ஸ்மாட்டஸ்ட் டாய்லட்டர்” என்கிற கான்ட்டெஸ்ட்ல வின் பண்னினா நீங்க வெளிநாடு போகலாம்” என்றபடி பாட்டிலுடன் கூப்பனை நீட்டுகிறார்.

“யோவ் வெளிநாடு போறது இருக்கட்டும் நான் முதல்ல கக்கா போகணும். நீ முதலில வெளியில போய்யா” என்று கதவை சாத்தவேண்டி இருந்திச்சு.

ஒரு வழியா வெளிய வந்தா ஒருத்தன் ஓடி வந்து கைய புடிச்சு ஒரு மைக்ரோஸ்கோப்புல வச்சிட்டு சொல்றான் “சார் பாருங்க உங்க உள்ளங்கை முழுக்க ஆயிரக்கணக்கான கிருமிகள்” “யோவ் நீ யாருய்யா. நான் நல்லா கைய கழுவிட்டு தான்யா வந்திருக்கிறேன்” என்று நான் டென்ஷனாகலாம் என்று பார்த்தால் பதிலுக்கு அவர் டென்ஷன் ஆகிறார்.

“சார் நீங்க வெறும் தண்னீல கைய கழுவினீங்க எங்க ஹேண்ட் வாஷ் எக்ஸ்பெர்ட் போட்டு கழுவினீங்களா. இல்ல இல்ல அப்போ எப்படி சார் உங்க கையில கிருமிகள் எல்லாம் சாகும்” என்று பீதியூட்டும் புன்னகையுடன் பார்க்கிறார்.

வேண்டாம் விட்டுடுங்க என்பதை கேக்காமல் உள்ளங்கையில் ரெண்டு சொட்டை வைத்து இப்போ நல்லா கழுவுங்க சார் என்கிறார். “யோவ் என்னமோ நான் பொறந்ததிலேருந்தே கையை கக்கூசுக்குள்ள விட்டுட்டு திரிஞ்ச மாதிரியில்ல இருக்கு உன் பேச்சு ஆளவிடுப்பா” என்று குளியலறைக்குள் நுழைந்தால்...

அங்கே ஒரு அம்மா கையில் சோப்புடன் உங்க ஸ்கின்னோட பத்து பிரச்சனைகளுக்கு இது தான் தீர்வு என்று சோப்பை மூக்குக்கு அருகே நீட்டுகிறார்.

“இந்தாம்மா இந்த பத்து, படை இதெல்லாம் எனக்கு பிரச்சினையே இல்ல முதல்ல ஆம்பள குளிக்கிற இடத்துல உனக்கென்னமா வேலை வெளிய போம்மா” என்கிறேன்.

“சார் அப்போ எங்க சோப்ப போடுங்க, உங்க அக்குள்ல இருந்து தொப்புள் வரைக்கும் கிருமிகளை கழுவிக் களைய இது இருபத்தி நாலுமணி நேர கேரண்டி” என்று அண்டாவுக்குப் பின்னாலிருந்து எழுகிறாள் இன்னொரு பெண்.

“உட்டா உலகத்துல இருக்கிற கிருமியெல்லாம் என் உடம்ப குத்தகைக்கு எடுத்து குடித்தனம் பண்றதா சொல்வீங்க போல” ன்னு வெளிய தொரத்திட்டு குளிச்சு முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சு.

நிம்மதியா சப்பிடலாம்னு ஒரு பிடி சோத்த வாய்க்கு கொண்டு போற நேரத்துல பொருத்தமே இல்லாம வேலைக்காரி வேஷம் போட்ட ஒரு விளம்பர மாடல் வந்து கைய பிடிச்சு சாப்பிடறத நிறுத்துறா.

பதட்டத்தோட பரபரக்கிற என் மனைவிகிட்ட கேக்குறா “பாத்திரம் கழுவும் போது பாத்து கழுவினீங்களா”. என் மனைவியோ செய்யக்கூடாத குற்றத்தை செய்து விட்டது போல திருதிருவென்று முழிக்கும் கணத்தில், “உங்க பாத்திரங்கள் எங்களோட நீமும் எலுமிச்சையுமுள்ள டிஷ் வாஷ் வச்சி கழுவினா தான் கிருமிகளெல்லாம் சாகும். பாத்திரமும் பளபளக்கும்” என்கிறாள்.

“அட நிம்மதியா சப்பிடவும் விடமாட்டீங்களா” என்று எழுந்து தண்ணி குடிக்கப்போனால் அங்கேயும் விடுறதாயில்லை.

ஜன்னல் வழியாக எட்டி பார்த்து எகத்தாளமாய் சிரித்து விட்டு ஒருவன் சொல்கிறான் “உங்க தண்ணி சுத்தமானதா? எங்க தண்ணி 100% ஜெர்ம்ஸ் ஃப்ரீ, அடிஷனலா இரும்பு சத்தும் சேர்த்திருக்கோம்”

“யோவ் என்னைய்யா தண்ணியையே நீங்க தான் கண்டு பிடிச்ச மாதிரி பேசுறிங்க” என்றால் “இரும்பு சத்து சார் இரும்பு சத்து” என்று பாட்டிலை வாய்க்கு நேராக நீட்டி ஆட்டுகிறான். “இரும்பு சத்து வேணும்னா நான் இந்த ஜன்னல் கம்பியையே கடிச்சு சாப்பிட்டுகிறேன் நீ கிளம்புப்பா” என்று துரத்தி விட்டு திரும்பி சட்டையை போட்டுட்டு கிளம்பலாம் என்றால்,

அங்கேயும் ஒரு எக்ஸ்பெர்ட் கையில் பாட்டிலுடன் நிக்கிறான். அவன் சொல்லும் முன்பே நான் முந்தி கொள்கிறேன் ”யோவ் இது சத்தியமா சுத்தமா துவச்ச சட்டைதான்யா” என்கிறேன்.

அவனோ சிரித்தபடி “துவச்சீங்க ஆனா எங்களோட இந்த ப்ராடக்ட்ல ரெண்டு சொட்டு உட்டு துவச்சீங்கன்னா துணியில ஒரு கிருமி கூட ஒட்டிக்கிட்டு இருக்காது” எனக்கு சட்டையே வேண்டாம் என்று ஹேங்கரை தூக்கி எறிந்து விட்டு ஹாலிற்கு வந்தேன்.

”சார் காலை கொஞ்சம் தூக்குங்க” என்று தரையை தண்ணீர் விட்டு துடைக்கிறாள் இன்னொரு விளம்பர பெண் “என்னம்மா என்ன ஆச்சு” என்றால் தரையெல்லாம் கிருமிகள் சார்.

எங்க ஃப்ளோர் கிளீனர் கண்ணுக்கு தெரியாத கிருமியை எல்லாம் அழிச்சு உங்க தரையை சுத்தம் பண்ணிடும். காலை தூக்குங்க சார்” என்றபடி தரையில் ஒரு தேய்ப்பு தேய்க்கிறாள்.

”கண்ணுக்கு தெரியாத கிருமி எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியுது” என்றால் “டெக்னாலஜி சார் டெக்னாலஜி” என்கிறாள்.




காலையில எழுந்து, கக்கூஸ் போனா கிருமி, கைய கழுவினா கிருமி, பல்லை தேய்ச்சாலும் கிருமி, குளிச்சாலும் கிருமி, நடந்தா காலில கிருமி, நடக்குற தரையிலும் கிருமி, உட்காந்தா கிருமி, உட்காருற இடத்திலயும் கிருமி, முகத்தை தொடச்சா கிருமி, சாப்பிட்டா கிருமி, சாப்பிடுற தட்டிலயும் கிருமி, தண்ணி குடிச்சா கிருமி, வெளியில போனா கிருமி, உள்ள வந்தா கிருமி, மண்டைல கிருமி, தொண்டையில கிருமி, வாயில கிருமி, வாசலில கிருமி, துணியில கிருமி, தும்மினா கிருமி, தூங்கினா கட்டில்ல கிருமி, தூங்கி எழுந்தா மறுபடியும் பல்லில கிருமி என்று தெனாலி கமல் மாதிரி தினமும் பொலம்ப வச்சிடுறானுங்க.

“ஏண்டா இந்த பூமியில கிருமி நாசினிகள் வரும் முன்னாடியே மனுஷங்க வாழ்ந்திட்டுதானே இருக்கானுங்க. மனுஷங்க வரும் முன்னாடியே கிருமிகளும் வாழ்ந்திகிட்டு இருந்திருக்கு.

அது பாட்டுக்கு இருந்திட்டு போகட்டும். இப்படி உலகததையே கழுவி தொடச்சி கிருமிகள அழிச்சி பளபளன்னு வச்சிட்டு பவுடர் போட்டு அழகு பாக்கவா போறீங்க?

ஓடிப்போயிடுங்க என்றபடி மனைவியைப் பார்த்தா.. அவள் சொன்னாள் “கடைசியா ஒரு உண்மை தெரிஞ்சு போச்சு. இந்த டிவி பொட்டியிலிருந்து தான் எல்லா கிருமிகளும் இங்கே வீட்டுக்குள்ள வருது. முதல்ல அத அணைச்சிடுங்க” என்கிறாள். நான் டிவியை அணைத்து விட்டேன்.

அதிலிருந்து எங்கள் வீட்டுக்குள் கிருமிகள் இருக்கலாம். ஆனால் வியாபாரக்கிருமிகள் இல்லை.

இப்போதான் நானும் என் மனைவியும், கிருமிகளும், கொஞ்சம் நிம்மதியா இருக்கிறோம் என்கிறார் ஒரு சாமானியன்.
(படித்ததில் பிடித்தது)


கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெயோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. "யாதும் ஊரே யாவரும் கேளிர்...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்

மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் கவனத்திற்கு...

Subbiahpatturajan மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ள பயணிகள் கவனத்திற்கு... இப்போது வனத்துறையினர் சார்பில் மாஞ்சோலை சென்று வர அனுமதி அளித்துள்ளனர் . விருப்பமுள்ளவர்கள் சென்று வரலாம். Manjolai நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம். சிறப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை. எப்படி போகலாம்? திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி , மணிமுத்தாறு அணை, Manimutharu அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.  அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகள

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவ

Did you know ...கேள்விக்குள் பதில்

Subbiahpatturajan #Didyouknow #Didyouknow உங்களால் கீழே உள்ள  எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது என சோதிக்கலாமா? ஒரு வினாவிற்கு  10 இமைப்பொழுதுகள் மட்டுமே. 1. நியூமேரோ யூனோ என்றால் என்ன? 2. ஒரு டூயட்டில் எத்தனை பாடகர்கள்? 3. டேபிள் ஸ்பூன் எத்தனை டீஸ்பூன் ? 4. இந்து புராணங்களில் எத்தனை வேதங்கள் உள்ளன? 6. இந்தியாவை விட எத்தனை நாடுகளில் பெரிய பரப்பளவு உள்ளது? 7. நீரின் Ph மதிப்பு என்ன? 8. சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன? 10. எத்தனை மில்லிமீட்டர்கள் ஒரு சென்டிமீட்டரை உருவாக்குகின்றன? 11. ஒரு கால்பந்து அணியில் எத்தனை வீரர்கள் உள்ளனர்? 12. ஒரு அடி எத்தனை அங்குலங்கள்? 15. ஒரு முறை வாகன வரி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்? 16. விண்கல சேவலில் எத்தனை இறகுகள் உள்ளன? 17. இந்திய நாணயத்தில் எத்தனை மொழிகள் அச்சிடப்படுகின்றன? 18. மகாபாரதத்தில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன? 19. 2010 இல் இந்தியாவில் எத்தனையாவது காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்பட்டது? 20. டி -20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எத்தனை ஓவர்கள் உள்ளன? 21. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி எத்தனை ஆண்டுகள் கழித்தார்? 23. மனித உ

*குண்டக்க மண்டக்க : விளக்கம்*

Subbiahpatturajan *சூடு சொரனை* : இருந்தால்... விளக்கம்.... *🔷🔶இரட்டை சொற்களுக்கான விளக்கம்* .... *குண்டக்க மண்டக்க :* 🔸 *குண்டக்க* : இடுப்புப்பகுதி, 🔸 *மண்டக்க* : தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்... *அந்தி, சந்தி:* 🔸 *அந்தி* : . மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.. 🔸 *சந்தி* : . இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.. *அக்குவேர்,ஆணிவேர்:* 🔸 *அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.. 🔸 *ஆணி வேர்:* செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்... *அரை குறை:* 🔸 *அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.. 🔸 *குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது... *அக்கம், பக்கம்:* 🔸 *அக்கம்* : தன் வீடும், தான் இருக்கும் இடமும்... 🔸 *பக்கம்* : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்... *கார சாரம் :* 🔸 *காரம்* : உறைப்பு சுவையுள்ளது... 🔸 *சாரம்* : காரம் சார்ந்த சுவையுள்ளது... *இச

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!?

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!? அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்...!! மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!! எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. ■ தேனீ,குளவிகொட்டியதற்கு.. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்... ■ பூரான்கடிக்கு... பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்... ■ பூனை கடித்துவிட்டால்.. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

Subbiahpatturajan ✍🏻‌  ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ* *என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பு கறிகள், மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம். இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் முக்கியமான ஒன்று. இதற்கு ‘அன்னாசி மொக்கு’, தக்கோலம், நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும் உண்டு. இது வெறும் மணத்துக்காக மட்டுமல்லாமல் உணவை அழகுபடுத்துவதற்க்கும், மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ பூர்வீகம்* *அண்ணாச்சி பூ சீனாவை பூர்வீகமாக கொண்டது. சீன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள். இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் பரவி சென்று இந்தியாவில் தற்போது இது ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறி உள்ளது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *நோய் எதிர்ப்பு சக்தி* *அதிகரிக்கும்* *அண்ணாச்சி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.* *இதில் பாக்டீரியா வைரஸ், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளது. இந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்கள

அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு...

Subbiahpatturajan அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு... *important modified govt G.o. s* தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள் (1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278) (2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975 ) (3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்- 27.9.1974 ) (4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, ந