முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாம் எல்லோரும் *சாதாரண மனிதர்களா...?!

Subbiahpatturajan


😱😳😀🙃😥💐💐*அழகான வரிகள் பத்து*.



1} அறிமுகம் இல்லாதவர்களின்
பார்வையில்..
நாம் எல்லோரும்
 *சாதாரண மனிதர்கள்* 🏹

2} பொறாமைக்காரரின்
பார்வையில்..
நாம் அனைவரும்
 *அகந்தையாளர்கள்* 🏹
3} நம்மைப் புரிந்து
 கொண்டோரின்
 பார்வையில்.. நாம்
 *அற்புதமானவர்கள்* 🏹
4} நேசிப்போரின் பார்வையில்.. நாம்
*தனிச் சிறப்பானவர்கள்* 🏹
5} காழ்ப்புனர்ச்சி
 கொண்டவர்களின்
 பார்வையில்..நாம் 
*கெட்டவர்கள்* 🏹
7}  சுயநலவாதிகளின்
 பார்வையில்
நாம்...
*ஒழிக்கப்பட வேண்டியவர்கள்* 🏹


8) சந்தர்ப்பவாதிகளின்
 பார்வையில் நாம்
*ஏமாளிகள்* 🏹
9} எதையும் புரிந்து
 கொள்ளாதவர்கள்
 பார்வையில் 
நாம் 
*குழப்பவாதிகள்* 🏹
10} கோழைகளின்
 பார்வையில்
நாம் *அவசரக்குடுக்கைகள்* 🏹
✅  *நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்*
*ஒரு தனியான பார்வை உண்டு.* 
🕊 ஆதலால் - 
பிறரிடம்
உங்கள் பிம்பத்தை
 அழகாக்கிக் காட்ட
 *சிரமப்படாதீர்கள்* 🏹


🥁 மற்றவர்கள் உங்களை
புரிந்து கொள்ளாவிட்டாலும்......
*நீங்கள் நீங்களாகவே இருங்கள்*
🥁 *மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...*
🥁 இந்த மனிதர்களிடம்
 *எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!*
*அடைய வேண்டியதை*
*விட்டு விடாதீர்கள்...!* 
*எப்போதும் நேர்மையும்*
 *தைரியமும்  உங்கள்*
 *சொத்தாக இருக்கட்டும்* 👍
🎻 *வாழ்வோம்..*
*பிறரையும் வாழ வைப்போம்.*
 *நீ . . .நீயாக இரு !*
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்ய வேண்டியதை
தங்கம் கொண்டு
செய்ய முடியாது . . .
அதனால்
தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
*எனவே நீ . . .நீயாக இரு !*
கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால்
கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
*நீ . . .நீயாக இரு !*
காகம் மயில் போல்
அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ
காக்கைக்குத்தான் !
*நீ . . .நீயாக இரு !*
நாய்க்கு சிங்கம் போல்
வீரமில்லை தான் . . .
ஆனாலும்
நன்றி என்னவோ
நாய்க்குத் தான் !
*நீ . . .நீயாக இரு !*
பட்டு போல் பருத்தி
இல்லை தான் . . .
ஆனாலும்
வெயிலுக்கு சுகமென்னவோ
 பருத்திதான் !


*நீ . . .நீயாக இரு !*
ஆகாசம் போல் பூமி
 இல்லைதான் . . .
ஆனாலும்
 தாங்குவதற்கு இருப்பது
பூமிதான் !
*நீ . . .நீயாக இரு !*
நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால்
 ஒவ்வொன்றும்
 அற்புதம்தான் !
*எனவே நீ . . .நீயாக இரு !*
அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாவம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து
 கொண்டே வா . . .
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல்
வாழ ஆசைப்படும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்,
உன்னை உதாரணமாகக்
கொள்ளும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக
 ஏற்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
அடுத்தவனுக்காக மாறி மாறி
 உனக்காக உள்ளோரை இழக்காதே ! ! !
*நீ . .நீயாக இரு !*
*நீ . .நீயாகவே இரு !*
*வாழ்க வையகம்*
🙏🙏🙏🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...