முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆண்மகனுக்கு நிறைய விஷயம் வாழ்க்கையின் கடைசி வரைக்கும் புரியாது.

Subbiahpatturajan

யோசிக்க வைக்கும் #பதிவு:

ஆண்மகனுக்கு நிறைய விஷயம் வாழ்க்கையின் கடைசி வரைக்கும் புரியாது.


அதில் ஒரு விஷயம்  நினைத்த நேரம்
“சாப்பாடு போடு” என்று வீட்டுப் பெண்களை உத்தரவிடுவதால் அவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது.

பெண் காலையில் தோசை சுட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பாள்.

கணவன் ஏதோ ஒரு வேலையில் இருப்பான். மனைவி சாப்பிடுங்க என்று சொன்னால்

“ இரு இரு இந்த வேலையை முடிச்சிட்டு வந்திர்ரேன். இந்த புரோகிராம் முடியட்டுமே, சாப்பிடுற மூட் இல்ல. அரை மணி நேரம் போகட்டுமே” என்பான்.

மறுபடி அரை மணி நேரம் பிறகு கல்லை வைத்து சூடாகும் வரை காத்திருந்து மாவை ஊற்றி, தோசை வேகும் வரை காத்திருந்து, அதைத் தட்டில் போட்டு சட்னி எல்லாம் ஊற்றி அவனுக்கு கொடுக்க வேண்டும்.

அனைவருக்கும் தோசை சுட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே ஐந்து நிமிடம் நேரமெடுத்துக் கூடவே சாப்பிட்டிருந்தால் பெண்ணுக்கு எளிதாக இருந்திருக்கும்.

ஆனால் இது பல ஆண்களுக்குத் தெரியாது.

அதுவும் இளைஞர்களாக இருக்கும் ஆண்களுக்கு சுத்தமாக இந்த அறிவு கிடையாது.

சொந்தக்காரர்கள் வீட்டில் இருக்கும் போதும் இப்படிச் செய்வார்கள். மதியம் இரண்டரை மணிக்கு அந்த குடும்பத்தலைவி வேலை எல்லாம் செய்து கொஞ்சம் படுத்து ஒய்வு எடுக்கலாம் என்று போகும்போது

“சித்தி சாப்பாடு போடுங்க. பெரியம்மா சாப்பாடு போடுங்க” என்று சொல்லும் இளைஞர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

அவர்கள் சொன்ன உடன் சித்தியோ,
பெரியம்மாவோ, அத்தையோ தட்டைக் கழுவி அதில் சோற்றைப் போட்டு குழம்பை ஊற்றிக் கொடுக்க வேண்டும். அவன்கள் சாப்பிடும் வரை காத்திருக்க வேண்டும்.

மறுபடி சோறு வேண்டுமா என்று கேட்க வேண்டும். இந்தப் பத்தியை படிக்கும் பல இளைஞர்கள் இந்த நேரத்தில் கூட இப்படி உங்களை அம்மாவையோ, சித்தியையோ, அத்தையையோ, அக்காவையோ கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கலாம்.

இதை நீங்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. எப்படிசு செய்தாலும் பெண்களுக்கு இது கொடுமை தான்.

உங்கள் வீட்டிலேயே கூட உணவு சமைப்பதற்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் கூட உணவு பரிமாறுவதற்கு உதவி செய்யுங்கள்.

கொஞ்சம் சப்பாத்திகள் இருக்கிறது. கொஞ்சம் குருமா இருக்கிறது.

நாலு பேர் இருக்கிறார்கள்.

அதில் மூன்று பேர் ஒரே சமயம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள் என்றால் நாலாவது ஆளுக்கு குருமா தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

எவ்வளவு குருமா எடுத்து வைக்க வேண்டும் என்று குழப்பம் வரும்.

இருக்கும் குருமாவை நான்காகப் பிரித்து அதில் ஒரு பங்கு என்று வைத்தால் அது மிகக் குறைவாக இருக்கும்.

இது மாதிரி சமயத்தில் நான்காம் ஆளும் வேலையைப் போட்டுவிட்டு மூன்று பேரோடு சேர்ந்தால் இருக்கும் கொஞ்சம் குருமாவை மேனேஜ் பண்ண வசதியாய் இருக்கும்.

ஆனால் இதெல்லாம் பல ஆண்களுக்குத் தெரிவதில்லை.

உணவு பரிமாறுதல் ஒரு மொக்கை வேலை.

அதை அடிக்கடி ரசித்து செய்ய முடியாது.

ஒருவர் சொன்னார்

அவருடைய சொந்தக்காரப் பையன் கல்லூரி மாணவன் இரவு பதினொரு மணிக்கு வந்து ”தோசை சுடுங்க சித்தி” என்றானாம்.

உடனே கணவரும் “ போ போ அவன் தோசை கேக்குறன் சுட்டுக் கொடு” என்றாராம்.

இவர் பையனைப் பார்த்து கேட்டிருக்கிறார்

“ஏண்டா நீ வரேன்னு சொல்லியிருந்தா நான் சுட்டு வைச்சிருப்பேனே” என்றிருக்கிறார்.

அதற்கு அவன் “சித்தி தோசையெல்லாம் அப்ப அப்ப சுட்டு சாப்பிட்டாத் தான் நல்லா இருக்கும். எங்க ஊர்லலாம் அதான் நாங்க பத்தாங்கிளாஸுக்கு முன்னாடியே பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருவோம். கேக்கும் போது சூடா தோசை கிடைக்கும்” என்று சொல்லி ஹா ஹா என்று சிரித்திருக்கிறான்.

இதைக் கேட்ட இவருக்கு அவன் மூஞ்சிலேயே அடிக்க வேண்டும் போல இருந்திருக்கிறது.
சொந்தக்காரப் பையனிடம் என்னத்த கோபப்பட என்று விட்டிருக்கிறார்.

அப்படியே கோபத்தை அடக்கிக் கொண்டு அன்று இரவு முழுவது மன உளைச்சலில் கிடந்திருக்கிறார்.

அந்தப் பையன் வேண்டுமென்றே அதில் எதையும் செய்யவில்லை.

ஆனால் அவன் உள்ளே இருக்கும் புரொகிராமே வீட்டுப் பெண்களின் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதாகத் தான் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

திடீரென்று போய் தோசை கேட்பது அப்பெண்ணை சிரமப்படுத்தும் என்கிற அறிவு அவனுக்கு சுத்தமாக இல்லை.

பொதுவாக இரவு நேரத்தைத் தவிர வேறு எப்போதும் தூங்க மாட்டேன்.

ஒரிரு நிமிடம் கண்ணயர்வது வேறு.

தூங்க வேண்டும் என்று தூங்குவது எனக்குப் பிடிக்காது.

சமையல் செய்யப் பழகும் போது

ஒரு விடுமுறை தினத்தில் சிக்கனும்,
தேங்காய் சாதமும், சிக்கன் ஃப்ரையும்,
திராட்சை ஜூஸும் செய்தேன்.

செய்து சாப்பிட்டுக் கட்டிலில் படுத்தேன்.

அரை மணி நேரம் அசந்து தூங்கி விட்டேன். அவ்வளவு சோர்வு.

சமையல் செய்தால் அவ்வளவு உடல் சோர்வு வரும்.

அப்படி சோர்வாகும் நேரம் எப்படா ஓரிடத்தில் ஒய்வெடுக்க என்று தோன்றும்.

அந்த சமயத்தில் வந்து

”சோறு போடுங்க. நா அப்புறம் சாப்பிடுறேன். எனக்கு ஒரு ஆம்லேட் எடுத்திருங்க. நான் இட்லி தான் சாப்பிடுவேன் என்று தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று வாதாடாதீர்கள்...!

நம் வீட்டு மகாலட்சுமி அடுத்த வீட்டுக்கு போனாலும் இதே நிலைதான் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்...?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...