முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முக்கியமான விஷயம் நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.

சுப்பையாபட்டுராஜன்

ஒரு வேளை.

பழைய பட்டா காரணமாகவே பலர் சிக்கலை சந்திக்கிறாரக்ள் பல்வேறு காரணங்களால் குடும்ப ரீதியாக பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்கு முறையான உட்பிரிவு பட்டா வாங்காமல் இருக்கும். ஒரு வேளை, ஒரு வேளை. ஒரு வேளை, ஒரு வேளை, இல்லை.

சிக்கல் வரும்

அவ்வாறு குறிப்பிட்ட வீடு அல்லது மனை வாங்கப்பட்டிருந்தாலும், பட்டா வி‌ஷயத்தில் எவ்விதமான கால தாமதமும் கூடாது. காரணம், சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிடும் பட்சத்தில் அவர் பெயரில் உள்ள பழைய பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றுவது சிரமமானதாகி விடும். அதன் பிறகு, இறந்தவரது வாரிசுகள் இருப்பின் அவர்களது உதவி தேவைப்படும் நிலையில், பெயர் மாற்றம் செய்வது சிக்கலான வி‌ஷயமாகி விடும். ஆகவே பாகப்பரிவினை மூலம் கிடைத்த ஒரு சொத்துக்கு உரிய உட்பிரிவு பட்டா இருக்கும் நிலையில், அந்த சொத்தை வாங்கும் முடிவை எடுக்கலாம். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு, பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றம் செய்வது சுலபமாகி விடும்.

பட்டா அவசியம் ஏன்

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும். நீங்கள் வாங்கும் இடத்திற்கு உடனே ஆன்லைன் பட்டா வாங்கிவிடுங்கள். ஏனெனில் சிலர் தவறுதலாகவோ; அல்லது வேண்டுமென்றோ அடுத்தவர் நிலங்களையும் பட்டா போடுவது, பத்திரம் போடுவது நடந்து நடக்கிறது. எனவே உங்கள் நிலம் தொடர்பான வருவாய் ஆவணங்களை அவ்வப்போது சரிபார்த்து வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் டவுன்லோடு செய்தும் வைத்துக் கொள்வது நல்லது.

பட்டா தருவது எப்படி

தற்போதுள்ள நிலையில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இருந்து நிலம் கிரையம் பெற்ற விவரங்கள் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் நிலம் கிரையம் பெற்றவர்கள், பட்டா மாறுதலுக்கு உடனடியாக உரிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அதிகாரிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்றனர். அதன்பிறகு சர்வேயர் வந்த அளந்து பார்த்த பின்னர் பட்டா, தாலுகா அலுவலகத்தில் இருந்து வழங்குகிறார்கள்.

ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி

பட்டா பெறுவதற்கு தனியாக 3 பக்க விண்ணப்பப்படிவம் உள்ளது. (இணையத்தில் பதிவிறக்கம் செய்ய www.tn.gov.in/LA/forms) அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதை ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த விண்ணப்பம் www.tn.gov.in/LA/forms என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.
இந்த விண்ணப்பத்தை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். பிறகு பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு சர்வே நம்பர் முழுவதும் வாங்கியிருந்து அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும் பட்டா மாற்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நமக்கு செய்து கொடுக்கப்படவேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.80. தாலுகா அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

எப்படி பெறுவது

விண்ணப்பிக்க தேவைப்பாடு ஆவணங்கள்
விண்ணப்பத்தின் விவரங்கள்
விண்ணப்பதாரர் பெயர்,
தகப்பனார்/கணவர் பெயர்,
இருப்பிட முகவரி,
பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம். அதாவது
மாவட்டம்,
வட்டம்,
கிராமத்தின் பெயர்,
பகுதி எண்,
நகர அளவை எண்/மறுநில அளவை எண்,
உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர்,
தெருவின் பெயர்,
மனைபிரிவு மனை எண்,
போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்.
மனை அங்கீகரிக்கப்பட்டதா,
அங்கீகாரம் இல்லாத மனையா,
என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
பிறகு சொத்து எந்த வகையில் விண்ணபதாரருக்குக் கிடைக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்..

ஆவணங்கள்

சம்பந்தப்பட்ட சொத்தை விண்ணப்பதாரர் அனுபவித்து வருவதற்கான சான்றுகளையும் இணைக்க வேண்டும்.

அதாவது சொத்து வரி ரசீது,
மின் கட்டண அட்டை,
குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை,
குடும்ப அட்டை,
வாக்காளர் அட்டை
பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.

ஆன்லைனில் பட்டா சிட்டா

ஆன்லைனில் பட்டா சிட்டா பெற என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைனில் பட்டா- சிட்டா பெற முதலில் இதற்காக தமிழக அரசு மின்னணு சேவைக்கான இணையதளத்தை eservices.tn.gov.in என்ற முகவரியில் திறக்க வேண்டும். அதில் ஒரு அட்டவணை கிடைக்கும். உங்கள் மாவட்டத்தின் பெயரையும், உங்கள் நிலம் இருக்கும் பகுதி நகரமா, கிராமமா? என்பதையும் அதில் குறிப்பிட்டு, 'சப்மிட்' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அப்போது தரப்படும் அட்டவணையில் உங்கள் நிலம் அமைந்திருக்கும் தாலுகா, வருவாய் கிராமம் ஆகியவற்றை 'க்ளிக்' செய்து தேர்வு செய்யுங்கள். பின்னர் பட்டா எண் அல்லது சர்வே எண்ணை பதிவு செய்யுங்கள். அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் அங்கீகார எண்ணையும் பதிவு செய்து, 'சப்மிட்' கொடுக்கவும்.


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Thank you🙏💕

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...