Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
தமிழ் பேசப் பழகுங்கள்.
குட் என்று சொல்லாதீர்.
“நன்று / நல்லது” என்று சொல்லுங்கள்.
வெரிகுட் என்று சொல்லாதீர்.
“நனி நன்று” என்று சொல்லுங்கள்.
பியூட்டிபுல் என்று சொல்லாதீர்.
“அழகு” என்று சொல்லுங்கள்.
குட்மார்னிங் என்று சொல்லாதீர்.
“வணக்கம்” என்று சொல்லுங்கள்.
குட்டே என்று சொல்லாதீர்.
“நன்னாள்” என்று சொல்லுங்கள்.
குட்நைட் என்று சொல்லாதீர்.
“நல்லிரவு” என்று சொல்லுங்கள்.
சப்போஸ் என்று சொல்லாதீர்.
“ஒருக்கால் / ஒருவேளை” என்று சொல்லுங்கள்.
ஹலோ என்று சொல்லாதீர்.
“வணக்கம்” என்று சொல்லுங்கள்.
*மம்மி, டாடி என்று சொல்லாதீர்.
“அம்மா, அப்பா” என்று சொல்லுங்கள்.
கரெக்ட் என்று சொல்லாதீர்.
“மிகச் சரி” என்று சொல்லுங்கள்.
ஒன், டூ, த்ரீ என்று சொல்லாதீர்.
“ஒன்று, இரண்டு, மூன்று” என்று சொல்லுங்கள்.
லேட்டாயிடுச்சு என்று சொல்லாதீர்.
“காலந்தாழ்ந்திடுச்சு’ என்று சொல்லுங்கள்.
சிம்பிள் என்று சொல்லாதீர்.
“எளிது / எளியது” என்று சொல்லுங்கள்.
மில்க் என்று சொல்லாதீர்.
“பால்” என்று சொல்லுங்கள்.
நம்மையே அறியாமல் நாம் தொடர்ந்து பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைப் பேச்சில் பயன்படுத்தத் தொடங்குங்கள். உங்களிடமிருந்து தோன்றும் சிறு திருத்தத்தால் நம் மொழி மாசு குறையும்.
புவியை நெகிழியிலிருந்து காத்தாக வேண்டிய பெரும்பொறுப்பைப் போன்று தமிழை ஆங்கிலக் கலப்பிலிருந்து காக்க வேண்டிய அரும்பொறுப்பும் நம்மைச் சேர்ந்தது.
இன்றே தொடங்குங்கள். இதைப்போல் இன்னுமுள்ள நூறு நூறு சொற்களைக் கண்டறிந்து களைந்து தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துங்கள்... நன்றி
கருத்துகள்